காமாட்சி அம்மன் விளக்கு பாசி பிடிக்காமல் இருக்க வீட்டுக்குறிப்பு

vilakku
- Advertisement -

நம்முடைய பூஜை அறையில் தினமும் பித்தளை காமாட்சியம்மன் விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றும் வழக்கம் இருக்கும். தினம் தினம் அந்த விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதால், விளக்குக்கில் பச்சை நிறத்தில் பாசிப்படிய தொடங்கிவிடும். அது மட்டும் அல்லாமல் விளக்கு ஏற்றும் இடத்தில் கரி ஒட்டிக்கொள்ளும். சில பேர் இதற்காகவே பூஜை பாத்திரங்களை வாரத்தில் இரண்டு நாள் கூட சுத்தம் செய்வார்கள்.

சில பேர் வாரத்தில் ஒரு நாள் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வார்கள். ஆனால் சில பேருக்கு பூஜை பாத்திரங்களை தேய்க்க நேரம் இருக்காது. வேலைக்கு செல்லக்கூடிய பெண்களாக இருந்தால் மாதத்தில் இரண்டு முறை பூஜை பாத்திரத்தை தேய்க்கும் வழக்கம் வைத்திருப்பார்கள். நீங்கள் எத்தனை நாளுக்கு ஒரு முறை பூஜை பாத்திரங்களை தேய்த்தாலும் சரி, உங்க விளக்கு பாசி பிடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் எண்ணெயில் இந்த ஒரு பொருளை போடுங்க போதும். பிறகு பாருங்க உங்க வீட்டு பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு தினம் தினம் புதுசு போல ஜொலிக்கும்.

- Advertisement -

காமாட்சி அம்மன் விளக்கு பாசி பிடிக்காமல் இருக்க.

வழக்கம்போல பூஜை அறையில் ஏற்றும் விளக்கை எடுத்து எண்ணெயையெல்லாம் துடைத்து எடுத்துவிட்டு, குங்குமத்தை எல்லாம் துடைத்து எடுத்துவிட்டு எப்படி தேய்பீர்களோ, அதே போல தேய்த்துக் கொள்ளுங்கள். புளி, பாத்திரம் தேய்க்கும் லிக்விட், எலுமிச்சம் பழம், சபீனா, இதில் எந்த பொருட்களைக் கொண்டு உங்கள் விளக்கை சுத்தம் செய்தாலும் சரி. அது உங்களுடைய விருப்பம்.

இந்த பொருட்கள் அல்லாமல் கை கழுவ பயன்படுத்தும் ஹேண்ட் வாஷ், டொமேட்டோ சாஸ், இதையெல்லாம் கூட நீங்க அந்த விளக்கின் மேலே லேசாக கையிலேயே தடவி விட்டு ஐந்து நிமிடம் கழித்து ஒரு தேங்காய் நார் போட்டு தேய்த்தாலே போதும். விளக்கு நிமிடத்தில் பளிச்சென மாறிவிடும். இப்படி தேய்த்த விளக்கை ஒரு காட்டன் துணியை வைத்து முதலில் சுத்தமாக துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தான் ஒரு முக்கியமான வேலை இருக்கிறது.

- Advertisement -

ஒரு சின்ன கிண்ணத்தில் நீங்கள் விளக்கேற்றும் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், நான்கைந்து சொட்டுகள் எடுத்து ஊற்றிக் கொள்ளவும். அதாவது 1/4 ஸ்பூன் அளவு எண்ணெய் இருக்கட்டும். நீங்க பஞ்ச கூட்டு எண்ணெயை, விளக்கேற்ற பயன்படுத்தினாலும் அதையும் இந்த டிப்ஸுக்கு உபயோகப்படுத்தலாம். அந்த எண்ணெயில் 3 சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது இந்த கலவையை, தேய்த்து வைத்திருக்கும் விளக்கு மேலே எல்லா இடங்களிலும் படும்படி தடவி விடுங்கள். விளக்குக்கு மேல் பக்கம், எண்ணெய் ஊற்றும் இடம், காமாட்சியம்மன் முகம் எல்லா இடத்திலும் எண்ணெய் படும் படி விரலினாலே தடவி விடுங்கள். கடையிலிருந்து புதுசாக வாங்கிய விளக்கு போல, தங்கத்தால் செய்யப்பட்ட காமாட்சியம்மன் விளக்கு போல உங்களுடைய விளக்கு அப்படியே மின்னும்.

- Advertisement -

இந்த மஞ்சள் கலந்த எண்ணெயை தடவிய காமாட்சியம்மன் விளக்கை அப்படியே கொண்டு போய் சிறிது நேரம் வெயிலில் காய வைத்து எடுத்து வந்து மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, விளக்கேற்றும் எண்ணெயை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றினால் எத்தனை நாள் ஆனாலும் சரி உங்கள் வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கு, எண்ணெய் ஊற்றும் இடத்தில் பச்சை நிறத்தில் பாசி படியாது.  விளக்கேற்றும் இடத்திலும் கரி அடர்த்தியாக தேய்க்க முடியாத அளவுக்கு பிடிக்காது.

அப்படியே கருப்பு நிறம் ஒட்டி இருந்தாலும் அதை மீண்டும் தேய்க்க ரொம்ப ரொம்ப சுலபமாக இருக்கும். சில பேர் வீட்டில் எல்லாம் காமாட்சி அம்மன் விளக்கு போகப் போக கருப்பு நிறத்தில் மாறிவிடும். காரணம் நம் விளக்கு ஏற்றி வைக்கும் போது அந்த தீபத்திலிருந்து வெளிப்படக்கூடிய கரி, அந்த விளக்கில் ஒட்டிவிடும்.

இதையும் படிக்கலாமே: பத்து வருடமாக படிந்திருக்கும் உப்பு கறை நீங்க எளிய வீட்டு குறிப்பு

மீண்டும் அதை நாம் தேய்கும் போது சரியாக கேட்கவில்லை என்றால், அந்த கருப்பு நிறம் காமாட்சி அம்மன் விளக்கு நிரந்தரமாக படிந்து விடும். மேல் சொன்ன குறிப்பை பின்பற்றும்போது உங்கள் வீட்டில் இருக்கும் காமாட்சி அம்மன் விளக்கு எப்போதும் புத்தம் புதுசு போல ஜொலித்துக் கொண்டே இருக்கும். தேவைப்படுபவர்கள் இந்த வீட்டு குறிப்பு பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -