ஒரே ஒரு முறை, உங்கள் உதட்டில் இந்த ஒரு பொருளை மட்டும் தடவி பாருங்கள்! எப்படிப்பட்ட கருப்பான உதடும், நிரந்தரமாக ஒரே நாளில் பிங்க் நிறத்துக்கு மாறும்.

lip

நிறைய பேரின் முகம் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும், அவர்களுடைய உதடு பார்ப்பதற்கு கருப்பு நிறமாகவோ அல்லது வெளிர் நிறமாகவும், வெலுத்துப் போயிருக்கும். நம்முடைய முகத்தின் அழகு நிறைவாக வேண்டும் என்றால், உதடுகள் பிங்க் நிறத்தில் தான் இருக்க வேண்டும். உதடுகளை இயற்கையான முறையில் பிங்க் நிறத்திற்கு எப்படி மாற்றுவது? நம்முடைய உதடுகள் பிங்க் நிறம் அல்லாமல் கருப்பு நிறத்திலும் வெளிர் நிறத்திலோ அல்லது நீல நிறத்திலோ இருப்பதற்கு காரணங்கள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

lip1

உதடுகள் அடர் நீல நிறத்தில் இருந்தால், உங்களுடைய உடலில் ஏதோ ஒரு கோளாறு இருக்கின்றது என்று அர்த்தம். ஆகவே, உதடுகள் நீல நிறத்தில் மாறும் பட்சத்தில் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவதுதான் நல்லது. அடுத்தபடியாக உடம்பில் ரத்த சோகை இருக்கும் பட்சத்தில், உதடுகள் வெளிர் நிறத்தில் தோற்றம் அளிக்கும். உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து இரும்பு சத்து குறைந்தாலும், உதடுகள் வெள்ளையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உதடுகள் வெளுத்து போனால், உங்கள் உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதடுகள் கருப்பு நிறத்தில் மாறுதற்கு மற்றொரு காரணம் தேவையற்ற கெட்ட பழக்கங்கள் இருப்பதும். இதோடு சேர்த்து வெயிலில் அதிக நேரம் இருக்கும் பட்சத்தில், உதடுகள் கருப்பு நிறத்தில் மாறும். இந்த காரணங்கள் ஒருபக்கம் இருக்க, நிறைய பெண்கள் தங்களுடைய உதடுகளை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, செயற்கை உதட்டுச் சாயங்களை மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் உதட்டுச் சாயங்கள் ஆக இருந்தாலும் சரி, விலை உயர்ந்த உதட்டுச் சாயங்கள் ஆக இருந்தாலும் சரி எப்போதுமே உதட்டில் பூசி கொண்டு இருக்கக் கூடாது.

lip2

விசேஷங்களுக்கு செல்லும் போது அல்லது தேவை எனும்போது மட்டும்தான் உதடுகளுக்கு உதட்டு சாயத்தை பயன்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் உதட்டில் உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு இருந்தாலும் உதட்டின் நிறம் மாறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சரி, இந்த நிறம் மாறிய உதட்டை எப்போதுமே பிங்க் நிறத்தில் வைத்துக் கொள்ள என்ன செய்யலாம்? சில டிப்ஸ் உங்களுக்காக! முதலாவதாக ஒரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் – 1/2 ஸ்பூன், எலுமிச்சை பழ சாறு – 1/2 ஸ்பூன், தேன் – 1/2 ஸ்பூன் இந்த மூன்று பொருட்களையும் கலந்து உதடுகளின் மேல் தடவி வரும் பட்சத்தில் உங்களுடைய உதடு ஒரே நாளில் நல்ல மாற்றத்தை பெறும். மூன்று பொருட்களையும் சேர்த்து மெதுவாக உதடுகளில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் இப்படி செய்துவர வேண்டும். அதன் பின்பு வாரத்தில் இரண்டு நாட்கள் இப்படி செய்தால் கூட போதும்.

lip3

அடுத்தபடியாக உங்களுடைய உதடு சிவப்பு நிறமாக இருக்க கொஞ்சமாக மாதுளம்பழ முத்துக்களை எடுத்து நசுக்கி அந்த சாறை உதட்டின் மேல் பூசி வரலாம். கேரட், மாதுளம்பழம், பீட்ரூட் போன்ற உடலுக்கு ரத்தத்தை அதிகப்படியாக ஊறச் செய்யும் காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் உதடுகள் சிவப்பு நிறத்தில் மாறும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உதட்டுக்கு மேலே தடவும் பொருட்களினால் மட்டும், உங்களுடைய உதடுகளை பிங்க் நிறத்தில் மெயின்டெய்ன் பண்ண முடியாது. ஊட்டச்சத்துகள் அவசியம் தேவை என்பதை நினைவில் கொண்டு இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அட! இப்படி கூட தக்காளியை வைத்து, காரச் சட்னி அரைக்கலாமா? கொஞ்சம் வித்தியாசமாக ‘பச்சைமிளகாய் தக்காளி கார சட்னி’ ரெசிபி உங்களுக்காக!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.