நிறைவேறாத எவ்வளவு பெரிய ஆசையாக இருந்தாலும், அது உடனே நிறைவேறும். சிவபெருமானுக்கு இந்த 1 பொருளை அபிஷேக பொருளாக வாங்கி கொடுத்தால்!

shivan

மனிதப் பிறவி எடுத்தாலே நிச்சயமாக அவர்களுக்கு ஆசை என்பது கட்டாயம் இருக்கும். அதிலும் நிறைவேறாத ஆசைகள் அதிகமாகவே இருக்கும். உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வரக்கூடிய நிறைவேறாத ஆசை, நிறைவேறாத குறிக்கோள் எதுவாக இருந்தாலும் சரி, அதை நிறைவேற்றிக் கொள்ள இரண்டு சுலபமான ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்பிக்கையோடு தொடர்ந்து இந்த பரிகாரங்களை செய்து வந்தால் நிச்சயமாக உங்களுடைய, நியாயமான ஆசை நிறைவேறாமல் போவதற்கு ஒரு துளி அளவும் வாய்ப்பு கிடையாது. பரிகாரத்தை பார்த்து விடுவோமா?

siva-lingam-abishegam

இறைவனுக்கு நாம் அபிஷேக பொருளாக வாங்கி கொடுக்க கூடிய பொருட்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வரிசையில் சிவபெருமானுக்கு சுத்தமான சந்தனத்தை அபிஷேகத்திற்கு வாங்கி கொடுத்தால், நாம் நினைத்தது உடனே நடக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசைகளும் உடனே நிறைவேறும்.

குறிப்பாக சில கோவில்களில் எல்லாம் நீங்கள் கவனித்தால் தெரியும். சந்தனக்கட்டையை ஒரு கல்லில் இழைத்து, சுத்தமான சந்தனத்தை தான் அந்த இறைவனுக்கு அபிஷேகத்திற்காகவும், பொட்டு வைப்பதற்காகவும் பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்ட சுத்தமான சந்தன கட்டையும் சந்தனம் இழைக்கும் கலையையும் ஒரு கோவிலுக்கு தானமாக கொடுப்பது உங்களுக்கு பெரிய பலனை உடனடியாக கொடுக்கும். முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக பிரதோஷ தினங்களில் சிவபெருமானுக்கு சந்தன வாங்கிக் கொடுத்து அபிஷேகம் செய்யலாம் அல்லது வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு சந்தனத்தை வாங்கி கொடுப்பது நல்லது.

sandhanam

அடுத்தபடியாக பொதுவாகவே வெற்றி என்றால் முதலில் நம் கண் முன்னே வந்து நிற்பது அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் தான். இவர் எடுத்த முயற்சிகளில் இவர் தோற்றதாக சரித்திரமே கிடையாது. இந்த ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபாடு செய்து வந்தாலும் நம்முடைய மன உறுதி அதிகரிக்கும். தோல்வி குறையும். வெற்றிவாகை சூடுவதில் நாம்தான் மன்னராக இருப்போம்.

- Advertisement -

ஹனுமனுக்கு சனிக்கிழமைகளில் குங்குமத்தை வாங்கி கொடுத்து, சிவப்பு வஸ்திரத்தையும் தானமாக அளிக்க வேண்டும். சிவப்பு நிற குங்குமம் ஆக வாங்கி ஆஞ்சநேயர் கோவிலுக்கு தானமாக கொடுங்கள். அதை அவர்கள் கோவிலில் வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்ய பயன்படுத்திக் கொள்வார்கள். சிவப்பு வஸ்திரத்தை ஹனுமனுக்கு சாத்த வேண்டும்.

hanuman

இப்படி செய்தால் உங்களுடைய நிறைவேறாத ஆசை நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. வஸ்திர தானம், குங்கும தானம் செய்ய முடியவில்லை என்றாலும் சனிக்கிழமை ஹனுமனை தரிசனம் செய்து ஸ்ரீராம ஜெயத்தை 11 முறை உச்சரித்தாலும் மன உறுதி அதிகரிக்கும்.

kungumam

மேற்சொன்ன இரண்டு பரிகாரங்களை இத்தனை வாரங்கள் தான், இத்தனை நாட்கள் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் வாங்கி கொடுத்து கொண்டே இருங்கள். உங்களுடைய கிரக நிலைகள் சரியாகி, உங்களுடைய வாழ்நாளில் தோல்விகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, வெற்றிகள் படிப்படியாக உயர்வதை உங்களாலேயே உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கல் உப்பு ஜாடியில், யாருக்கும் தெரியாமல், பெண்கள் இந்த 1 பொருளை மறைத்து வைத்தால், உங்கள் கஷ்டங்களும் யாருக்குமே தெரியாமல் மறைந்து போகும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.