கருணைக்கிழங்கு பொரியல் செய்ய இப்படி சுவையான மசாலா அரைத்து கல்யாண வீட்டு சுவையில் கருணைக்கிழங்கு வறுவல் செய்து பாருங்கள்

karunai-kilangu1
- Advertisement -

கல்யாண பந்தியில் வைக்கப்படும் ஒவ்வொரு வகையான உணவிற்க்கும் தனிப்பட்ட சுவை இருக்கும். பந்தியில் சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அவியல் என்று பலவிதமான வகைகள் வைக்கப்படும். அதிலும் பல கல்யாண வீட்டு பந்தியில் வைக்கப்படும் ஒரு உணவு என்றால் அது உருளைக்கிழங்கு வறுவல் அல்லது கருணைக்கிழங்கு வறுவல் ஆகும். இவை வீட்டில் செய்யும் சுவையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இதனை சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். என்னதான் வீட்டில் முயற்சி செய்தாலும் அந்த அளவு சுவையை கொண்டு வர முடியாது. எனவே கல்யாண வீட்டில் வைக்கப்படும் அதே சுவையில் நீங்களும் உங்கள் வீட்டில் கருணைக்கிழங்கு வறுவல் செய்ய இந்த மசாலாஉடன் சேர்த்து செய்யுங்கள். வாருங்கள் இந்த சுவையான கருணைக்கிழங்கு வறுவலை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கருணை கிழங்கு – அரை கிலோ, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – ஒரு கைப்பிடி, தேங்காய் – 2 சில்லு, சோம்பு – ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, உப்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 50 கிராம், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கருணைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு, சுத்தமாக கழுவி கொண்டு, அதனை சதுர வடிவில் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் கால் ஸ்பூன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்துவிட்டு, அடுப்பின் மீது வைத்து, கருணைக் கிழங்கு பாதி அளவு வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.

பின்னர் தண்ணீரை வடிகட்டி கருணைக் கிழங்கை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, வர மிளகாய் மற்றும் இரண்டு சில்லு தேங்காய் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அடுப்பின் மீது கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, வேக வைத்த கருணைக்கிழங்கை எண்ணெயில் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை தனியாக எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அதே கடாயில் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளித்து, அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து பொறிக்க வேண்டும்.

பிறகு மசாலாவை எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். நல்ல மசாலா வாசனை வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் நேரத்தில் மசாலா கெட்டியாக வந்தவுடன் இதனுடன் வறுத்து வைத்துள்ள கருணைக் கிழங்கை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு இவற்றுடன் உப்பு சேர்த்து கலந்து விட்டு, இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட வேண்டும்.

- Advertisement -