உருளியில் இந்த 2 பொருளை போட்டு வைத்தால், ஊரே வந்து கண் வைத்தாலும் உங்கள் வீட்டில் நடக்கும் நல்லது, நல்லபடியாக நடக்கும். கண் திருஷ்டியால் வீட்டில் எந்த கெட்டதும் நடக்காது.

uruli-lemon-glass
- Advertisement -

நம்முடைய வீட்டில் கெடுதல் நடப்பதற்கு முதல் காரணம் என்ன தெரியுமா. இந்த கண் திருஷ்டி தான். அதிலும் நம்முடைய வீட்டில் சொந்த பந்தங்களோடு சேர்ந்து விமர்சியாக ஏதோ ஒரு நல்லதை செய்கின்றோம். காதுகுத்து, திருமணம், புதுமனை புகுவிழா, அல்லது ஏதோ ஒரு பூஜை புனஸ்காரம் என்று வைத்துக் கொள்வோம். நம்முடைய வீட்டை மிக மிக அழகாக அலங்கரித்திருப்போம். நம்முடைய பூஜை அறை மிக மிக அழகாக இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சந்தோஷமாக சிங்காரித்துக்கொண்டு இருப்பார்கள். இதை பார்க்கும் உறவினர்கள் கண்களிலும் பொறாமை தெரியும்.

ஊர் மக்கள் கண்களிலும் பொறாமை தெரியும். எல்லோரையும் கெட்டவர்கள் என்று சொல்லவில்லை. இருப்பினும் இவ்வளவு அழகாக விசேஷம் செய்கிறார்களே. இதே போல நம்மால் செய்ய முடியவில்லை என்ற ஒரு சின்ன ஏக்கம் தான் பொறாமையின் வெளிப்பாடு. இதை நாம் குறை சொல்ல முடியாது. எல்லோருக்கும் இப்படிப்பட்ட ஒரு எண்ணம் வருவது இயல்புதான்‌.

- Advertisement -

ஆனால் அந்த எதிர்மறை எண்ணம், எதிர்மறை ஆற்றல் நம் குடும்பத்தை தாக்கி விடும். நம் வீட்டில் நடக்க வேண்டிய நல்லதில் ஏதாவது ஒரு பிரச்சனையை உண்டு பண்ணிவிடும். இதை எல்லாவற்றையும் தடுக்க, எல்லோரும் வரக்கூடிய வரவேற்பு அறையில் எந்த ஒரு பொருளை வைக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு சின்ன பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

இப்படி பெரிய பெரிய விசேஷம் செய்யும் போது தான் உருளியை இப்படி வைக்க வேண்டுமா. கிடையாது. தினமும் உங்களுடைய வீட்டில் உருளியில் இந்த பொருள் இருந்தால், வீட்டிற்கு வருபவர்கள் உங்கள் வீட்டை பார்த்து கண் திருஷ்டி வைத்து பொறாமை பட்டாலும், உங்கள் வீட்டின் அழகு, நீங்கள் குடும்பத்தை நடத்தும் அழகு, இவைகளுக்கு பாதிப்பு வராது.

- Advertisement -

பொறாமை பட்டாலும் அந்த எதிர்மறை ஆற்றலை இந்த உருளியில் இருக்கக்கூடிய பொருள் ஈர்த்துக் கொள்ளும். சரி விஷயத்தை சொல்லுங்க. என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பரிகாரத்தை பார்த்து விடுவோம். ஒரு அழகான உருளியில் நிரம்ப நல்ல சுத்தமான குடிக்கின்ற தண்ணீரை ஊற்றி, முதலில் அதில் ஒரு எலுமிச்சம் பழம் போட்டு விடுங்கள். சிறிது பச்சை கற்பூரம், சிறிது கொத்தமல்லி இலைகளை காம்போடு கிள்ளி போட்டு விட வேண்டும். இப்போது இதன் மேலே அழகான பூக்களை அடுக்கி வைத்து விடுங்கள். உள்ளே இருக்கும் கொத்தமல்லி தழையும் எலுமிச்சம்பழமும் அடுத்தவர்கள் கண்ணுக்கு தெரியாமல் இருந்தாலும் சரி, அல்லது தெரிந்தாலும் சரி, அதை பற்றி கவலை இல்லை.

இந்த இரண்டு பொருட்களும் (எலுமிச்சை கொத்தமல்லி தழை) தண்ணீரில் இருக்கும்போது உங்கள் வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை அப்படியே உறிஞ்சிக் கொள்ளும். பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். வீட்டில் என்றைக்குமே கெடுதல் நடக்காது. இந்த பொருட்களை எல்லாம் தினமும் மாற்ற வேண்டும் என்று அவசியம் கிடையாது. தண்ணீரை மட்டும் தினமும் மாற்ற வேண்டும். உள்ளே இருக்கும் பொருள் வாடி, அழுகிப்போகும் சமயத்தில் அதை மாற்றி விடுங்கள். அவ்வளவு தாங்க பரிகாரம். முயற்சி செய்து பாருங்கள். பொறாமை கண் கொண்டவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து சென்றால் கூட உங்கள் வீட்டில் இனி சண்டை சச்சரவு வராது என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -