கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொரியலை ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க. சூப்பரா வரும்.

potato-fry
- Advertisement -

என்னதான் வீட்டில் உருளைக்கிழங்கு பொரியல் செய்தாலும் கல்யாண வீடுகளில், பந்தியில் வைக்கக் கூடிய அந்த உருளைக்கிழங்கின் சுவை நம் வீட்டில் வராது. பந்தியில் வைக்கக்கூடிய அதே உருளைக்கிழங்கு பொரியலின் சுவையை நம் வீட்டிலும் கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி உங்க வீட்ல ஒரு வாட்டி உருளைக்கிழங்கு பொரியலை ட்ரை பண்ணி பாக்கணும். அவ்வளவு தான். வாங்க அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

முதலில் 1/4 கிலோ அளவு உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு உப்பு போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். வெந்த உருளைக்கிழங்கை தோல் உரித்து சிறிய துண்டுகளாக வெட்டி அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். (உருளைக்கிழங்கை ரொம்பவும் கொழகொழவென வேக வைத்து விடக்கூடாது. பக்குவமாக வேகவைத்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

20 பல் சின்ன வெங்காயத்தை தோலுரித்து சிறிய உரலில் போட்டு ஒன்றும் இரண்டுமாக தட்டி வைத்துக்கொள்ளுங்கள். 10 பல் தோலுரித்த பூண்டை உரலில் போட்டு இதையும் ஒன்றும் இரண்டுமாக இடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

masala idli

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, தட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு, முதலில் நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன், தட்டி வைத்திருக்கும் பூண்டு பல்லை சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். பூண்டின் பச்சை வாடை முழுமையாக போகட்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு, குழம்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், சோம்பு தூள் – 1/4 சேர்த்து இந்த எல்லா மசாலாப் பொருட்களையும் ஒரு நிமிடம் போல நன்றாக வதக்கி விடுங்கள். அதன் பின்பு இரண்டு ஸ்பூன் தண்ணீரை ஊற்றி இந்த மசாலாவை நன்றாக கொதிக்க விட வேண்டும். (குழம்பு மிளகாய் தூள் இல்லையென்றால் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.)

potato-fry1

மசாலாவின் பச்சைவாடை முழுமையாக நீங்கும் வரை இந்த மசாலாவை சிம்மிலேயே கொதிக்க விடுங்கள். அதன் பின்பு ஒரே ஒரு பச்சை மிளகாயை இதோடு சேர்த்து, வேக வைத்து தோலுரித்து வெட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இந்த கடையில் இருக்கும் மசாலாவுடன் சேர்த்து 10 நிமிடம் போல மெதுவாக கிளறி விடுங்கள். மசாலா அனைத்தும் உருளைக்கிழங்கில் ஒட்டி பிடிக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். அடி பிடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

potato-fry2

இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி கமகம வாசத்தோடு சுடச்சுட பரிமாறிக் கொள்ளுங்கள். ரசம் சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் எல்லாத்துக்கும் சூப்பர் சைட் டிஷ் இது.

- Advertisement -