நீங்கள் செய்யும் ரவா கிச்சடி கல்யாண பந்தியில் வைக்கும் அதே சுவையில் இருக்க, கிச்சடி செய்யும் பொழுது இந்த ஒரு பொருளை மட்டும் அதனுடன் சேர்த்து செய்து பாருங்கள்

kichadi
- Advertisement -

சமையலறை உணவுகளில் அடிக்கடி செய்யப்படும் ஒரு உணவு வகை ரவா உப்புமா. பல நேரங்களில் உங்கள் வீட்டில் என்ன உணவு என்று கேட்டால் சிலர் சொல்வது உப்புமா என்று தான். ஏனென்றால் உப்புமா செய்வது மிகவும் எளிமையான விஷயம் தான். ஆனால் ஒரு சிலருக்கு அதனை பக்குவமாக செய்ய வருவதில்லை. சிலருக்கு அதில் தண்ணீர் அதிகமாகி விடும், இல்லை என்றால் அவை சரியாக வேகாமல் இருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளினால் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஆனால் கல்யாண பந்தியில் வைக்கப்படும் ரவா கிச்சடி மட்டும் எப்பொழுதும் மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். இதற்கு என்ன காரணம் என்று நமக்கு தெரிவதில்லை. ஆனால் அந்த கல்யாண பந்தியில் வைக்கும் அதே சுவையில் நீங்கள் செய்யும் ரவா கிச்சடியும் மிகவும் சுவையாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும், என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, கேரட் – 1, உருளைக்கிழங்கு – 1, பீன்ஸ் – 10, பச்சை பட்டாணி – கால் கப், எண்ணெய் – 5 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 7, கிராம்பு – 2, சோம்பு – அரை ஸ்பூன், பிரியாணி இலை – 2, பால் – அரை கப், கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் ரவையை அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, கடாய் சூடானதும் ரவையை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை வேறொரு தட்டிற்க்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். அதேபோல் பச்சைமிளகாய், கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு இவற்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து அவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து ஒரு முறை வதக்கி விட்டு, இவற்றுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, கலந்து விட வேண்டும். பின்னர் தட்டு போட்டு மூடி காய்கறிகள் வேகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு இறுதியாக அரை கப் பால் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து கலந்துவிட வேண்டும். பிறகு 5 நிமிடம் மூடி வைத்து, அடுப்பை அனைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான கல்யாண பந்தி ரவா கிச்சடி தயாராகிவிட்டது.

- Advertisement -