காரசாரமான கடலை பருப்பு சட்னி ஒரு முறை இப்படி அரச்சு பாருங்க. இட்லி தோசை சுட சுட சாதத்திற்கு வேற லெவல் சைடிஷ் இது.

kadalai-paruppu-chutney
- Advertisement -

கடலைப்பருப்பை வைத்து காரசாரமான ஒரு சட்னி ரெசிபியை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். சுடச்சுட இட்லிக்கு தோசைக்கும் தொட்டு சாப்பிட இந்த சட்னி அட்டகாசமான சுவை இருக்கும். சுடச்சுடன்னு சாதம் இருந்தால் அந்த சாதத்தில் இந்த சட்னியை போட்டு பிசைந்து சாப்பிடலாம். அதாவது சட்னியை அரைக்கும் போது துவையல் போல கட்டியாக அரைத்து கொஞ்சம் தனியாக சாதத்திற்கு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இவ்வளவு சுலபமான சுவையான ஆரோக்கியமான இந்த சட்னியை யாரும் மிஸ் பண்ணாதீங்க.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி வர மிளகாய் – 8 போட்டு, பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் மீதம் எண்ணெய் இருக்கும். அதில் கடலை பருப்பு – 4 டேபிள் ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வறுத்து எண்ணெயை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். (வறுத்த கடலைப்பருப்பை எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் சாப்பிடும் பக்குவத்திற்கு இருக்க வேண்டும்.)

- Advertisement -

அதே கடாயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பிரவுன் கலர் வர வேண்டும். வெங்காயத்தை நன்றாக வதக்கவில்லை என்றால் சட்னியின் சுவையில் லேசாக பச்சை வெங்காய வாடை, இனிப்பு சுவை தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக வெங்காயத்தை நன்றாக வதக்கிய பின்பு நறுக்கிய தக்காளி பழம் இரண்டு சேர்த்து மீண்டும் நன்றாக வதக்குங்கள். ஒரு மூடி போட்டு தக்காளி பழங்களை பச்சை வாடை போக வேக வைக்கும் எடுத்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. தக்காளியின் பச்சை வாடையும் வரக்கூடாது.

வதக்கிய வெங்காயம் தக்காளியையும் ஒரு தட்டில் கொட்டி ஆற வையுங்கள். அதன் பின்பு மிக்ஸி ஜாரை எடுத்து முதலில் வருத்த வரமிளகாயையும் கடலைப்பருப்பையும் போட்டு தண்ணீர் ஊற்றாமல் நைசாக பொடி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, முதலில் தண்ணீர் ஊற்றாமல் அறையுங்க. அதுக்கு அப்புறம் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, இதை சட்னி போல அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: எளிமையான முறையில் சாஃப்டான பஞ்சு போன்ற ராகி இட்லிக்கு என்ன செய்யணும்? அடிக்கடி ராகி இட்லி சாப்பிட்டால் எலும்பு தேய்மானமே வராது தெரியுமா?

இந்த சட்னியை திக்காகவும், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்தும் எப்படி வேண்டுமென்றாலும் பரிமாறலாம். அப்படி இல்லை என்றால் நீர்க்க இந்த சட்னியை கரைத்து இட்லி மேலே ஊற்றி, இட்லியை ஊற வைத்து சாப்பிட்டாலும் அட்டகாசமாகத்தான் இருக்கும். சட்னிக்கு இறுதியாக ஒரு தாளிப்பு கொடுத்து விடுங்கள்.

இரண்டு ஸ்பூன் எண்ணெயில், கடுகு, உளுந்து, வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், போட்ட தாளிப்பை சட்னியில் கொட்டி விட்டால் சட்னி இன்னும் மணக்க மணக்க மாறிவிடும். அவ்வளவு தான். சுவையான கடலை பருப்பு சட்னி தயார். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -