உங்களைப் பார்த்து பொறாமை பொறாமைப்படுகிறார்களா? அப்படின்னா இது செஞ்சுட்டு அப்புறமா வீட்டுக்குள்ள போங்க!

vilvam-sivan
- Advertisement -

குடும்பத்துடன் நீங்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து பலரும் பொறாமைப் படுகிறார்களா? உங்கள் தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சி அடைவதை பார்த்து திருஷ்டி வைக்கிறார்களா? அப்படின்னா எப்பவுமே இந்த ஒரு விஷயத்தை உங்க கூட எடுத்துட்டு போங்க. இது உங்களுடனே இருக்க இருக்க உங்களுக்கு மற்றும் உங்கள் குடும்பத்திற்கு உண்டாகும் திருஷ்டிகள் மொத்தமும் தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. அது என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

indian-family

நீங்க குடும்பத்தோட எங்கேயாவது வெளியே போறீங்க அப்படின்னா! கண்டிப்பா இத உங்க கூட வச்சிக்கோங்க. உங்களை பாக்குறவங்க கண்டிப்பா உங்கள பார்த்து பொறாமை படுவாங்க. விசேஷங்கள், விவாக வைபவங்கள் என்று நீங்கள் பட்டாடை உடுத்தி வெளியில் செல்லும் பொழுது நிச்சயம் உங்களை பார்த்து யாராவது ஒருவராவது கண் வைத்து விடுவார்கள். அதாவது திருஷ்டி பட்டு விடும். இதனால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டை, சச்சரவுகளும், பிரச்சனைகளும் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -

நாமே கூட ஒரு சிலரை பார்க்கும் பொழுது நம்மை அறியாமல் கண் வைத்து விடுவது உண்டு. இதை வேண்டுமென்றே செய்யப்படுவது இல்லை என்றாலும் இதுவும் கூட திருஷ்டி வகை தான். ஒரு சிலர் நம் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் பார்த்து வேண்டுமென்றே பொறாமையும் படுவது உண்டு. அவைகளை பொல்லா திருஷ்டி என்பார்கள். எப்படியாக இருந்தாலும் உங்கள் மேல் விழும் பொறாமை கண்கள் மற்றும் திருஷ்டிகள் அகல எப்பொழுதும் இந்த ஒரு இலையை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள்.

vilvam1

சிவபெருமானின் அம்சமாக இருக்கும் வில்வ இலையை நம்முடன் வைத்துக் கொண்டிருப்பதால் நமக்கு எந்த விதமான திருஷ்டியும் அண்டாது என்பது பொருளாகும். வில்வ இலைக்கு திருஷ்டியை கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு. நீங்கள் குடும்பத்தோடு வெளியில் செல்லும் பொழுது வில்வ இலைகளை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். பின்னர் வீட்டிற்கு வந்ததும் வீட்டு வாசலில் நின்று மொத்தமாக அனைவருக்கும் சேர்த்து திருஷ்டி கழித்து அந்த இலையை இரண்டாக கிழித்து தூக்கி எறிந்து விடுங்கள். இது போல் செய்வதால் உங்களை பார்த்து பொறாமை பட்டவர்களின் திருஷ்டிகள் கழியும் என்பது ஐதீகம்.

- Advertisement -

இது மிகவும் எளிமையான கண் திருஷ்டி கழிக்கும் முறை ஆகும். வில்வ மரத்தை வீட்டில் பெரும்பாலும் வளர்ப்பது இல்லை. சிவபெருமானுக்கு உரிய வில்வ மரம் வளர்த்தால் மிகவும் ஆச்சாரத்தோடு இருக்க வேண்டியது அவசியமாகும். அதனால் தான் பெரும்பாலும் கோவில்களில் மட்டும் வில்வ மரங்களை வளர்த்து வருகிறார்கள். வில்வ மரத்தை மாலை வேளையில் தொடக் கூடாது என்பது நியதி. வில்வ இலைகளை பறிக்க நினைத்தால் காலை வேளையிலேயே பறித்து வைத்துக் கொள்வது தான் மிகவும் நல்லது.

vilvam

சிவன் கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு இருக்கும் வில்வ இலைகளை பறித்துக் கொண்டு வீட்டின் பூஜை அறையில் கொண்டு வந்து வையுங்கள். அன்றாடம் வேலைக்கு போய் வருபவர்கள் கூட பலரால் கண் திருஷ்டிக்கு ஆளாக நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களின் திறமையை பார்த்து பொறாமை படுபவர்களும் இருக்கத் தானே செய்கிறார்கள்? இது போன்ற சமயங்களில் வில்வ இலைகளைக் கொண்டு செல்வதும், பின் வீட்டிற்கு வந்ததும் வாசலில் நின்று தலையை சுற்றி மும்முறை திருஷ்டி கழித்து இரண்டாக கிழித்து எறிவதும் சிறந்த பரிகாரமாக அமையும். இதனால் எல்லா விதமான கஷ்டங்களும் நீங்கி உங்களின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகள் உடனடியாக தீர, கைமேல் பலன் தரும் சுலபமான 2 பரிகார முறைகள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -