தீராத கண் திருஷ்டியை தீர்க்கும் படிகார பரிகாரம்

padigaram
- Advertisement -

நிறைய பேர் குடும்பத்தில் பிரச்சனைகள் வருவதற்கு முதல் காரணமாக இருப்பது இந்த கண் திருஷ்டி தான். கண் திருஷ்டியை அவ்வளவு குறைவாக எடை போட்டு விடக்கூடாது. யாராவது ஒருவர் உங்கள் குடும்பத்தைப் பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டாலே போதும். முடிந்தது, உங்கள் குடும்பத்தின் சந்தோஷம் அந்த பெருமூச்சிலேயே பொசுங்கிவிடும் என்று சொல்லுவார்கள்.

இந்த கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு சக்தி வாய்ந்த படிகார கல் பரிகாரத்தை தான் இன்று, இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

கண் திருஷ்டி நீக்கும் படிகார கல்

பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அன்று உங்களுடைய வீட்டில் எல்லோரும் இருப்பார்கள். அதாவது வீட்டு உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேரும் நேரம் அந்த ஞாயிற்றுக்கிழமை அல்லவா. கண் திருஷ்டியை கழிப்பதற்கு அந்த நாள் உகந்தது. ஞாயிறு மாலை 6 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. அப்படி இல்லை என்றால், உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, வேறு எந்த கிழமையிலும் கூட இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம் தவறு கிடையாது.

ஒரு பெரிய தாம்பூல தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பூல தட்டில் கொஞ்சமாக ஈரம் இல்லாத மணலை கொட்டி விடுங்கள். அந்த மணலுக்கு மேலே படிகாரக் கல்லை வரிசையாக அடுக்கி வைத்து விடுங்கள். வட்டமாக அடுக்கினாலும் சரிதான். அதற்கு நடுவே ஒரு மண் அகல் விளக்கை ஏற்றி வையுங்கள். நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு ஏற்றி வைக்கவும். இந்த விளக்கின் சூடு அந்த பரிகாரக் கல்லின் மேல் பட வேண்டும். அந்த அளவுக்கு பரிகாரக் கல்லை நெருக்க நெருக்கமாக விளக்கை சுற்றி அடுக்கி வையுங்கள்.

- Advertisement -

இந்த அகல் விளக்கில் இருந்து வெளிவரக்கூடிய அந்த தீபச்சுடரில் இருக்கும் நெருப்பு, மண்ணையும் சூடு படுத்தும். அந்த படிகார கல்லையும் சூடுப்படுத்தும். அந்த படிகார கல் சூடு ஆக ஆக அதிலிருந்து ஒரு வெப்பம் வெளியேறும். அது நம் கண்ணுக்குத் தெரியாது. நம்மால் உணர முடியும். அந்த சூட்டில் இருக்கும் கதிர்வீச்சு உங்கள் உடம்பில் இருக்கக்கூடிய கண் திருஷ்டியை மொத்தத்தையும் விளக்கி விடும்.

இப்படி ஏற்றி வைத்திருக்கும் விளக்கை சுற்றி, குடும்ப உறுப்பினர்கள் ஒரு 1/2 மணி நேரமாவது அமர வேண்டும். குலதெய்வத்தை நினைத்து அமைதியாக அந்த விளக்குக்கு முன்பு அமர்ந்து கொள்ளவும். இந்த மாதிரி வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை செய்யலாம். மாதம் ஒரு நாள் அமாவாசை நாளில் செய்யலாம். இப்படி வீட்டில் இந்த படிகார கல் விளக்கை ஏற்ற ஏற்ற குடும்ப கண் திருஷ்டி ஆனது குறைந்து கொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

கண் திருஷ்டியால் குடும்பத்திற்கு பெரிய அளவில் எந்த ஒரு இழப்பும் ஏற்படாமல் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். சரி இப்போது, இந்த வாரம் இந்த பரிகாரத்தை செய்து விட்டோம். அடுத்த முறை, இந்த பரிகாரத்தை செய்யும் போது பழைய படிகார கல்லை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. பரிகாரத்தை முடித்துவிட்டு, படிகாரக் கல்லை தூக்கி கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

மண், அகல் விளக்கு, தட்டு இது மூன்றையும் அடுத்த முறைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மண்ணை மட்டும் ஒரு கவரில் கொட்டி வச்சிடுங்க விளக்கு தட்டை கழுவி சுத்தம் செய்து அடுத்த வாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். எளிமையான பரிகாரம் தானே இதை செய்தால் கண் திருஷ்டி கழியுமா என்று யோசிக்காதீங்க.

இதையும் படிக்கலாமே: பெண்களை பாதுகாக்கும் மந்திர கயிறு

கண் திருஷ்டியால் கஷ்டப்படுபவர்களுக்கு உடனடியாக ஒரு நல்லதை செய்யக்கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -