3 நாட்களில் கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம், கண்ணுக்கே தெரியாமல், காணாமல் போகும். இந்த டிப்ஸ் மட்டும் நீங்க ட்ரை பண்ணி பாருங்க!

eye

இன்றைய சூழ்நிலையில் பெண்கள் அதிக நேரம் கணினியின் முன்பு அமர்ந்து, கணினியை உற்று நோக்குவதன் மூலமாகவும் வெகுநேரம் கைபேசியை பார்த்துக் கொண்டே இருப்பதன் மூலமாகவும், தூக்கம் கெட்டுப் போகின்றது. கண்ணுக்கு கீழே கருவளையம் வர தொடங்குகின்றது. பத்தில் எட்டு பெண்களுக்கு இன்றைய சூழ்நிலையில் கண்கருவளையம் பிரச்சனை வந்து விடுகின்றது. இதிலிருந்து விடுபட என்ன செய்வது, என்பதைப் பற்றிய சின்ன சின்ன குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

eye1

கண்ணுக்கு கீழே கருவளையம் வருகிறது என்றால் முதலில் நம்முடைய உடலுக்கு ஓய்வு தேவை என்பது தான் அர்த்தம். உடலுக்கும் கண்ணுக்கும் சரியான முறையில் ஓய்வு கொடுத்து வந்தாலே கண்ணுக்கு கீழே கருவளையம் வருவதும் குறையும். மன அழுத்தம் இருக்கக் கூடாது. இதோடு சேர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்தான உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் முற்றிலுமாக நீங்கிவிடும். சில பேருக்கு கண்ணாடியை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமாகவும் கண்ணுக்குக் கீழே கருவளையம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

சரி, இந்த கருவளையத்தை சுலபமான முறையில் போக்க என்ன செய்யலாம்? முதலில் விளக்கெண்ணெயை கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தமான விளக்கெண்ணெய்யை கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி, அந்த எண்ணெயை உங்களுடைய விரலில் ஒரு சொட்டு தொட்டு, கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தின் மேலே மசாஜ் செய்ய வேண்டும்.

Vilakennai

கண்ணை சுற்றி வட்ட வடிவிலும் மசாஜ் செய்யலாம். அல்லது வலது பக்கம் இடது பக்கம் என, விரல்களை மாற்றி மாற்றி, மொத்தமாக அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக மூன்று நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவேண்டும். 3 நாட்களேக்கு, இப்படியாக கண்களை சுற்றி 3 நிமிடம் மசாஜ் செய்து விளக்கெண்ணையை சிறிது நேரம் முகத்திலேயே அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

குறைந்தது ஒரு மணி நேரமாவது அந்த விளக்கெண்ணை அப்படியே இருக்கட்டும். அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட்டால் கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் படிப்படியாக கண்ணுக்கு தெரியாமல் காணாமலேயே போய்விடும். இரவு நேரத்தில் மசாஜ் செய்தால், காலையில் வரை விளக்கெண்ணையை அப்படியே கூட விட்டுவிடலாம். தவறு கிடையாது. ஆனால் இது உடலுக்கு அதிக குளிர்ச்சியை கொடுக்கும். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்த பிறகு, வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி செய்து வந்தால் கண்கள் எப்போதும் அழகாகவும் குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

eye-brow

சில பேருக்கு கண்ணுக்கு மேலே இருக்கும் புருவங்கள் அடர்த்தியாக இருக்காது. அந்த புருவங்களில் இப்படியாக விளக்கெண்ணெயை வைத்து 20 நிமிடங்கள் மசாஜ் செய்து, அதன் பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடவேண்டும். விளகெண்ணையை பயன்படுத்த முடியாதவர்கள் புருவங்களுக்கு கொஞ்சமாக தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக கலந்து, இதை புருவங்களில் மசாஜ் செய்து வந்தால் கூட புருவங்கள் அடர்த்தியாக வளரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படிக்கலாமே
ஒரே ஒரு முறை, உங்கள் உதட்டில் இந்த ஒரு பொருளை மட்டும் தடவி பாருங்கள்! எப்படிப்பட்ட கருப்பான உதடும், நிரந்தரமாக ஒரே நாளில் பிங்க் நிறத்துக்கு மாறும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.