உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை பார்த்து, பொறாமைப்பட்டு, வயிற்றெரிச்சல் பாடுபவர்களின் கண் திருஷ்டி கருகிப் போகும். இந்த 3 பொருட்களை நெருப்பில் போட்டால்!

nerupu

நம்முடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முதல் தடையாக இருப்பது, நம்முடைய முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமைப் படுபவர்களின் கண்களும், கண் திருஷ்டியும் பெருமூச்சுதான். இதை தடுப்பதற்கு பல வழிமுறைகள் ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும் கண்திருஷ்டியை கழிக்க போகும் அளவிற்கு, கருப்பு நிற, சக்தி வாய்ந்த பரிகாரத்தை தான், இன்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதில் சிரமப்பட எதுவுமே கிடையாது. 3 பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் தனியாக திருஷ்டி கழிப்பதற்கு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

thristi

இந்தக் குறிப்பில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளை பின் பற்றி, உங்கள் திருஷ்டியை நீங்களே நெருப்பில் போட்டு பொசுக்கி விடுங்கள். இதற்கு முதலில் உங்களுடைய மன உறுதியும், மன ஒருமைப்பாடும் தான் தேவை. இதை செய்து விட்டால், எந்த பொறாமை குணமும் நம் முன்னேற்றத்தை தடுக்க முடியாது என்ற எண்ணத்தை ஆழ் மனதில் வைத்துக்கொண்டு, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

சரி, பரிகாரத்திற்கு தேவையான பொருட்களை பார்த்துவிடுவோம். கொஞ்சம் பெரிய அளவில் இருக்கக்கூடிய மண் அகல் விளக்கு, கருஞ்சீரகம், கருப்பு எள்ளு, மிளகு, ஒரு துண்டு சூடம் (கற்பூரம்) அவ்வளவு தான். இதில் சொல்லப்பட்டிருக்கும் மூன்று பொருட்களும் கருப்பு நிறம் என்பதால், இது கருப்பு நிற பரிகாரம் என்று கூட சொல்லலாம். வாரத்தின் முதல் நாளில் இருந்து நம் உடம்பில் சேரும் கண்திருஷ்டியை, வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று கழித்துவிட வேண்டும் அல்லது மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம். அது உங்களுடைய இஷ்டம் தான்.

Agal-Vilakku

ஆனால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை திருஷ்டி கழிப்பதே சிறப்பு. கிழக்கு பார்த்தவாறு உட்கார்ந்து கொள்ளுங்கள். மேலே சொல்லப்பட்டுள்ள 3 பொருட்களில் இருந்தும் 1/2 ஸ்பூன் அளவு எடுத்து உள்ளங்கைகளில், வைத்துக் கொண்டு, உங்கள் உடம்பில் இருக்கும், உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் எதிர்மறை ஆற்றல் எல்லாம், உடம்பை விட்டு வெளியேற வேண்டும் என்று, ஒரு முறை உச்சரித்து, இந்த 3 பொருட்களையும் மண் அகல் விளக்கில் போட்டு விடுங்கள். ஒரு சூடத்தை வைத்து அந்த 3 பொருட்களையும் பற்றவைத்து விடுங்கள்.

- Advertisement -

அந்த பொருட்கள் (கருப்பு எள்ளு, கருஞ்சீரகம், மிளகு) அனைத்தும் தீயில் பொசுங்கி எரிய தொடங்கிவிடும். அந்த நெருப்பை உற்றுநோக்கி, உங்கள் இரண்டு கைகளையும் நெருப்பின் மேல் பக்கத்தில், கொஞ்சம் தூரமாக வைத்துக் கொண்டாலே போதும் அந்த நெருப்பின் அனல் உங்கள் உடம்பில் இருக்கும் கெடுதலை இழுத்து வெளியே தள்ளி விடும்.

milagu

அந்த நெருப்பு உங்கள் உடம்பில் இருக்கும் எதிர்மறை சக்திகளை அனைத்தையும் ஈர்த்து, பொசுக்கிவிட கூடிய குணமும் மகத்துவமும் கொண்டது. இந்த மூன்று பொருட்களுக்கு ஆன்மிக ரீதியாகவும் சில சக்தி மறைந்து தான் உள்ளது. இந்த பரிகாரத்தை தாராளமாக உங்கள் வீட்டுக்குள்ளேயே செய்யலாம். ஒருமுறை இந்த பரிகாரத்தை செய்து பார்த்தால் தான் உங்களால் அந்த மகத்துவத்தை உணர முடியும். முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் முன்னேற்றத்தில் இருக்கக்கூடிய தடைகள் குறைவதற்கு இது ஒரு நல்ல பரிகாரமாக துணை நிற்கும்.

இதையும் படிக்கலாமே
நிறைவேறாத எவ்வளவு பெரிய ஆசையாக இருந்தாலும், அது உடனே நிறைவேறும். சிவபெருமானுக்கு இந்த 1 பொருளை அபிஷேக பொருளாக வாங்கி கொடுத்தால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.