கரூர் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் சிறப்புக்கள்

saneeswaran-temple
- Advertisement -

உயிர்கள் அனைத்துமே இறைவனின் அம்சம். உலகில் இருக்கும் பல்வேறு வகையான பல கோடி உயிர்களை இறைவனின் சார்பாக படைப்பவராக பிரம்ம தேவர் கருதப்படுகிறார். தன்னால் அனைத்து உயிர்களையும் உருவாக்க முடிகிறது என்று ஆணவப்பட்ட பிரம்ம தேவனின் கர்வத்தை தீர்த்த தலம் தான் கரூர் “அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர்” திருக்கோயில். இக்கோயிலின் மேலும் பல சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Siva lingam

அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு

2000 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படும் கரூர் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழ வம்ச மன்னனர்களால் கட்டப்பட்டதாகும். இங்குள்ள இறைவனான சிவபெருமான் பசுபதிநாதர், ஆனிலையப்பர் என்றும், அம்பாள் அலங்காரவல்லி, சௌந்தரவல்லி என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இக்கோயிலின் தல விருட்சமாக வஞ்சி மரம் இருக்கிறது. இக்கோயில் அருகே ஓடும் அமராவதி நதி தடாகைதீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. சைவம் சமய குறவர்களில் ஒருவரான ஞானசம்பந்தர் மூர்த்தியால் பாடல்பெற்ற சிவத்தலம். 63 நாயன்மார்களில் எறிபத்த நாயனார் பிறந்த தலம்.

- Advertisement -

கோயில் புராணங்களின் படி படைக்கும் தொழிலை செய்யும் பிரம்ம தேவனுக்கு ஏற்பட்ட கர்வத்தை போக்க, சிவபெருமான் தேவலோக பசுவான காமதேனுவிடம், வஞ்சி மரங்கள் நிறைந்த காடாக இருக்கும் இத்தலத்தில் சிவத்தவம் செய்தால் காமதேனுவும் பிரம்மனை போன்ற படைப்பு தொழில் செய்ய முடியும் என்று கூறி அனுப்பினார். சிவனின் அறிவுறுத்தல் படியே இங்கு வந்த காமதேனு பசு அசீரி வாக்கிற்கு ஏற்ப புற்று ஒன்றினுள் இருக்கும் அதிலிங்கத்தை தினமும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து வணங்கி வந்தது.

Thiruverumbur sivalingam

ஒரு சமயம் காமதேனுவின் கால் குளம்பு லிங்கத்தின் மீது பட்டு, லிங்கத்திலிருந்து ரத்தம் பீறிட்ட போது தன் செயலுக்கு வருந்திய காமதேனு முன்பு தோன்றிய சிவபெருமான் காமதேனுவின் தவத்தை போற்றி அதற்கு பிரம்மனை போன்ற படைப்பாற்றலை தந்தருள, காமதேனுவும் பிரம்மனை போன்று படைப்பு தொழில் புரிய ஆரம்பித்தது. இதை கண்டு கர்வம் நீங்கிய பிரம்மன் சிவனின் பாதம் பணிய, பிரம்மனுக்கே மீண்டும் படைப்பு தொழிலை தந்து,காமதேனுவை தேவலோகத்திற்கு அழைத்து கொண்டார் சிவருமான். காமதேனு எனும் தேவலோக பசுவால் வழிபடப்பட்டதால் இவர் பசுபதிநாதர் என்றும், ஆனிலை அப்பர் என்றும் அழைக்கப்படுகிறார்.

- Advertisement -

தமிழ் சித்தர்களில் புகழ்பெற்ற ஒருவரான கருவூர் சித்தர் பிறந்த ஊர் கரூர் ஆகும். இங்கிருக்கும் ஆனிலையப்பர் மூலவ சிவலிங்கத்தில் கருவூர் சித்தர் ஐக்கியமானதாக வரலாறு கூறுகிறது. முற்கால சோழ மன்னனான முசுகுந்த சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில் இது. மதுரையில் தெய்வானையை திருமணம் புரிந்த முருகப்பெருமானின் திருமண வைபவத்திற்கு முசுகுந்த சோழனுக்கு அழைப்பிதழ் அனுப்பட்டதாக கூறும் ஒரு பழங்கால கல்வேட்டு இக்கோயிலில் இருக்கிறது.

கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் சிறப்புக்கள்

- Advertisement -

சோழர்கள் இருந்து ஆட்சி புரிந்த நகரங்களில் ஒன்றாக கருவூர் இருக்கிறது. இக்கோயிலில் சோழர்களின் கட்டிடக்கலையில் உருவான புகழ் சோழ மண்டபம் இருக்கிறது. கோயிலுக்கு முன்பு கருங்கல்லாலான கொடிமரம் இருக்கிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வேட்டி மற்றும் சேலை சாற்றுதல், அபிஷேகம் மற்றும் அன்னதானம் செய்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

sivan lingam

கோயிலுக்குள் நடராஜர், கோஷ்டமூர்த்தியான தட்சிணாமூர்த்தி, லட்சுமி, ஆறுமுகர் போன்றோர்களுக்கு தனி சந்நிதிகள் இருக்கின்றன. இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு திருமணம் மற்றும் குழந்தைகள் வரம் கிடைக்கிறது. வேலைவாய்ப்பு தேடுபவர்கள், தொழில் மற்றும் வியாபாரங்கள் மேலோங்கி புகழும், லாபமும் பெற இங்கு வந்து வழிபட்டால் பலன் நிச்சயம் என்று கூறுகின்றனர்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில் கரூர் மாவட்ட தலைநகரான கரூரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்
கரூர்
கரூர் மாவட்டம் – 639001

தொலைபேசி எண்

4324 – 262010

இதையும் படிக்கலாமே:
ஒப்பிலியப்பன் திருக்கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kalyana pasupatheeswarar temple in Tamil. It is also called Kalyana pasupatheeswar kovil in Tamil or Kalyana pasupatheeswarar swamy temple in Tamil or Karur pasupatheeswarar in Tamil.

- Advertisement -