- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான கம்பு அடை செய்வது இவ்வளவு ஈசியா? இந்த ரெசிபியை மிஸ்...

உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான கம்பு அடை செய்வது இவ்வளவு ஈசியா? இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம நீங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க.

- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் தரும் சிறுதானியங்களை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வது மிக மிக நல்லது என்பதை எத்தனை முறை நினைவுபடுத்தினாலும், இட்லி தோசை பொங்கல் பூரி தான் நம் கண்முன்னே வந்து நிற்கின்றது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த வரிசையில் மிக மிக சுலபமான ஆரோக்கியமான கம்பு அடை தோசை செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கம்பு மாவில் இந்த அடை செய்தாலும் நன்றாகத்தான் இருக்கும். இருப்பினும் முழு கம்பை கடையிலிருந்து வாங்கி சுத்தம் செய்து ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதிலிருந்து 1 கப் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி விட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 1 மணி நேரத்தில் இருந்து 1 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கம்பு நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஊறவைத்த இந்த கம்போடு வறமிளகாய் 2, சீரகம் 1/2 ஸ்பூன், இஞ்சி 1/2 இன்ச், தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மைய அரைத்து கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் விடக்கூடாது. சாதாரணமாக அடை மாவுக்கு, கெட்டியாக மாவு அரைப்போம் அல்லவா, அதேபோல இந்த மாவையும் அரைத்து எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கடலை பருப்பு – 1/2 ஸ்பூன், போட்டு சிவக்க வறுக்க வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன், இந்த தாளிப்பை அப்படியே எடுத்து மாவில் கொட்டி கலந்து கொள்ளுங்கள். இப்போது அடை வார்க்க மாவு நமக்கு தயாராக உள்ளது.

- Advertisement -

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து தோசைக்கல் மிதமாக சூடானதும் மேலே எண்ணெய் தடவி அடை மாவை எடுத்து கல்லில் ஊற்றவேண்டும். சிறியதாக கொஞ்சம் தடிமனாக தேய்த்து விட்டு, மேலே நெய் அல்லது எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறம் வரும் வரை சிவக்க வைத்து எடுத்து சுடச்சுட பரிமாறினால் சூப்பரான கம்பு அடை தயார்.

இந்த ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. இதற்கு சைட் டிஷ் ஆக ஒரு தேங்காய் சட்னி இருந்தால் கூட போதும்.

சற்று முன்