கறுத்துப் போன வெள்ளி கொலுசை தேய்க்காமலே வெள்ளை ஆக்கலாம்ன்னு சொன்னா நம்பற மாதிரியா இருக்கு. உண்மையாகவே கை வலிக்க தேய்க்காமல் வெள்ளி கொலுசை வெள்ளையாக்கலாங்க. வாங்க அதையும் தெஞ்சிக்கலாம்.

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் எல்லாமே மாறி போனாலும் கூட, காலில் அணியும் கொலுசு, குழந்தைகள் அணியும் தண்டை போன்றவை தங்கத்திலும், பிற உலோகத்திலே வந்து இருந்தாலும், வெள்ளியில் தான் இன்றளவும் அனைவரும் விரும்பி அணிகிறார்கள். அது மட்டும் இன்றி கால் கொலுசை வெள்ளியில் வாங்குவது நல்லது என்று ஒரு சாஸ்திர காரணமும் உண்டு. அப்படி பார்த்து வாங்கும் இந்த வெள்ளி நகை வாங்கிய சில மாதங்கள் அல்ல சில நாட்களிலே ஒரு சில கால்களுக்கு கறுத்து போய் விடும். இதை சரி செய்ய கடைகளில் பாலிஷ் போட கொடுக்கும் போது வெள்ளி பாதி காணாமல் வேறு போய் விடுகிறது. இந்த சிரமங்களை தவிர்க்க இதில் இருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வெள்ளி கொலுசுகளை கடையில் கொடுக்காமல் நீங்களே சுத்தம் செய்து கொள்ளலாம். அதற்கு எளிமையான குறிப்பு இந்த பதிவில் உள்ளது.

இதற்கு சாம்பல் ஒரு ஸ்பூன் தேவைப்படும் சாம்பல் இப்போதெல்லாம் கிடைப்பது அரிது தான் எனவே நீங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் சாம்பிராணி ஏற்றும் போது அதிலிருந்து கிடைக்கும் எரிந்து போன அந்தத் துகளை இதற்கு பயன்படுத்தலாம். இது அனைவருக்கும் கிடைக்கக் கூடியது தான்.

- Advertisement -

இந்த சாம்பிராணி எரிந்த தூள் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதில் நன்றாக புளித்த தயிர் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளுங்கள் இதை இரண்டையும் நன்றாக குழைத்து பேஸ்ட் போல செய்து இதை உங்கள் கறுத்து போன வெள்ளி நகைகளின் மீது தேய்த்து சுத்தம் செய்தால் போதும். புதிதாக வாங்கிய வெள்ளியைப் போலவே அதன் நிறம் அத்தனை பள பளப்பாக மாறிவிடும் பயன்படுத்தி பாருங்கள்.

ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு துணி பவுடர் எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் வீட்டிற்கு உபயோகிக்கும் எந்த துணி பவுடராக இருந்தாலும் சரி, அதில் ஒரு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளுங்கள். இத்துடன் அரை ஸ்பூன் அளவுக்கு பேக்கிங் சோடா இரண்டையும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலக்கி அடுப்பில் வைத்து சூடாக்குங்கள். சூடான பிறகு உங்கள் கொலுசை அதில் போட்டு விடுங்கள். ஒரு நிமிடம் வரை கொதிக்கும் தண்ணீரில் கொலுசு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அதன் பிறகு பாத்திரத்தில் இருந்து தண்ணீரை கீழே கொட்டி விட்டு, கொலுசில் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி சூடு ஆறிய பிறகு எடுத்துப் பாருங்கள். உங்கள் கொலுசில் உள்ள அழுக்கு, கருமை நிறம் அனைத்தும் நீங்கி பளிச்சென்று மாறி இருக்கும். இடுக்குகளில் அழுக்கு இருந்தால் மட்டும் டூத் பிரஷ் வைத்து லேசாக தேய்த்துக் கொள்ளுங்கள். அழுக்கு இல்லை என்றால் விட்டு விடுங்கள். சில கொலுசின் டிசைன் நுணுக்கமாக இருந்தால் அதன் இடுக்கில் கொஞ்சம் அழுக்கு தங்க வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்கலாமே: பத்தே நிமிஷத்தில் தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் எடுக்க சூப்பர் டிரிக்ஸ் இருக்கு. அது எப்படின்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ அதற்கான டிப்ஸ்.

கை வலிக்காமல், தேய்க்காமல் ஈஸியா கொலுசு சுத்தம் பண்ண இதை விட வேற சுலபமான வழி இருக்குமான்னு டவுட்டு தான். இதனால் கொலுசுக்கு எந்த பாதிப்பும் வரத்து என்பது கூடுதல் தகவல். இந்த முறையில் மற்ற வெள்ளி பொருட்களை கூட சுத்தம் செய்யலாம். இது உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்களேன்.

- Advertisement -