கழுத்து, அக்குள் போன்ற இடங்களில் இருக்கும் கருமை நீங்க வீட்டிலேயே அனைவரும் எளிதாக செய்யக்கூடிய குறிப்பு என்ன?

neck-under-arm-black-milk
- Advertisement -

ஆண்கள், பெண்கள் என்று எல்லோருக்குமே இந்த பிரச்சனை இருந்தாலும் பெரும்பாலும் பெண்களுக்கு கழுத்து பகுதிகளில் அதிகம் இருக்கும் இந்த கருமை பிரச்சனையை ரொம்பவும் எளிதாக பத்து பைசா செலவில்லாமல் வீட்டிலேயே எப்படி விரட்டி அடிக்கலாம்? கழுத்து மட்டுமல்லாமல் அக்குள் மற்றும் தொடை இடுக்குகளில் இருக்கக் கூடிய கருமையும் முழுமையாக நீங்கக் கூடிய எளிமையான குறிப்பு தான், இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கழுத்தில் பெண்கள் மாங்கல்ய கயிறு அல்லது தங்க செயின் நீண்ட காலமாக அணிந்து கொண்டே இருப்பதால் பெரும்பாலானோருக்கு கருமை பிரச்சனை அதிகமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அது மட்டும் அல்லாமல் அங்கு பள்ளம் விழுந்தது போல ஒரு சிறு அறிகுறியும் இருக்கும். பெண்களை விட ஆண்களுக்கு அக்குள் பகுதிகளில் அதிகமாக கருமை படர்ந்து காணப்படும். அது போல இரு பாலினத்திருக்கும் தொடை இடுக்குகளில் கூட கருமையான திட்டுக்கள் தென்படும். இந்த இடங்களில் இருக்கக் கூடிய கருமை திட்டுகளை ரொம்பவும் சுலபமாக வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எப்படி நீக்குவது? என்பதை பார்ப்போம்.

- Advertisement -

இதற்காக நீங்கள் கிரீம் போன்றவற்றை கடைகளில் காசு கொடுத்து வாங்கி தடவினாலும் அந்த அளவிற்கு எபக்ட்டிவ் ஆக இருப்பதில்லை! எனவே வீட்டில் முதலில் லாக்டிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ள பால் எடுத்துக் கொள்ளுங்கள். பாலை எடுத்துக் கொண்டு அதை பஞ்சில் நன்கு தோய்த்துக் கொள்ளுங்கள். இந்த பஞ்சினால் முதலில் கருமை இருக்கும் இடங்களில் எல்லாம் சுத்தம் செய்யுங்கள்.

இதில் இருக்கும் லாக்டிக் ஆசிட் வினை புரிந்து பிளீச்சிங் செய்தது போல முதலில் மேலோட்டமாக கருமை திட்டுகளை சுத்தம் செய்யும். பாலுக்கு பதிலாக உருளைக்கிழங்கு சாறையும் பயன்படுத்தலாம். இதுவும் நல்ல ஒரு எஃபக்டிவ் ஆன ரிசல்ட் கொடுக்கும். அதன் பிறகு ஒரு முழு பழுத்த தக்காளி பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளி பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். முதலில் ஒரு பாதியில் சர்க்கரையை தூவிக் கொள்ளுங்கள். அதை அப்படியே கருமை இருக்கும் இடங்களில் வைத்து நன்கு தேய்த்துக் கொடுங்கள். மசாஜ் செய்வது போல ஒரு ஐந்து நிமிடம் அப்படியே தேய்த்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு பத்து நிமிடம் ஊற விட்டு விடுங்கள். நன்கு ஊறியதும் நீங்கள் அடுத்த பாதி தக்காளியில் சக்கரையை தொட்டு மறுபடியும் ஒருமுறை தேய்த்து ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது ஈர துணியால் துடைத்து எடுத்து விடுங்கள். இதில் பாதி அளவிற்கு கருமை திட்டுகள், சுற்றி இருக்கும் அழுக்குகள் எல்லாம் வந்து விடும். அதன் பிறகு ரெண்டு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து சொட்டுகள் கிளிசரின் சேர்க்க வேண்டும். பன்னீர் பாட்டிலில் இருக்கும் மூடியில் ஒரு மூடி அளவிற்கு பன்னீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் உங்களிடம் ஆவாரம் பொடி இருந்தால் அதை அரை ஸ்பூன் அளவிற்கு சேர்க்க வேண்டும். ஆவாரம் பொடி இல்லை என்றால் அதிமதுர பொடியும் சேர்க்கலாம்.

பின்னர் இதை ஒரு பேஸ்ட் போல நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் எங்கெல்லாம் கருமை இருக்கிறதோ, அங்கெல்லாம் நன்கு தடவி உலர விட்டு விட வேண்டும். ஒரு அரை மணி நேரம் நன்கு உலர்ந்த பின்பு அழுத்தம் கொடுத்து டிஷ்யூ பேப்பரால் துடைத்து எடுத்தால், கருமையான பகுதிகளில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். இதை ஒரே முறை செய்யும் போது உங்களுக்கு ரிசல்ட் கிடைக்காது. தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்து வர, விரைவிலேயே மெல்ல மெல்ல கருமை முழுமையாக மறைந்துவிடும், மீண்டும் அந்த இடத்தில் கருமை தோன்றாது.

- Advertisement -