கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகள் உடனடியாக தீர, கைமேல் பலன் தரும் சுலபமான 2 பரிகார முறைகள்.

கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய பிரச்சினைக்கு பல வகையான பரிகாரங்கள், நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லி இருந்தாலும், உடனடியாக பலன் தரக்கூடிய சக்தி வாய்ந்த இரண்டு பரிகாரத்தை பற்றி இந்த பதிவின் மூலம், இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அட, எத்தனை பரிகாரம் சொன்னாலும், குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் மட்டும் குறைவது கிடையாது! சண்டை சச்சரவுகள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. இதற்கான தீர்வை பரிகாரத்தின் மூலம் தேடுவது என்பது இரண்டாவது முயற்சி.

fight2

நம்முடைய முதல் முயற்சி விட்டுக் கொடுப்பதிலும், புரிதலிலும், கணவன் மனைவியின் அந்நியோன்யத்திலும் தான் உள்ளது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக உங்களுக்கு தெரிந்த, வயதான தம்பதியர்கள், அதாவது தங்களுடைய அறுபதாவது வயதிலும் கூட இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக நிறைவு செய்து, சஷ்டியப்தபூர்த்தி செய்துகொள்ளும் தம்பதியர்களிடம் மனநிறைவான ஆசீர்வாதத்தை பெறுவது, இளைய தலைமுறையினருக்கு மிகவும் நல்லது. இந்த ஆசீர்வாதம் கோடி பரிகாரத்திற்கு சமம்.

சஷ்டியப்த பூர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால், உங்களது குடும்பத்தோடு ஆசீர்வாதம் வாங்க மறந்து விடாதீர்கள். முடிந்தால் வயது முதிர்ந்த, வசதி இல்லாத, ஏழை தம்பதியருக்கு சாப்பாடு போட்டு, வஸ்திர தானம் வழங்குவது என்பது நம்முடைய குடும்ப வாழ்க்கைக்கும் மேலும் சிறப்பை சேர்க்கும். இல்லற வாழ்க்கையை வாழ்வதற்கு உங்களுடைய ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் கூட அது சரியாக,  இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும்.

nagasilai

இதோடு சேர்த்து, இறுதியாக ஒரு பரிகாரம். பொதுவாகவே பாம்புகள் பின்னிப்பிணைந்து இருக்கும் காட்சியை பார்த்தால், ஒருவருடைய வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். இதனால்தான், நம்முடைய முன்னோர்கள் அந்த பாம்புகள் பின்னி இருப்பது போன்ற காட்சியை சிலைகளாக வடித்து, கோவில்களில் வைத்துள்ளார்கள். என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

பெரும்பாலும் இப்படிப்பட்ட சிலைகள் அரசமரத்தடியில் இருப்பதை நாம் நிறைய கோவில்களில் பார்த்திருப்போம். அந்த சிலைகளுக்கு செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமை, இந்த மூன்று தினங்களில் வரும் ராகு கால நேரத்தில், மஞ்சளையும் பாலையும் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அதாவது செவ்வாய்க்கிழமை தலைப்பகுதிக்கும், வெள்ளிக்கிழமை இடைப்பகுதிக்கும், ஞாயிற்றுக்கிழமை வால்பகுதிக்கும் இப்படியாக சொல்லப்பட்டுள்ள பூஜை முறைதான் இது.

nagasilai1

மூன்று வாரங்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து, அரச மரத்தை 11 முறை சுற்றி வலம் வந்து உங்கள் பரிகாரத்தை நிறைவு செய்து கொண்டால், உங்களுடைய இல்லற வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் குறைந்து, கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற முடியும். இந்த பரிகாரத்தை மூன்று வாரங்கள் செய்து முடித்து விடுங்கள். விவாகரத்து வரைக்கும் சென்றவர்கள் கூட, ஒன்றாவதற்கு வாய்ப்பு உள்ளது.

kapparisi

பின் வரக்கூடிய பரிகாரத்தை உங்களால் எப்போது முடியுமோ அப்போது மட்டும் செய்தால் போதும். எந்த ஒரு கட்டுப்பாட்டு முறைகளும் கிடையாது. உங்களுடைய குடும்ப ஒற்றுமைக்காக சொல்லப்பட்டுள்ள பரிகாரம் இது. பிரதோஷ தினம் வருவது, நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இந்த பிரதோஷ தினத்தில் உங்களுடைய வீட்டில் காப்பரிசி தயார் செய்து, சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் பிரசாதமாகப் படைத்து அந்த பிரதோஷ தினத்தன்று பிரதோஷகால பூஜை முடிந்ததும், அந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்தால், இல்லறத்தில் இனிமையான வாழ்வு அமையும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம். (பச்சரிசியை நன்றாக தண்ணீரில் ஊற வைத்துவிட்டு, அதன் பின்பு வெல்லமும் ஏலக்காயும் சேர்த்து தயாரிப்பது தான் காப்பரிசி.)

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் எத்தனை வாசல்கள் உள்ளன? வீட்டின் வாசல் இப்படி இருந்தால் ஆரோக்கியமும், செல்வமும் அதிகரிக்குமாம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.