காளி கோவிலின் கல்லை தட்டினால் மணி ஓசை வரும் அதிசயம் – வீடியோ

Ringing stone

இந்தியில் உள்ள கோவில்களின் அதிசயத்திற்கு பஞ்சமில்லை. அந்த வகையில் காளி கோயிலிற்கு சொந்தமான பாறை ஒன்றில் எங்கு தட்டினாலும் மணி யோசை கேட்கும் அதிசயம் நிகழ்கிறது. அருகில் எத்தனையோ பாறை இருந்தாலும் ஒரே ஒரு பாறையில் மட்டும் இந்த வினோதம் நிகழ்கிறது. வாருங்கள் அதற்கான விடியோவை கீழே பார்ப்போம்.

இயற்கையானது எப்போதும் அதன் அதிசயங்களை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த தவறுவதில்லை. அதில் ஒன்று தான் இந்த இசை கற்பாறை.குஜராத் மாநிலத்தில் உள்ள சபலி என்னும் ஊரில் உள்ளது மா காளி மந்திர் கோவில். இந்த கோயிலிற்கு சொந்தமான கற்பாறையில் தான் அதிசய சத்தம் வருகிறது. இதை யார் வேண்டுமானாலும் சோதித்து பார்க்கும் வகையில் அந்த பாறை வெளியில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆராய்ந்த அறிவியலாளர்கள், அந்த குறிப்பிட்ட பாறையில் அதிக அளவிலான இரும்பு இருப்பதால் அதன் சத்தம் விசித்திரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த குறிப்பிட்ட ஒரு பாறையில் மட்டும் எப்படி இவளவு அதிகமான இரும்பு இருக்கிறது என்பதை கண்டறிய இயலவில்லை. இது போன்ற பாறைகளை கொண்டு பழந்தமிழர்கள் சில சிலைகளையும் வடித்து வைத்துள்ளனர். இன்றளவும் அந்த சிலைகள் அதிசயங்களுள் ஒன்றாக இருக்கிறது.