மறைமுக எதிரிகள் அழிய, கண் திருஷ்டி நீங்க மந்திரம்

kaali-compressed

“இராமாயண” நாயகர்களான “ஸ்ரீ ராமரும்”, “லட்சுமணரும்” மிகச் சிறந்த போர்வீரர்கள் என்பது நாம் அறிந்ததே. தங்களுடன் மோதும் எதிரிகளிடம் (வாலியைத் தவிர) யுத்த தர்மம் மீறாமல் போர் செய்தவர்கள். அப்படிப்பட்ட ராமரும், லட்சுமணருமே ராவணனின் மைந்தனான “இந்திரஜித்” அவர்கள் இருவரின் கண்களுக்கு புலப்படாதவாறு புரிந்த “மாயப் போரில்” திணறித்தான் தான் போனார்கள். அது போல நமது இன்றைய வாழ்விலும், வளர்ச்சியிலும் பொறாமை கொண்டு பல “இந்திரஜித்”கள் நம் கண்களுக்கு புலப்படாதவாறு, நமக்கு வாழ்வில் பலவித தடங்கல்களை ஏற்படுத்துகின்றனர். அத்தகைய மறைமுக எதிரிகளை நசுக்கும் மந்திரம் தான் இது.

kali

மந்திரம்:
“ஓம் ஷத்ரு தமன்
ஹூன் ஃபட் ஸ்வாஹா”

இம்மந்திரத்தை ராகு காலங்களில், கையில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்துக்கொண்டு, 108 முறை இந்த மந்திரத்தை ஜெபித்து, பின்பு அந்த எலுமிச்சம் பழத்தை நதியிலோ அல்லது கடலிலோ வீசிவிட வேண்டும். இப்படிப்பட்ட நீர்நிலைகள் இல்லாத ஊரிலுள்ளவர்கள், அந்த எலுமிச்சைபழத்தை ஊருக்கு வெளியில், எங்கேனும் ஒரு மறைவான இடத்தில், யாரும் காணாதவாறு புதைத்து விட வேண்டும். இதனால் உங்களுக்கு மறைமுக எதிரிகளால் ஏற்பட்டு வந்த தொல்லைகள், தடைகள் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
பிறவி சாபங்களை போக்கக்கூடிய மந்திரம் பற்றி தெரியுமா ?

English Overview:
Here we described about Kan thirusti remedies in Tamil. There is one mantra for this. By chanthing that we can get away from enemies trouble and Kan thirusti. It is also called as Kan thirusti pariharam in Tamil.