இன்று வளர்பிறை ஏகாதசியில் இந்த மந்திரம் துதித்தால் என்ன பலன் தெரியுமா?

vishnu

அகிலங்கள் அனைத்தையும் காக்கும் தெய்வமாக மகாவிஷ்ணுவான ஸ்ரீமன் நாராயணன் இருக்கிறார். உண்மையான பக்தியுடன் தன்னை வழிபடுபவர்களுக்கு அனைத்தையும் வழங்குபவராக இருப்பவர் பெருமாள். அவரை வழிபடுவதற்குரிய சிறப்பு நாளாக அனைத்து மாதங்களிலும் ஏகாதசி தினங்கள் வருகின்றன. அந்த வகையில் சித்திரை மாத வளர்பிறையில் வருகின்ற காமதா ஏகாதசி தினமான இன்று பெருமாளை வழிபடுவதற்குரிய மந்திரம் இதோ.

Perumal

காமதா ஏகாதசி மந்திரம்

ஓம் சஹஸ்ஹர சீர்ஷம் தேவம் விஷவாக்ஷம்
விச்வசம்புவம் விச்வம் நாராயணம் தேவமக்ஷரம்

அகிலமெல்லாம் காக்கும் ஸ்ரீமன் நாராயணனாகிய பெருமாளுக்குரிய சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் துதிப்பது நல்லது. மாதத்தில் வருகின்ற ஏகாதசி தினங்களில் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பெருமாளின் படத்திற்கு தீப மேற்றி இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பதால் உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் சீக்கிரம் நிறைவேறும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்கள், மனக் கவலைகள் அனைத்தும் நீங்கும்.

Perumal

“ஆயிரக்கணக்கான தலைகளைக் கொண்டவரும், ஒளிமிக்கவரும், அனைத்தையும் பார்ப்பவரும், உலகங்ளுக்கெல்லாம் மங்களங்களை அளிப்பவரும், அந்த உலகமாகவே இருப்பவரும், அழிவற்றவரும், மேலான நிலை உடையவருமாகிய நாராயணனை தியானம் செய்கிறேன்” என்பதே இந்த ஸ்லோகத்தின் பொதுவான பொருள் ஆகும். எப்படிப்பட்ட கொடியவரும் “நாராயணா” என்கின்ற நாமத்தை உச்சரித்தாலே அவரின் பாவங்கள் அனைத்தும் தீருகிறது. அந்த நாராயணன் ஆகிய பெருமாளுக்குரிய இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
வருமானம் பெருக வீண் செலவு குறைய மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kamada ekadashi mantra in Tamil. It is also called as Perumal manthirangal in Tamil or Vishnu mantras in Tamil or Perumal slokas in Tamil or Mahavishnu manthirangal in Tamil.