பக்க விளைவுகள் இல்லாமல் வெறும் 10 நிமிடத்தில் வெள்ளை முடிகளை கருப்பாக மாற்ற வீட்டிலேயே கருஞ்சீரகம் ஹேர்டை தயார் செய்வது எப்படி?

hair-dye1
- Advertisement -

வெள்ளை முடிகளை கருப்பாக மாற்றுவதற்கு இயற்கையாக நமக்கு கிடைத்து இருக்கும் பொருள்தான் இந்த கருஞ்சீரகம். கருஞ்சீரகத்திலிருந்து ஹேர் டை எப்படி தயாரிப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முழுக்க முழுக்க பக்க விளைவுகள் வராத இந்த ஹேர் டை தலையில் போடுவது சுலபம். வெறும் 10 நிமிடத்தில் உங்களுடைய வெள்ளை முடி கருப்பு முடியாக மாறிவிடும். இந்த குறிப்பை உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் பதிவை முழுமையாக படித்து பலன் பெறுங்கள்.

முதலில் அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். இரும்பு கடாய் இல்லாதவர்கள் சாதாரண கடாயிலும் இதை செய்யலாம். அடுப்பில் கடாயை வைத்து நன்றாக சூடு செய்து அதில் 3 ஸ்பூன் கருஞ்சீரகத்தை போட்டுக் கொள்ளுங்கள். கருஞ்சீரகம் கடாயில் நன்றாக வறுபட வேண்டும். படபடவென பொரிந்து அது வருபடட்டும். மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் இந்த கருஞ்சீரகத்தை வறுத்து ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து வறுத்த இந்த கருஞ்சீரகத்தை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைக்க வேண்டும். அப்போது நமக்கு அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும். அதாவது பாதாம் பருப்பு எள்ளு இவைகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கும் போது அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் அல்லவா. அதேபோல இந்த கருஞ்சீரகத்தை அரைக்கும் போதும் பிசுபிசுவென எண்ணெய் பிரிந்து நமக்கு வந்திருக்கும். அரைத்த அந்த கருஞ்சீரகத்தை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுக்கோங்க.

அரைத்த இந்த கருஞ்சீரகத்துடன் இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு ஊற்றி கலந்தால் நம் தலைக்கு அப்ளை செய்யக்கூடிய ஹேர் டை தயாராகிவிடும். கண்ணாடி பாட்டிலிலேயே இதை அப்படியே ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். மூன்று மாதத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.

- Advertisement -

தயார் செய்த இந்த ஹேர் டை ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஹேர் டையை, பிரஷில் தொட்டு உங்களுடைய தலையில் நரை முடி இருக்கும் இடத்தில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். தலை முழுவதிலும் இந்த பேக்கை போட்டாலும் தவறு கிடையாது. ஆனால் வெள்ளை முடி இருக்கும் இடத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி ஹேர் டை போலவே இதை தலையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். ஒரு சீப்பை வைத்து முடியை பாகமாக பிரித்து அப்ளை செய்யுங்கள்.

அதன் பின்பு உங்களுடைய கையில் ஒரு கிளவுஸ் போட்டுக் கொண்டு லேசாக இரண்டு நிமிடம் தலையை மசாஜ் செய்துவிட்டு, 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். (கையில் கிளவுஸ் போடாமல் இதைத் தொட்டால் உங்கள் கையில் கருப்பு நிறம் அப்படியே பிடித்துக் கொள்ளும்.) பிறகு தலை முடியை லேசாக கசக்கி அலசிக் கொள்ளலாம். ஏனென்றால் தனியாக ஷாம்பு போட்டு அலச வேண்டும் என்ற அவசியம் கூட இருக்காது. ஹேர் பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து உங்களுடைய தலையை தண்ணீரில் அலசி வந்து கண்ணாடி முன்பு நின்று பாருங்கள்.

வெள்ளை முடியில் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கே தெரியும். இந்த ஹேர் டை போட்டால் எத்தனை நாட்கள் தலையில் இருக்கும் என்பது உங்களுடைய முடியை பொறுத்து தான் இருக்கிறது. அதிகபட்சம் 15 நாட்கள் வரை இந்த கலர் போகாது.  மாதத்தில் இரண்டு அல்லது மூன்று நாள் நாள் இந்த டையை தாராளமாக பயன்படுத்தலாம். எந்த பக்க விளைவுகளும் இல்லை பயன்படுத்துவதிலும் எந்த சிரமமும் இருக்காது. இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது உங்களுடைய தலைமுடியில் இருக்கும் வெள்ளை முடி நிரந்தரமாக மறையும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -