காலையில் எழுந்ததும் இந்தத் தவறுகளை மட்டும் செய்யாமல் இருந்தாலே போதும். வீட்டில் தரித்திரம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. மனசும் நிம்மதியாக இருக்கும்.

women
- Advertisement -

நம்மை விடாமல் பற்றிக் கொண்டு துரத்தி வரும் துன்பத்தை, நம்மை விட்டு தூரம் துரத்தி அடிக்க வேண்டும் என்றால் நாம் சில விஷயங்களை காலை நேரத்தில் செய்யாமலிருப்பது நல்லது. அதேபோல், சில விஷயங்களை காலை நேரத்தில் செய்து தான் ஆக வேண்டும். இப்படியாக பின் சொல்லக்கூடிய விஷயங்களை எந்த வீட்டில் தினந்தோறும் பின்பற்றி வருகிறார்களோ, அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். அதுமட்டுமல்லாமல் தினம்தோறும் காலையில் எழுந்தவுடன் இந்த ஒரே ஒரு வரி மந்திரத்தை உச்சரித்து வந்தால், உங்கள் வாழ்க்கையில் வெற்றிகள் குவியும். பெயர், புகழ், பணம், பதவி, ஒன்றன்பின் ஒன்றாக உங்கள் பின்னால் வரத்தொடங்கும். காலையில் எழுந்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன? காலையில் உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன? என்பதைப் பற்றிய விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

காலையில் எழுந்த உடனேயே நிறைய பேருக்கு தன் முகத்தை கண்ணாடியில் பார்க்கக்கூடிய பழக்கம் இருக்கும். காலையில் எழுந்த உடனேயே உங்களுடைய இஷ்ட தெய்வத்தை குல தெய்வத்தை வேண்டி அந்த தெய்வத்தின் முகத்தை உங்களுடைய மனக் கண்களால் பார்த்து, அதன் பின்பு உள்ளங்கைகளை பாருங்கள். அதன் பின்பு கண்ணாடியின் முன் நின்று முகத்தை பார்ப்பது மிகவும் நல்லதாக சொல்லப்பட்டது. கூடுமானவரை கண் விழித்தவுடன் கண்ணாடியை பார்க்க வேண்டாம்.

- Advertisement -

இரண்டாவது விஷயமாக இன்றைய சூழ்நிலையில் நாம் எல்லோருமே காலையில் எழுந்த உடனேயே செய்யக் கூடிய விஷயம். வீட்டில் இருக்கும் டிவியை போட்டு விடுவதுதான். கூடுமானவரை காலை நேரத்தில் சினிமா பாடல்களை தவிர்த்துவிட்டு, இறை சம்பந்தப்பட்ட பாடல்களை வீட்டில் ஒலிக்க விடுவது மிக மிக நல்லது.

குறிப்பாக வீட்டிலிருக்கும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி காலையிலேயே எதிர்மறையான விஷயங்களை டிவியில் செய்தியின் மூலம் கேட்க வேண்டாம். இது காலை நேரத்தில் நம்முடைய மனதை கஷ்டப்படுத்தி விடும். அதன் பின்பு அந்த நாள் முழுவதும் நமக்கு கஷ்டமாக இருப்பது போலவே ஒரு உணர்வை கொடுத்துவிடும். வெளி உலக விஷயங்களை தெரிந்து கொள்ளக் கூடாது என்று சொல்ல வரவில்லை. காலை எழுந்ததுமே சில எதிர்மறையான கெட்ட விஷயங்களை செய்தியாக தெரிந்து கொள்வது அன்றைய நாளுக்கு சரிவராது. நியூஸ் சேனலை வைத்தாலே, நமக்கு இல்லாத பயமும், இல்லாத பிரச்சனையும், இல்லாத கஷ்டமும் வந்து தொற்றிக் கொள்கிறது.

- Advertisement -

காலையில் குளிக்காமல் இருப்பது பேஷனாக மாறிவிட்டது. ஆனால் ஆரோக்கிய ரீதியாகவும் சரி, ஆன்மீக ரீதியாகவும் சரி, ஒருவர் காலையில் எழுந்த உடனேயே எவ்வளவு சீக்கிரத்தில் குளிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் குளித்துவிட வேண்டும். குளிப்பதன் மூலம் உங்களுடைய மனமும் உடலும் புத்துணர்ச்சியாக செயல்பட தொடங்கும். அன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும்.

எந்த வீட்டில் காலையில் பெண்கள் குளிக்காமல் இருக்கின்றார்களோ அந்த வீட்டில் நிச்சயம் தரித்திரம் தலை விரித்து தாண்டவம் ஆட தான் செய்யும். அதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. காலையில் குளித்துவிட்டு வேலை செய்யும்போது வியர்வை வருகிறது என்றால், மாலையில் ஒரு முறை குளித்துக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

- Advertisement -

காலையில் எழுந்தவுடனே கட்டாயமாக கோபப்படக்கூடாது. மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். கடுமையான வார்த்தைகளை உபயோகப் படுத்தக்கூடாது. வீட்டில் சண்டை போடவே கூடாது.

இந்த கலியுகத்திலும் நமக்கு தினமும் தரிசனம் தரக்கூடிய கடவுள்கள் 2. சூரியன் சந்திரன். கூடுமானவரை காலையில் சூரிய பகவானை தரிசனம் செய்யுங்கள். கண்கண்ட தெய்வமான சூரியனை தினந்தோறும் வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்க்கையில் தோல்வியை இருக்காது. இரவு வரக்கூடிய சந்திரனைத் தரிசனம் செய்வது நமக்கு மன வலிமையை கொடுப்பதாக சொல்லப்பட்டு உள்ளது.

இறுதியாக தினந்தோறும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு ‘ஓம் நமோ பகவதே ருத்ராய!’ என்ற மந்திரத்தை உங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரிக்கயுங்கள். குறைந்தது மூன்று முறை உச்சரித்தால் கூட போதுமானது. மூன்று முறைக்கு மேல் எத்தனை முறை உச்சரித்தாலும் அதில் தவறு கிடையாது. மேற்கண்ட விஷயங்களை பின்பற்றி வந்தாலே வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ்க்கையை சுலபமாக நடத்திக் கொண்டே செல்லலாம். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -