காகத்திற்கு சாதம் வைக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகள். இந்த தவறுகளை நீங்கள் செய்திருந்தால் பாவம் தான் வந்து சேரும்.

crow-food
- Advertisement -

காகம் என்று சொன்னதும் நினைவிற்கு வருவது நம்முடைய முன்னோர்கள் தான். நம்முடைய குடும்பத்தில் இறந்து போனவர்கள் நம்மை காண்பதற்காக இந்த பூலோகத்திற்கு திரும்பி வருவார்கள். இறந்த ஆத்மா இந்த பூமிக்கு நேரடியாக வர முடியாது என்ற ஒரு காரணத்தினால், இறந்த அந்த ஆத்மாக்கள் காகத்தின் ரூபத்தில் நம்முடைய பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்லுகின்றது. இதனடிப்படையில் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத் தான், முன்னோர்களின் வழிபாட்டில் இந்த காகத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதோடு மட்டுமா? அந்த எமலோகத்தில் வாசலில் எமனுக்கு வாகனமாக இந்த காகம் இருப்பதாகவும் சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

crow feeding

சனிபகவானுக்கு வாகனமாக இருப்பதும் இந்த காகம் தான். இப்படியாக நம்முடைய இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் இந்த காகத்திற்கு பல வகைகளில் முன்னுரிமை கொடுத்து, சாஸ்திர சம்பிரதாயங்களை பின்பற்றி வருகின்றோம். இப்படிப்பட்ட காகத்திற்கு சாதம் வைக்கும் போது நாம் செய்யக்கூடிய சில தவறுகள் என்னென்ன. அந்தக் காகம் நம் வீட்டில் வந்து எந்த திசையில் கரைந்தால் என்னென்ன பலன்கள் என்பதைப் பற்றிய சில தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

காகத்திற்கு சாதம் வைக்கும் போது எச்சில் சாப்பாட்டை வைக்கக்கூடாது. இது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இருப்பினும் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டியது அவசியம். சாப்பிட்டு முடித்து மீதம் இருக்கும் எச்சில் சாப்பாடாக இருந்தால், அதை வீதியில் வரும் நாய்களுக்கு வைக்கலாம். குறிப்பாக காகத்திற்க்கும் பசு மாட்டிற்கும் எச்சில் சாப்பாட்டை போடக்கூடாது. காகமும் பசுமாடும் எச்சில் இலைகளில் இருந்து தானாகவே சாப்பிட்டால் அதன் மூலம் நமக்கு ஏதும் தோஷம் ஏற்படாது. நம் கையால் எச்சில் சாதத்தை காகம் பசு இந்த இரண்டு உயிரினங்களுக்கும் கொடுப்பது தவறு.

Kagam

அடுத்தபடியாக உடலளவில் சுத்தம் இல்லாதவர்கள் காகத்திற்கு சாதம் வைக்கக்கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் தீட்டான சமயத்தில் காகத்திற்கு சாதம் வைக்காதீர்கள். கணவன் மனைவி ஒன்றாக இருந்து விட்டு, காலையில் தீட்டுடன் இருக்கும்போது, சுத்தம் இல்லாத சமயத்திலும் காகத்திற்கு சாதம் வைக்க கூடாது.

- Advertisement -

இதே போல் அசைவ சாப்பாட்டினை உங்களுடைய கைகளால் காகத்திற்கு வைக்க கூடாது. வீட்டில் அசைவ சாதம் சமைப்பதற்கு முன்பாகவே ஊறவைத்த அரிசி, பிஸ்கட் போன்ற பொருட்களை காகத்திற்கு சாப்பிட வைத்து விடலாம். காகம் இயற்கையாகவே புழு பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். இருப்பின் உங்கள் கைகளால் காகத்திற்கு அசைவ சாப்பாட்டை வைக்காதீர்கள்.

crow

ஒரு வீட்டு வாசலில் இருந்து காகம் கரைந்தால் அந்த வீட்டிற்கு விருந்தாளிகள் வருகை தருவார்கள். இது பல பேருக்கு தெரிந்திருக்கும். குறிப்பாக கிழக்கு பகுதியில் இருந்தும் தெற்கு பகுதியில் இருந்தும் காகம் கரைந்தால் அது நம்முடைய வீட்டிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். புதிய முயற்சிகளில் வெற்றியைக் கொடுக்கும். அதாவது நம் வீட்டிற்கு சுபம் லாபம்.

- Advertisement -

crow-tree

தென்மேற்குப் பக்கத்தில் இருந்து காகம் கரைந்தால் அது உங்களுடைய வீட்டிற்கு அதிகப் படியான பணவரவை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பகுதியில் இருந்து காகம் கரைந்தால் எதிரிகளால் வரக்கூடிய பிரச்சனைகள் குறையும். எதிரிகூட நண்பராக மாறும் சூழ்நிலை ஏற்படும்.

crow-bath

காகம் மேற்கு பகுதியிலிருந்து கரைந்தால் மழை வருவதற்கான அறிகுறி என்று சொல்லப்பட்டுள்ளது. வடகிழக்கு, வடமேற்கு, வடக்கு திசைகளில் இருந்து காகம் கரைந்தால் அது உங்களுக்கு எதிர்பாராத நஷ்டத்தை ஏற்படுத்தும். எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

sani-crow

உங்களுடைய வீட்டிலும் காகங்கள் எந்த திசையில் எந்த கரைகின்றது உங்கள் வாழ்வில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதை காகங்கள் உங்களுக்கு முன்கூட்டியே தெளிவு படுத்துகிறதா? சோதித்து தான் பாருங்களேன். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -