கலப்படம் இல்லாத வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?

vellam
- Advertisement -

வரப்போகும் தைத்திருநாளுக்கு சர்க்கரைப் பொங்கல் வைக்க எல்லோர் வீட்டிலும் வெல்லம் வாங்குவோம். வெல்லத்துக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும் சமயம் இது. சில கலப்படமான வெல்லங்களும் மார்க்கெட்டில் இந்த சமயத்தில் உலா வரும். நம்முடைய குடும்பத்தின் ஆரோக்கியம் கருதி கலப்படம் இல்லாத வெல்லத்தை எப்படி வாங்குவது பயனுள்ள ஒரு தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

கலப்படம் இல்லாத வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?

வெல்லத்தில் உருண்டை வெல்லம் அச்சு வெல்லம் என்று பல வகைகள் உள்ளது. எல்லா வெல்லத்திற்கும் பின் சொல்லக்கூடிய இந்த விஷயங்கள் பொருந்தும். கலப்படம் இல்லாத வெல்லத்தை நிறத்தை வைத்து நம்மால் கண்டுபிடிக்க முடியும். அதிகமாக கெமிக்கல் சேர்த்த வெல்லம் வெளிர்மஞ்சள் நிறத்தில் சாஃப்டாக இருக்கும்.

- Advertisement -

சில உருண்டை வெல்லகளை பார்த்தால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை கையில் எடுத்து பார்த்தீர்கள் என்றால் அப்படியே நைசாக மொழுமொழுப்பாக இருக்கும். இந்த வெல்லத்தில் அதிக கெமிக்கல் கலந்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே இந்த லைட் கலரில் வரக்கூடிய வெல்லங்களில் கெமிக்கல் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும்.

அப்போது டார்க் ப்ரவுன் கலரில் இருக்கும் வெல்லம் சுத்தமான வெல்லமா. லைட் கலரான வெல்லத்தை ஒப்பிடும்போது, டார்க்காக பிரவுன் நிறத்தில் இருக்கும் வெல்லங்கள் கலப்படம் குறைவானவை. அதை நல்ல வெல்லம் என்றும் சொல்லலாம். நிறம் அல்லாமல் சுவையை வைத்தும் நம்மால் வெல்லத்தை கண்டுபிடிக்க முடியும். நீங்கள் வாங்கும் வெல்லத்தில் இருந்து கொஞ்சம் வெல்லத்தை எடுத்து நாக்கில் சுவைத்து பாருங்கள்.

- Advertisement -

முழு இனிப்பு சுவையும் இருந்தால், அது கலப்படம் இல்லாத வெல்லம். சில வெல்லங்கள் உப்பு கரிக்கும். அப்படி வெல்லம் உப்பு கரித்தால் அது நாள்பட்ட வெல்லம் ரொம்பவும் பழைய வெல்லம் என்று கண்டுபிடிக்கலாம். வெல்லத்தில் பல வகையான வெல்லங்கள் உள்ளது. உருண்டை வெல்லம் அச்சு வெல்லம் இதில் நாம் எதை வாங்குவதாக இருந்தாலும் மேல் சொன்ன இந்த விதிமுறைகளை பின்பற்றுங்கள் இது தவிர போலி பொருட்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்காக மக்களுக்கு விழிப்புணர்வு நடத்தும் போது இந்த தகவல் ஆனது நமக்கு சொல்லப்பட்டது.

அதாவது போன் ஃபிளாஷ் லைட் இருக்குதல்லவா. அதை வைத்தும் வெல்லத்தில் கலப்படம் உள்ளதா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது எப்படின்னு தெரிஞ்சுக்கலாம். உங்கள் மொபைல் ஃபோனை திருப்பி ஃபிளாஷ் லைட்டை ஆன் பண்ணுங்க. அந்த லைட்டுக்கு மேலே இந்த வெல்லத்தை வைத்துப் பாருங்கள். வெல்லத்திற்கு உள்ளே வெளிச்சம் நன்றாக ஊடுருவினால், வெல்லத்துக்கு உள்ள லைட் எரிவது போல தெரிந்தால், அதில் கலப்படம் அதிகமாக இருக்கிறது. அதில் சர்க்கரையை அதிகமாக கலந்து இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் நீங்க போகியில் கொளுத்த வேண்டிய 5 பொருள்

அதுவே அந்த ஃப்ளாஷ் லைட்டுக்கு மேலே ஒரு வெல்லத்தை வைத்துப் பாருங்கள். வெல்லத்திற்கு நடுவே வெளிச்சம் செல்லாது. வெல்லம், இந்த பிளாஷ் லைட் வெளிச்சத்தை அப்படியே அணைத்தது போல நமக்கு இருட்டாக தெரியும். வெல்லம் இருட்டாக இருக்கும். அப்படி இருந்தால் அந்த வெல்லம் நல்ல வெல்லம், கலப்படம் இல்லாத வெல்லம் என்பது குறிப்பிடத்தக்கது. சின்ன சின்ன குறிப்புகள் தான். இருந்தாலும் இந்த பொங்கலுக்கு தரமான வெல்லத்தை வாங்க இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -