நாளை காலையில் கண் விழித்ததும், இதையெல்லாம் பார்த்து விட்டால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். அது மட்டுமில்லாமல் உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் பண தட்டுப்பாடே வராது.

- Advertisement -

வருடத்தின் முதல் நாள் துவங்கும் போதே நல்ல முறையில் துவங்கினால் அந்த வருடம் முழுவதும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் முதல் நாள் கோவிலுக்கு செல்வது, வீட்டில் பூஜைகள் செய்வது, நல்ல விஷயங்களுக்காக செலவு செய்வது, நல்ல காரியங்களை பேசுவது என்று நாம் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்கிறோம். அந்த வகையில் வருடம் தொடங்கும் முதல் நாள் முதலில் நாம் பார்க்கும் சில பொருட்களால் வருடம் முழுவதும் நமக்கு நல்ல பலனை கொடுக்கும் என்று ஆன்மீகம் சொல்கிறது அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

காலையில் கண் விழித்ததும் பார்க்க வேண்டியவை
காலையில் கண் விழித்ததும் நாம் முதலில் பணத்தை பார்த்தால் அந்த வருடம் முழுவதும் நம் கையில் பணத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் பணவரும் வரவானது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு நீங்கள் உறங்கும் போது தலையணை அடியில் பணத்தை வைத்து உறங்கி விடுங்கள். அடுத்த நாள் விழித்ததும் இந்த பணத்தில் கண் விழியுங்கள்.

- Advertisement -

அடுத்து தாமரை பூ இந்த தாமரை பூ மகாலட்சுமி தாயாருக்கு உகந்த மலர், இந்த மலரையும் முதல் நாளே வாங்கி வந்து உங்கள் படுக்கையறையில் வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலை எழுந்தவுடன் இந்த மலரை பாருங்கள். இப்படி வைத்த மலரை பூஜைக்கு பயன்படுத்த கூடாது.

அதே போல் நீங்கள் தூங்கி எழுந்ததும் சுவாமி படங்களை தரிசித்தால் மிகவும் விசேஷம். சாமி படங்களை படுக்கை அறைக்குள் கொண்டு வந்து வைக்கக் கூடாது. தூங்கி எழுந்த பிறகு நீங்கள் சென்று சாமி படங்களை பாருங்கள். அதே போல் எரியும் தீபங்களை பார்த்தால் மிக மிக நல்லது.

- Advertisement -

வியாபாரம், தொழில் செய்பவர்கள் காலையில் எழுந்தவுடன் வெள்ளை குதிரையை பார்த்தால் நல்லது. குதிரை என்றவுடன் குதிரையை பார்க்க வேண்டும் என்று அல்ல. குதிரை படத்தை பார்த்தால் போதும். அதே போல் ஏழு குதிரைகள் ஓடுவது போல் இருக்கும் அந்த படத்தை பார்த்தாலும் மிக மிக விசேஷம். வியாபாரம் தவிர்த்து மற்ற தொழில் செய்வர்கள், பசுவின் படத்தை பார்க்க வேண்டும்.

கோபுர தரிசனம் காண வாய்ப்பு இருப்பவர்கள் கட்டாயமாக தூங்கி எழுந்ததும் கோபுர தரிசனம் பாருங்கள். சாதாரணமாகவே கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். வருடத்தின் முதல் நாள் முதலில் கோபுரத்தை பார்த்தால் அதற்க்கான அதிர்ஷ்டத்தை சொல்ல வேண்டியதே இல்லை. வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் வைத்திருப்பவர்கள் இரவு தூங்கும் முன் உங்கள் அருகில் வைத்து விட்டு, காலையில் எழுந்தவுடன் அதை பார்த்தால் நல்லது. பார்க்க வேண்டும் என்றால் பார்த்து அப்படியே வைத்து விடக் கூடாது. பார்க்கும் போது மனதிற்குள் இந்த வருடத்தில் எனக்கு நகைகள் சேர வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அந்த நகைகளை பார்க்க வேண்டும்.

- Advertisement -

இவற்றை எதையுமே செய்ய முடியவில்லை என்றாலும் தூங்கி எழுந்தவுடன் சூரிய தரிசனத்தை கட்டாயம் அனைவருமே பார்த்து விடுங்கள். ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த நாள் அந்த நாளில் வருடம் பிறந்து இருப்பதால், காலை தூங்கி எழுந்தவுடன், சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் அதை செய்து விடுங்கள். சூரிய நமஸ்காரம் செய்யாதவர்கள் தூங்கி எழுந்ததும் சூரியனை பாருங்கள். சூரியன் உதிக்கவில்லை என்றாலும் கூட அந்த திசையை பார்த்து, இந்த வருடம் முழுவதும் நான் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று வேண்டி மனதார வேண்டி கொள்ளுங்கள்.

இந்த வருடத்தின் முதல் நாள் அன்று முதலில் நாம் சாப்பிடும் பொருள் மிக மிக முக்கியம், அது தேனாக இருந்தால் பெரிய விசேஷம். தேன் எந்த நேரத்திலும் கெட்டுப் போகாத ஒரு பொருள். அந்த பொருளை வருடத்தில் முதல் நாள் அன்று சாப்பிடும் போது அதிக நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த வருடத்தில் நீங்கள் பட்ட துன்பம் எல்லாம் நீங்கி, புது வருடத்தில் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியாக வாழ, இன்று இரவு 12 மணிக்கு இந்த தீபத்தை மட்டும் மறக்காமல் ஏற்றி விடுங்கள். புது வருடம் உங்களுக்கு நிச்சயம் யோகத்தை தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

பொதுவாக காலையில் தூங்கி எழுந்து முதலில் நாம் பார்க்கும் பொருள் நம் மனதில் நன்றாக பதிந்து விடும். அந்த நாள் முழுவதும் அது சம்பந்தமான யோசனை இருக்கும். ஒரு வருடத்தின் முதல் நாள் முதல் காரியமாக இவைகளை பார்க்கும் போது ஒரு கணம் மனமானது அது குறித்த சிந்தனைகளை பதிய வைத்து கொள்ளும்.பணத்தை பார்க்கும் போது பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும், நகையை பார்க்கும் போது நகை சேர வேண்டும் என்றும், கடவுளை வேண்டும் போது என் கஷ்டங்கள் தீர வேண்டும் என்று நீங்கள் முதன் முதலில் வேண்டும் இந்த வேண்டுதல் அந்த வருடத்திற்குள் பலிக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. மற்ற நாட்களிலும் இதை கடைப் பிடிக்கலாம்.

- Advertisement -