காக்கைக்கு உணவு வைக்கும் முறை

kaka unavu
- Advertisement -

வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது என்பதை நம் கர்ம வினைகளை தீர்க்கக் கூடிய அற்புதமான ஒரு பரிகாரமாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக காகத்திற்கு உணவிடுவது என்பது சனீஸ்வர பகவானின் அருளை பெறுவதற்கு உதவுவது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்காகவும் காகத்திற்கு உணவளிப்பார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் காகத்திற்கு உணவளிக்கும் பொழுது மற்றும் செய்யக்கூடாதவை மற்றும் செய்யக்கூடியவை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

சனீஸ்வர பகவானின் வாகனமாக திகழக் கூடியதுதான் காகம். காகத்தை நாம் சனீஸ்வர பகவானின் மறு உருவமாகவே கருத வேண்டும் என்றுதான் பலரும் கூறுவார்கள். மேலும் நம் வீட்டில் இறந்த முன்னோர்கள் நமக்கு ஆசிர்வாதம் செய்வதற்காக காகத்தின் வடிவில் தான் வீட்டிற்கு வருவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் குறிப்பாக அமாவாசை தினங்களில் விரதம் இருப்பவர்கள் தங்கள் முன்னோர்களின் நினைத்து காகத்திற்கு உணவிடுவார்கள்.

- Advertisement -

கண்டிப்பான முறையில் காகத்திற்கு அசைவ உணவை வைக்க கூடாது. இது மிகப்பெரிய தோஷத்தை உண்டாக்கும். அதுவாக மாமிசத்தை எடுத்து சாப்பிடுவது என்பது வேறு நம் வீட்டில் சமைத்த மாமிசத்தை காகத்திற்கு வழங்குவது என்பது மிகப்பெரிய பாவமாக கருதப்படுகிறது. அடுத்ததாக பெண்கள் வீட்டிற்கு தூரமாக இருக்கும் நாட்களில் காகத்திற்கு உணவளிக்கக்கூடாது. மேலும் கணவன் மனைவி இணைந்த பிறகு தலைக்கு குளிக்காமல் காகத்திற்கு உணவளிக்கக்கூடாது.

சாப்பிட்டு மீதம் இருக்கும் சாப்பாட்டை காக்கைக்கு வைக்க கூடாது. எச்சில் பட்ட கையுடன் சாப்பாட்டை காக்கைக்கு வைக்க கூடாது. இந்த தவறுகளை செய்தால் அதனால் மிகப்பெரிய தோஷம் ஏற்படும். அந்த தோஷத்தால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் இழந்து பல பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சரி இப்போ செய்ய வேண்டியவை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

அமாவாசை நாள் அன்று மட்டும் உணவளிப்போம் என்று கூறுபவர்களும், வாரத்திற்கு ஒருமுறை சனிக்கிழமை அன்று உணவளிப்போம் என்று கூறுபவர்களும் அந்த சாதத்துடன் சிறிது கருப்பு எள்ளை கலந்து வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் சனி பகவானின் அருளும் முன்னோர்களின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். காகத்திற்கு பாக்கு மட்டையோ அல்லது வாழை இலையோ வைத்து தான் உணவு வைக்க வேண்டும். மேலும் அருகில் பிளாஸ்டிக் கிண்ணம் அல்லது கொட்டாங்குச்சி போன்றவற்றில் தண்ணீரை நிரப்பி வைப்பதன் மூலம் காகத்திற்கு முழுமையான உணவை தருவதாக பொருள்படும்.

மேலும் வெறும் சாதத்தை காக்கைக்கு வைப்பதற்கு பதிலாக வீட்டில் செய்த குழம்பை ஊற்றி பிணைந்து வைப்பது என்பது மிகவும் விசேஷமாக இருக்கும். காகத்திற்கு உலர் திராட்சையை வைப்பதன் மூலம் தடைபட்டிருக்கும் சுப காரியங்கள் அனைத்தும் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தினமும் ஐந்து உலர் திராட்சையை காகத்திற்காக தனியாக வைக்க வேண்டும். அந்த உலர் திராட்சை காகங்கள் சாப்பிட்டு விட்டால் நாம் என்ன காரியத்தை நினைத்து அந்த திராட்சியை வைத்தோமோ, அந்த காரியம் விரைவில் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: தீராத கண் திருஷ்டியை தீர்க்கும் படிகார பரிகாரம்

போன போக்கில் ஏதாவது ஒன்றை காகத்திற்கு வைத்து வாய் இல்லாத ஜீவனுக்கு உணவளித்து விட்டோம் என்று கூறுவதை விட தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் காகத்தை தெய்வமாக நினைப்பவர்கள் இந்த முறையை பின்பற்றி உணவளிப்பதன் மூலம் முழுபலனையும் பெற முடியும்.

- Advertisement -