இந்த பொருளை உங்களது கெல்லாப்பெட்டியில் வெச்சாலே போதும்! வியாபாரம் ஓஹோன்னு நடக்கும். பணப்பெட்டி நிரம்பி வழியும்.

cash3

முதலில் உங்களது வியாபாரம் ஓஹோன்னு நடக்க வேண்டும் என்றால், உங்களது விடாமுயற்சி மிக மிக அவசியம். வியாபாரத்தில் முதலீட்டை விட, நம்பிக்கைதான் அதிகமாக இருக்க வேண்டும். நம்பிக்கையை இழக்காமல், தோல்வியை தழுவினாலும், மீண்டும் மீண்டும் முயற்சி செய்பவர்களுக்கு நிச்சயம் கூடிய விரைவில் நல்ல லாபத்தையும், வெற்றியையும் பெற முடியும். இதை தவிர்த்து உங்களுடைய முயற்சியில் சின்னச் சின்ன தோல்விகள் இருந்தால், அதை சரி செய்வதற்காக ஆன்மீக ரீதியாக, தாந்திரீக ரீதியாக என்ன பரிகாரத்தை செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

business-shop

நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் வைத்திருக்கும் பணப்பெட்டி கல்லாப்பெட்டி மரத்தில் இருப்பது மிகவும் சிறந்தது. இல்லை என்றாலும் ஒரு தேக்கு மரக் கட்டையை, எப்போதுமே அந்த இரும்பு மரப்பெட்டியில் வைப்பது பணத்தை தேக்கி வைக்கும். சிறிய தேக்கு மர துண்டு கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் ஒரு அழகான சிறிய டப்பாவை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த சிறிய டப்பா கண்ணாடியிலும் இருக்கலாம். பீங்கானில் இருக்கலாம். வெள்ளியில் குங்கும சிமிழ் போல சிறிய டப்பாவை வைத்தால் மேலும் சிறப்பு. உங்களது வசதியைப் பொருத்து வாங்கிக்கொள்ளுங்கள்.

kungumapoo

கட்டாயம் அதற்கு மேல் மூடி இருக்க வேண்டும். அதற்குள் சிறிய சிவப்பு நிற வெல்வெட் அல்லது பட்டுத்துணியை விரித்துக் கொள்ள வேண்டும். அதற்குள்ளே முக்கியமாக நீங்கள் வைக்கப்போகும் பொருள் ‘சுத்தமான குங்குமப் பூ’ ஒரு சிட்டிகை அளவு போட்டுக் கொள்ளுங்கள். அதற்குள்ளே ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு மூடி வைத்து விடுங்கள். இந்த சிறிய டப்பா உங்களது கல்லா பெட்டியிலேயே இருக்கட்டும். அதாவது நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் இந்த டப்பா இருக்க வேண்டும். கல்லாப்பெட்டி ஆக இருந்தாலும் சரி, ட்ராவாக இருந்தாலும் சரி, பீரோவாக இருந்தாலும் சரி.

- Advertisement -

தினம் தோறும் சுவாமி படங்களுக்கு தூபம் காட்டும் போது, இந்த டப்பாவை திறந்து இதற்கு தூபம் காட்டி விட்டு மீண்டும் மூடி விடுங்கள். அது அப்படியே இருக்கட்டும். இதற்கு முன்பு உங்களது வியாபாரம் ஓஹோ வென்று சென்று, கடந்த சில நாட்களாக தோல்வி அடைந்து இருந்தாலும் சரி, உங்களது வியாபாரம் நஷ்டத்தில் சென்று இருந்தாலும் சரி, அல்லது வரிசையாக இருக்கும் எல்லா கடைகளிலும் கூட்டம் இருக்கிறது, உங்கள் கடைக்கு மட்டும் கூட்டம் வரவில்லை என்ற பிரச்சனை இருந்தாலும் சரி, எப்படியாக இருந்தாலும் நீங்கள் இருக்கும் நிலைமையை விட்டு, ஒரு படி மேலே உயர்வதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

cash-box

இந்த பரிகாரத்தோடு சேர்த்து, மாதம்தோறும் வரும் அம்மாவாசை தினங்களில் நல்ல தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் பொடியைக் கலந்து, வேப்பிலையால் இந்த தண்ணீரை உங்களது தொழில் செய்யும் இடங்களில் மூலை முடுக்குகளில் துர்க்கை அம்மனை நினைத்து தெளித்து விட வேண்டும். தேவையற்ற எதிர்மறை சக்திகளின் மூலம் உங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதன் மூலம் வரக்கூடிய பிரச்சினைகள் நீங்கும்.

blue-durga

இதே பரிகாரத்தை, இதே சிறிய டப்பாவை உங்களுடைய வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். உங்களுடைய வீட்டு மூலை முடுக்குகளிலும் இந்த தண்ணீரை தெளிக்கலாம். தவறொன்றும் கிடையாது. தடங்கல்கள் தடைகள் இருந்தால் அதை சரி செய்ய, தாந்திரீக ரீதியாக சுலபமாக சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
இன்று(12/1/2021) ஹனுமன் ஜெயந்தி! மாலையில் ஹனுமருக்கு இதை செய்தால் நினைத்ததெல்லாம் அப்படியே கிடைக்கும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.