இந்த கல்யாண வீட்டு காய் பொரியலை செஞ்சு பாருங்க. அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் உங்க வீட்டில என்ன விசேஷம்னு கேப்பாங்க.

poriyal
- Advertisement -

நாம் திருமணம் போன்ற விசேஷகளுக்கு சென்று வந்தால் முதலில் கேட்பது என்ன வடை பாயாசத்தோடு விருந்தா என்று தான். ஏன் இந்த வடை பாயாசம் விருந்து சாப்பாடு நம் வீட்டில் சமைப்பதில்லையா? வீட்டில் விசேஷமான நாட்களில் வடை பாயாசம் வைத்து தானே நாம் சாமி கும்பிடுகிறோம். அப்புறம் என்ன இந்த கல்யாண வீட்டில் மட்டும் இது விசேஷம் என்றால், அவர்கள் செய்யும் முறை தான் விசேஷமே தவிர வடை பாயாசம் அல்ல.

அதே போல்தான், நாம் என்ன தான் வீட்டில் விதவிதமாக சமைத்தாலும் இந்த திருமணங்களில் செய்வது போல் நம்மால் வீட்டில் செய்ய முடிகிறதா என்றால் அது கொஞ்சம் சிரமம் தான். அதே வகை காய்கறிகளை நாம் வீட்டில் சமைத்தாலும் அந்த ருசி இருப்பதில்லை. இத்தனைக்கும் நாம் இரண்டு மூன்று பேருக்கு தான் சமைக்கிறோம். அவர்கள் அத்தனை பெரிய எண்ணிக்கையில் சமைத்தாலும் அவ்வளவு ருசியாக இருப்பதற்கு பொதுவாக கை பக்குவம் என்று சொல்லி விடுகிறோம். அதில் செய்யும் முறை தான் வேறு தவிர இதில் ஒன்றும் பெரிய விசேஷம் இல்லை. அப்படி ஒரு கல்யாண வீட்டு காய் பொரியலை எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் -1, கோஸ் -1 கப், பீன்ஸ் -1/2 கப், கேரட் 1/2 கப், பச்சை பட்டாணி – அரை கப், பச்சை மிளகாய் – 5, துருவிய தேங்காய் – 1/2 கப், கடுகு – 1 டீஸ்பூன், சீரகம் -1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை -1 கொத்து, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

காய்கறிகளை முதலில் தனித்தனியாக பொடியாக அறிந்து தண்ணீரில் அலசி நன்றாக வடித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான கடாயை வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, சீரகம் போட்டு பொரிந்ததும் அதில் சிறிது பெருங்காயத் துளையை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதில் வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் மூன்றையும் ஒன்றாகவே சேர்த்து சிறிது நேரம் வதக்குங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: காரசாரமான கடலை பருப்பு சட்னி ஒரு முறை இப்படி அரச்சு பாருங்க. இட்லி தோசை சுட சுட சாதத்திற்கு வேற லெவல் சைடிஷ் இது.

அதன் பிறகு முதலில் அலசி எடுத்து வைத்த முட்டை கோசை இதனுடன் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை ஒரு நிமிடம் பிரட்டி விடுங்கள். அதன் பிறகு கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றையும் இதனுடன் சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு மூடி வைத்து ஐந்து நிமிடம் அப்படியே வேக விடுங்கள். காய்யில் இருக்கும் தண்ணீரில் இவை எல்லாம் நன்றாக வெந்து விடும் (தேவைப்பட்டால் லேசாக தண்ணீர் தெளித்து கொள்ளலாம்). இப்போது மூடியை திறந்து பொரியலுக்கு தேவையான உப்பு சேர்த்து விடுங்கள்.

மறுபடியும் ஒரு ஐந்து நிமிடம் வெந்தவுடன் காய்கள் தேங்காய் துருவலை சேர்த்து பிரட்டியவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள். தேங்காய் துருவல் சேர்த்த பிறகு காய்களை மூடவும் கூடாது அதிக நேரம் வதக்கவும் கூடாது. இதோ கல்யாண வீட்டு காய் பொரியல் அதே சுவையுடன் அருமையாக தயார் ஆகி விட்டது . நீங்களும் உங்க வீட்ல செஞ்சு அசத்துங்க.

- Advertisement -