இந்தப் பொருட்களை வாங்கி, இப்படி தானம் செய்தாலே போதும். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.

thanam

தானம் என்பது நம்முடைய இந்து சாஸ்திரப்படி நமக்கு புண்ணியத்தை கொடுக்கக்கூடிய ஒரு செயல். இயன்றவரை, நம்மால் எந்த பொருட்களை தானம் செய்ய முடியுமோ, அந்த பொருட்களை வாங்கி அடுத்தவர்களுக்கு கொடுப்பதன் மூலம் நம்முடைய பரம்பரைக்கே புண்ணியம் வந்து சேரும். இதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. அதிலும், சில பொருட்களை சில பேருக்கு தானம் கொடுப்பதால் நம்முடைய வாழ்க்கை பசுமையாக மாறும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் நம்முடைய வாழ்க்கையில் நடக்கவே நடக்காத சில நல்ல காரியங்களைக் கூட, நடத்திக் காட்டக்கூடிய சக்தி இந்த தானத்திற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

vegetable1

உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த மனிதராக மாற, உங்கள் வாழ்க்கைத் தரம் படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்ல, நீங்கள் செய்ய வேண்டிய தானம் என்ன? பசுமையான கீரை வகைகள், பசுமையான காய்கறிகள், பழ வகைகள், இப்படியாக இயற்கையாக விளைந்த, சத்துக்கள் நிறைந்த காய்களை வாங்கி தானம் செய்வது என்பது நமக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒருவேளை சாப்பிடக்கூட முடியாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் ஆரோக்கியத்தில் குறைபாடு உள்ளவர்களுக்கு, குழந்தைகளுக்கு முதியவர்களுக்கு, உங்களால் இயன்ற அளவு காய்கறிகளை வாங்கி தானமாக கொடுங்கள். உண்மையிலேயே கஷ்டப்படுபவர்களுக்கு அந்த தானம் சென்றடைய வேண்டும். இதேபோல் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய நெல்லிக்கனி தானம் செய்வது நன்மை தரும். இந்த நெல்லிக்கனிக்கு தேவலோக கனி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

nelli-maram1

சிறிய அளவில் இருக்கக்கூடிய நெல்லியை, நெல்லிக்காய் என்று சொல்லுவார்கள். பெரிய அளவில் உள்ள நெல்லியை, நெல்லிக்கனி என்று சொல்லுவார்கள். ஆனால் நெல்லிக்காய், என்றுமே கனியாக மாறாது. இருப்பினும் அந்த பெரிய நெல்லிக்கு, நெல்லிக்கனி என்ற சிறப்புமிக்க பெயர் உள்ளது.

இந்த பெரிய அளவில் இருக்கும் நெல்லிக்கனியை தினம்தோறும் எவரொருவர் சாப்பிட்டு வருகிறாரோ, அவர்களுக்கு, நோயால் இறப்பு இல்லை என்றும் நம் சாஸ்திரங்கள் சொல்லியுள்ளது. இயலாதவர்களுக்கு பசுமையான ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறிகளோடு, இந்த நெல்லிக்கனிகளை வாங்கி தானம் கொடுப்பது என்பதும் நமக்குப் பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். குறிப்பாக நம் வீட்டில் இருக்கக் கூடிய வறுமையைப் போக்கும்.

nelli juice

இந்த தானத்தை எத்தனை முறை செய்வது? உங்களுடைய வாழ்க்கையில் தானம் செய்வதை எப்போதுமே கணக்கு வைத்துக் கொள்ளக்கூடாது. செய்த தானத்தை அடுத்தவர்களிடம் சொல்லிக் கொள்ளவும் கூடாது. உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் தானம் செய்யலாம். உங்களுடைய கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் போது, அதிலிருந்து ஒரு பங்கை தானத்திற்காக செலவழிப்பது நன்மை தரும். மாதம்தோறும் 10,000 ரூபாய் வருமானம் கிடைத்தால் கூட அதிலிருந்து மாதத்திற்கு ஒருநாள் 100 ரூபாய்க்கு தானம் செய்வதில் தவறு கிடையாது. மனநிறைவோடு அடுத்தவர்களுக்கு நாம் செய்யக்கூடிய தானம் நம் கர்மவினைகளை குறைக்கும், என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.