ஒரு கல்லுப்புக்குள், கடலளவு இத்தனை குறிப்புகளா? இதுவரைக்கும் நீங்க இதையெல்லாம் கேள்வி கூட பட்டிருக்க மாட்டீங்க!

tips
- Advertisement -

இதுவரைக்கும் சமையலறையில் இருக்கும் கல் உப்பை சமையலுக்கு மட்டும்தான் நீங்க பயன்படுத்தி இருப்பீங்க. ஆனால், சமையலுக்கு அல்லாமல் இன்னும் பயனுள்ள பல வேலைகளுக்கு இந்த கல் உப்பு பயன்படும். குறிப்பாக நாள் முழுவதும் கால் கடுக்க கடுக்க நின்று வேலை செய்வதால் வரும் குதிக்கால் வலியை நீக்குவதற்கு கூட இந்த கல்லுப்பை பயன்படுத்த முடியும் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா. இதோடு சேர்த்து இன்னும் பயனுள்ள நிறைய வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

குறிப்பு 1:
புதியதாக வாங்கிய சில துணிகளை முதல் முறை தண்ணீரில் முக்கி எடுக்கும் போது, நிறைய சாயம் போகும். ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர், 1 கைப்பிடி அளவு கல் உப்பு, ஷாம்பு தேவையான அளவு இந்த பொருட்களை எல்லாம் போட்டு கலந்து, இப்போது இந்த தண்ணீரில் புதிய துணிகளை முக்கி எடுத்தால் சாயம் போகாமல் இருக்கும். குறிப்பாக உள்பாவாடை, நைட்டி, காட்டன் துணிகளுக்கு இந்த குறிப்பு பயன்படும்.

- Advertisement -

குறிப்பு 2:
வாரம் ஒரு முறை சிங்க் ஓட்டைக்கு உள்ளே 2 ஸ்பூன் கல் உப்பை போட்டு சுடுதண்ணீரை அதில் ஊற்றி விட்டால் சிங்கில் இருக்கும் அடைப்பு முழுவதும் நீங்கிவிடும். அடிக்கடி சிங்க் அடைத்துக் கொள்ளாது. மிகக் குறைந்த அளவு அடைப்பு இருந்தால் தான் இந்த குறிப்பு ஒர்க் அவுட் ஆகும். ரொம்பவும் அடைத்துக் கொண்ட சிங்க் என்றால் அதில் ஆப்ப சோடாவும் வெந்நீரும் சேர்த்து பாருங்கள். அதுவும் முடியவில்லை என்றால் சிங் டிரைனேஜ் கிளீனர் என்றே கடைகளில் விற்கின்றது அதை வாங்கி ஒரு பாக்கெட் சிங் ஓட்டையில் கொட்டி விட்டால் போதும் சிங்கில் இருக்கும் அடைப்பு துர்நாற்றம் எல்லாம் நீங்கிவிடும்.

குறிப்பு 3:
ஃப்ரீசருக்கு உள்ளே அடிக்கடி ஐஸ் கட்டிகள் ஒட்டி பிடிக்கிறதா. அதன் உள்ளே எப்போதும் கொஞ்சம் கல் உப்பை தூவி வையுங்கள். ஐஸ் கட்டி, பிரீசரில் நிறைய சேராமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
எப்போதுமே சமையலறையில் இருக்கும் கேஸ் ஸ்டவ் பிசுபிசுப்போடு தான் இருக்கும். அதை சுத்தம் செய்வதிலும் கொஞ்சம் சிரமம் இருக்கும். குறிப்பாக அசைவம், மீன் வருவல் போன்ற பொருட்களை சமைத்தால் எண்ணெய் எல்லாம் கேசுக்கு மேலே தெறித்து, அதனுடைய வாடை, பிசுபிசுப்பு விடாப்படியாக ஒட்டி இருக்கும். இப்படிப்பட்ட சமயத்தில் கேஸ் ஸ்டவ்வை துடைப்பதற்கு இந்த கல் உப்பை பயன்படுத்துங்கள். கல்லுப்பை கேஸ் ஸ்டவ்வுக்கு மேலே தூவி, அப்படியே கொஞ்சம் பாத்திரம் தேய்க்கும் லிக்விடையும் ஊற்றி தேய்த்து துடைக்கும் போது அந்த ஸ்டவ்வில் இருக்கும் விடாப்பிடியான பிசுபிசுப்பும் துர்நாற்றமும் சுலபமாக நீங்கிவிடும்.

குறிப்பு 5:
உங்கள் வீட்டு கழிவறையை சுத்தம் செய்வதற்கு முன்பு, அதாவது டாய்லெட்டின் மேலே ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து தூவி விடுங்கள். அதன் பின்பு டாய்லெட்டை சுத்தம் செய்யும் லிக்விடை ஊற்றி, எல்லா இடங்களிலும் தேய்த்து விட்டு பத்து நிமிடங்கள் ஊறிய பின்பு பிறகு டாய்லெட்டை தேய்த்து சுத்தம் செய்தால் டாய்லெட்டில் இருக்கும் கிருமிகள் அனைத்தும் சுத்தமாக அழிந்துவிடும். நோய் தொற்று குறையும்.

- Advertisement -

குறிப்பு 6:
கெட்ட வாடை அடிக்கும் வாட்டர் பாட்டில், கண்டைனர் இவைகளுக்கு உள்ளே கொஞ்சமாக கல் உப்பை போட்டு வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி வேகமாக குலுக்கி பின்பு சுத்தம் செய்தால் அதற்கு உள்ளே வீசும் கெட்ட வாடை உடனடியாக நீங்கும். (லஞ்ச் கட்டிக் கொடுப்பீங்க இல்லையா, டிபன் பாக்ஸ், குழம்பு டப்பா, பொரியல் டப்பா இவைகளை எல்லாம் கூட வாரம் ஒரு முறை வெதுவெதுப்பான தண்ணீரோடு கல் உப்பு சேர்த்து ஊறவைத்து சுத்தம் செய்வது நல்லது.)

இதையும் படிக்கலாமே: இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க! 30 நாள் வரவேண்டிய கேஸ், நிச்சயம் 60 நாளைக்கு வரும்.

குறிப்பு 7:
இரண்டு கைப்பிடி அளவு கல் உப்பை வடசட்டியில் போட்டு நன்றாக சூடேறும்படி வறுத்து, ஒரு காட்டன் துணியில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக நல்லெண்ணெய் ஊற்றி, சூடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த கல்லுப்பு முடிச்சை, அந்த நல்லெண்ணெயில் தொட்டு கை பொறுக்கும் சூடு இருக்கும்போது, இதை அப்படியே குதிகாலில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

குதிகாலில் எந்த இடத்தில் எல்லாம் உங்களுக்கு வலி இருக்கிறதோ, அந்த இடத்தில் எல்லாம் சுட சுட கல்லுப்பில், சுட சுட நல்லெண்ணெய் தொட்டு ஒத்தடம் கொடுக்கும்போது, நல்ல வலி நிவாரணம் கிடைக்கும். குதிகால் வலி படிப்படியாக நீங்கும். தினமும் நீங்கள் இந்த ஒத்தடதை கொடுக்கலாம். மேலே சொன்ன குறிப்புகள் எல்லாம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -