இந்த உருளைக்கிழங்கு போண்டா பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். எப்பொழுதும் சட்டென்று செய்யக்கூடிய இந்த போண்டாவை ஒரு முறை இப்படி செய்து ருசித்துப் பாருங்கள்

bonda
- Advertisement -

அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கும், போரடிக்கிறது என்று சொல்லும் பெரியவர்களுக்கும் சட்டென செய்யக் கூடிய ஸ்நாக்ஸ் வகைகளில் மிகவும் பிடித்தது இந்த உருளைக்கிழங்கு போண்டா தான். இதனை நினைத்த உடனேயே செய்து கெடுக்க முடியும். இதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி, புதினா சட்னி, காரச் சட்னி இவற்றில் எதை வேண்டுமானாலும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இதனை செய்வதற்கு நேரமும் குறைவாகத் தான் செலவாகும். அதிலும் இதன் ருசியை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பல டீக்கடைகளிலும், கல்யாண வீட்டு பந்தியிலும் கூட இந்த உருளைக்கிழங்கு போண்டாவை தவறாமல் வைத்திருப்பார்கள். வாருங்கள் இந்த சுவையான உருளைக்கிழங்கு போண்டாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
உருளைக் கிழங்கு – 250 கிராம், கடலை மாவு – 250 கிராம், பச்சை மிளகாய் – 2, உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 500 மில்லி, வெங்காயம் – 2, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று.

- Advertisement -

செய்முறை:
உதவி உருளைக்கிழங்கை தண்ணீரில் சுத்தமாக அலசிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி கொண்டு, அதனுடன் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு உருளைக்கிழங்கு வைத்துள்ள பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும் அதேபோல் சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும் பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக ஆற வைத்து தோல் உரித்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு கிணற்றுக்கு மாற்ற வேண்டும். பிறகு இதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் கடலை மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, 500ml எண்ணெய் சேர்க்க வேண்டும். அதன்பிறகு கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும். பின்னர் இந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து கடலை மாவில் தோய்த்து, எண்ணெய் நன்றாக காய்ந்ததும், எண்ணெயில் சேர்த்து சிவந்த நிறம் வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.

- Advertisement -