பல நாள் கஷ்டம் ஒரே நாளில் உங்களை விட்டு போக வேண்டுமா? காக்கைக்கு மனதார இந்த சாதத்தை வையுங்கள் போதும்.

crow
- Advertisement -

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஒரு தீரா கஷ்டம் நிச்சயம் இருக்கும். கஷ்டம் இல்லை என்றால் நாம் கடவுளை நினைக்க மாட்டோம். அது வேறு விஷயம். ஆனால், கஷ்டத்தை கொடுக்கும் அதே கடவுள் தான் அந்த கஷ்டத்தை தீர்ப்பதற்கு உண்டான பரிகாரத்தையும் காண்பித்துக் கொடுப்பான். அப்படி கடவுளே நமக்கு கொடுத்த பரிகாரம் என்று கூட இந்த பரிகாரத்தை வைத்துக் கொள்ளலாம். கஷ்டத்தை கடந்து செல்ல ஒரு சுலபமான சக்தி வாய்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் எந்த ஒரு கஷ்டம் சரியாக வேண்டும் என்று நினைத்து இந்த பரிகாரத்தை செய்தாலும் அந்த கஷ்டம் உடனடியாக ஒரு சில நாட்களிலேயே தீருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

உங்களுக்கு கஷ்டமே இல்லையா? ஏதாவது ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது. தினமும் காகத்திற்கு சாதம் வைக்க கூடிய பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது. பல பேருக்கு இருக்காது. போகட்டும் ஆனால், உங்களுடைய கஷ்டம் தீர இந்த சாதத்தை தினமும் காக்கைக்கு இப்படி வையுங்கள். இதற்கு நமக்கு தேவையான பொருள் இரண்டு தான். பச்சரிசி, கருப்பு உளுந்து.

- Advertisement -

ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 கைப்பிடி பச்சரிசி, 1/2 கைப்பிடி கருப்பு உளுந்தை போட்டு கழுவி விட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு, 2 சிட்டிகை உப்பு போட்டு, மூன்றில் இருந்து நான்கு விசில் வைத்தால் இந்த சாதம் தயாராகிவிடும். இந்த சாதத்தை அப்படியே காகத்திற்கு வைக்க வேண்டும்.

போன போக்கில் பரிகாரம் செய்வது போல செய்யக்கூடாது. ஆத்மார்த்தமாக தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு இந்த சாதத்தை தயார் செய்து முடிந்தால் பூஜை அறையில் வைத்து குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு இந்த சாதத்தைக் கொண்டு போய் மொட்டை மாடியிலோ அல்லது வீட்டிற்கு வெளிப் பக்கத்தில் எந்த இடத்தில் காகம் வருமோ அந்த இடத்தில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான். காகம் வந்து சாப்பிட்டாலும் சரி சாப்பிடவில்லை என்றாலும் சரி. தினமும் இந்த பரிகாரத்தை மனநிறைவோடு செய்துவிட உங்களுடைய தீரா கஷ்டம் சீக்கிரத்தில் தீர்ந்து போகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை காலை நேரத்தில் தான் செய்ய வேண்டும். அதாவது காலை 10 மணிக்கு முன்பாக இதை செய்து விடுங்கள். பரிகாரத்தை செய்து விட்டீர்கள். சாதத்தை காகத்திற்கு வைத்து விட்டீர்கள். ஆனால் காகம் தவிர அந்த சாதத்தை மற்ற உயிரினங்கள் வந்து சாப்பிட்டாலும் தவறு கிடையாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

பச்சரிசிக்கு பதில் புழுங்கல் அரிசியை பயன்படுத்த வேண்டாம். முடிந்தவரை பச்சரிசியை பயன்படுத்தியே இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். ஒரு சிலருடைய வீட்டில் காகத்திற்கு இந்த சாதத்தை வைப்பதற்கு வழியே இருக்காது. அப்பார்ட்மெண்டில் இருப்பார்கள் என்ன செய்வது.

வாரத்தில் ஒரு நாளாவது இந்த சாதத்தை செய்து அதை பசு மாட்டிற்கு கொடுத்து வரலாம். பசுமாடு இருக்கக்கூடிய இடத்திற்கு சென்று இந்த சாதத்தை பசுமாட்டிற்கு வைத்து விடுங்கள். இதுவும் நல்லதொரு பலனை கொடுக்கும். உங்களுக்கு மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை இருந்தால், பின்பற்றி பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -