இனி காலையில் இப்படி மட்டும் எந்திரிச்சி பாருங்க, இனி உங்க வீட்ல சண்டை, சச்சரவே வராது!

wake-up-lakshmi
- Advertisement -

காலையில் எழுந்திருக்கும் பொழுதே சிலர் சண்டை, சச்சரவுடன் பொழுதை ஆரம்பிப்பார்கள். கணவன்-மனைவிக்குள் சண்டை அல்லது அப்பா மகனுக்ககுள் சண்டை என்று ஏதாவது ஒரு சண்டையுடன் ஆரம்பிக்கும் நாள் முழுவதும் எப்படி இருக்கும்? மனதில் நிம்மதி இல்லாமல் ஒரு நாளாக அந்த நாள் வீணாகிப் போகும். அப்படி அல்லாமல் ஒவ்வொரு நாளும் நமக்கு இனிய நாளாக இருக்க எப்படி நாம் எழுந்திருக்க வேண்டும்? எழுந்த பின்பு என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

sleep

இரவு நீங்கள் தூங்கும் பொழுது இறை நாமத்தை உச்சரித்து விட்டு தூங்க வேண்டும். சிவ பக்தர்கள் சிவ சிவ என்ற வாக்கியத்தையும், ஹரி பக்தர்கள் ஹரி ஹரி என்கிற வாக்கியத்தையும் அல்லது ராமராம என்கிற ராம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே தூங்கச் செல்லலாம். காலையில் நீங்கள் விழிக்கும் பொழுது உங்கள் உடலில் இருக்கும் கெட்ட பிராணவாயு உஷ்ண தன்மையுடன் இருக்கும். இப்படி உஷ்ண தன்மையுடன் இருக்கும் இந்த பிராண வாயுவை முதலில் வெளியேற்ற வேண்டும்.

- Advertisement -

எழுந்தவுடன் சம்மணங்கால் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் இரண்டு கைகளையும் கண்களின் மீது வைத்து முகத்தைத் துடைப்பது போல கன்னத்தை அழுத்தம் கொடுத்து துடைக்கவும். இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் கண்களுக்கும், முகத்திற்கும் ஒரு சக்தி கிடைக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பின்னர் மூச்சை உள்ளிழுத்து பின்னர் வெளியில் விடுங்கள். இது போல் ஓரிரு முறை செய்வது நல்லது. இவ்வாறு செய்யும் பொழுது கெட்ட பிராண வாயு வெளியேறி உடல் சோம்பலில் இருந்து விடுபடும்.

hand

உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம் உண்டு. எனவே நீங்கள் முதலில் கண்களை விழித்தவுடன் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றாக இணைத்து அகல் போல குவித்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் மகாலட்சுமி தோன்றுவதாக மனதில் நினைத்து அவரின் உருவத்தை பார்க்க வேண்டும். நீங்கள் பொதுவாக தானம் செய்யும் பொழுது உங்கள் கைகளால் தானம் செய்வது நல்ல பலனை கொடுக்கும் என்பார்கள். மகாலட்சுமி தானம் கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் அருள் புரிய வேண்டும் என்பதால் தான் உங்கள் கைகளால் கொடுப்பது தான் முறை என்று கூறப்பட்டது. அதே போல மகாலட்சுமியை பார்த்து விழித்தால் அந்த நாள் முழுவதும் எந்த விதமான சண்டை, சச்சரவுகளும் இல்லாமல் நிம்மதியான நாளாக அமையும் என்பதும் நியதி.

- Advertisement -

எவ்வளவு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் தைரியத்தை கொடுப்பது இந்த எழுதல் முறை. தினமும் காலையில் இப்படி எழுந்து பார்த்தால் உங்களுக்கே ஒரு விதமான நல்ல உணர்வு உண்டாகும். நீங்கள் எழுந்திருக்கும் பொழுது ஹரி நாமம், சிவ நாமம் அல்லது ராம நாமம் போன்ற உங்களுக்கு இஷ்ட நாமங்களை உச்சரித்து கொள்ளலாம். நீங்கள் எழுந்ததும் முதலில் பூமா தேவியை தொட்டு வணங்குங்கள். பாதத்தை தரையில் வைத்ததும் பூமா தேவியை வணங்கிவிட்டு பின்னர் உங்கள் அன்றாட வேலைகளை நீங்கள் செய்தால் அதில் நிச்சயம் வெற்றிகள் குவியும்.

wakeup1

சில விஷயங்களை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை காட்டிலும், இப்படித் தான் செய்ய வேண்டும் என்கிற வரைமுறையை நாம் வகுத்துக் கொண்டால் வாழ்க்கையும் பிரகாசிக்க துவங்கும். அந்த வகையில் காலையில் எழுதலை இப்படி மாற்றிக் கொண்டு பாருங்கள், நிச்சயம் நல்லதொரு ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் இப்படி எழ பழக்குங்கள்.

- Advertisement -