இந்த டிப்ஸ் எல்லாம் நீங்க தெரிஞ்சு வச்சுகிட்டா போதும், ஒரு சமையல் பொருளை கூட தூக்கி போட மாட்டிங்க. அதுக்கப்புறம் உங்க கிட்ட வந்து எல்லோரும் கிட்சன் டிப்ஸ் கேப்பாங்க.

- Advertisement -

வீட்டை நிர்வாகிப்பது என்பது ஒரு தனி கலை தான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ஒவ்வொருத்தருக்கும் பிடித்தமானதை செய்து, சிறு சிறு விஷயங்களில் கூட மிகவும் கவனமாகவும், அக்கறையுடனும் செயல்பட வேண்டியதிருக்கும். இத்துடன் பணத்தையும் மிச்சப்படுத்து வேண்டியது மிக அவசியம், இப்படி மிச்சப்படுத்த பொருட்களை வாங்காமல் இருக்க வேண்டியதில்லை, வாங்கிய பொருட்களை வீணாக்காமல் நல்ல முறையில் பயன்படுத்தினாலே போதும். பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது ஒரு நல்ல பழக்கமும் கூட, வீட்டில் பயன்படுத்தும் உணவு பொருட்களில் சிலவற்றை விலை மலிவாக கிடைக்கும் நேரத்தில் வாங்கி வைத்துக் கொள்ள நினைப்போம், ஆனால் அந்த பொருட்கள் சில நாட்களில் அழுகிவிடும் என்பதால் வாங்காமல் விட்டு விடுவோம். இந்த குறிப்பில் உள்ள தகவல் உங்களுக்கு தெரிந்தால், இவைகளை வாங்கி பத்திரப்படுத்துவது கொள்ள உங்களுக்கு உதவிய இருக்கும்.

புதினா இலைகளை எப்படி ஸ்டோர் செய்து வைத்தாலும் இலைகள் அழுகி வாடி போய் விடும். அப்படி வாடாமல் இருக்க கடைகளில் பருப்பு வாங்கிய பிறகு கீழே போடும் எந்த கவரில் புதினாவை போட்டு வைத்தால் 15 நாட்களுக்கு மேலும் புதினா வாடாமல் இருக்கும். இப்படி பயன்படுத்துவதால் விலை மலிவாக கிடைக்கும் போது வாங்கி நீங்கள் ஸ்டோர் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

தேங்காய் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் அதை வீணாக்கி விடாமல், தேங்காய் ஓட்டிலிருந்து நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை ஒரு சில்வர் தூக்கில் போட்டு தேங்காய் முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை மூடி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இதனால் ஒரு மாதம் ஆனால் கூட தேங்காய் கெட்டுப் போகாது அதன் தன்மையும் மாறாது அப்படியே இருக்கும்.

முள்ளங்கி போன்ற நீர்ச்சத்து மிக்க காய்களை வாங்கினால் உடனே செய்து விடுவது நல்லது. இல்லை அதை இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் வைக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் அதன் மேல் இருக்கும் தண்டுப் பகுதியிலும் அடி முனையிலும் நறுக்கிய பிறகு அதை ஒரு பிளாஸ்டிக் பாக்ஸ் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்து விடுங்கள் ஒரு வாரம் வரை கூட நன்றாக இருக்கும்.

- Advertisement -

இதே போல் எலுமிச்சை பழம் விலை மலிவாக கிடைக்கும் பொழுது அதிக அளவில் வாங்கி வைத்து விடுவோம் அதுவும் சில நேரங்களில் ஒன்று இரண்டு பழமாவது வீணாகி நான் தூக்கி போடுவோம். இனி அப்படி செய்யாமல் வாங்கிய எலுமிச்ச பழங்களை தனித்தனியாக டிஷ்யூ பேப்பரில் ( டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் நியூஸ்பேப்பர் சுற்றி வைக்கலாம் ) சுற்றி அதையும் இப்படி ஒரு பிளாஸ்டிக் பாக்ஸ் இல் போட்டு வைத்து விடுங்கள். இந்த முறை குறைந்தது 15 நாட்கள் வரை யாவது எலுமிச்சை பழ நிறமும் கூட மாறாமல் வாங்கியது போலவே அப்படியே இருக்கும்.

பயிறு வகைகளை இரவில் ஊற வைக்க மறந்து விட்டால் அடுத்த நாள் சமைக்க போகும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு பிளாஸ்க் இந்த பயிறு வகைகள் பாதி அளவு வந்தால் கொதிக்கும் நீரை முழுதாக ஊற்றி ஒரு மணி நேரம் இருக மூடி வைத்து விட்டால் போதும் இரவு முழுவதும் ஊறியது போல கடலை நன்றாக ஊறிவிடும் அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல் கொக்கரி வைத்து வேக வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இத வைச்சு உங்க மிக்ஸியை சுத்தம் செய்யலாம்னு நினைச்சு கூட பார்த்து இருக்க மாட்டிங்க. இப்படி மட்டும் மிக்ஸிய சுத்தம் செய்து பாருங்க பழைய மிக்ஸிக்கும், புது மிக்ஸிக்கும் வித்தியாசமே தெரியாது

பீட்ரூட் கேரட் போன்ற காய்கறிகள் வாங்கி வந்த ஒன்று இரண்டு நாட்களுக்குள்ளே தோள்கள் சுருங்கி இருக்கும். அப்படியான காய்களை இனி நீங்கள் தூக்கி தூரப் போட வேண்டாம் மூடி போட்ட சில்வர் பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் இந்த வதங்கிய காய்களை சேர்த்து ஃப்ரிட்ஜில் அதிக கூலிங் ஆகும் இடத்தில் வைக்க வேண்டாம் இந்த தண்ணீர் பாத்திரத்தை வைத்து அரை மணி நேரம் கழித்து எடுத்து பாருங்கள் நீங்கள் வாங்கி வந்த போது இருந்ததைப் போலவே பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -