உங்கள் வாழ்க்கைத் துணை உங்களின் பேச்சைக் கேட்காமல் இருவரிடையே சண்டைகள் வருகின்றதா? அப்பொழுது உடனே இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்

husband
- Advertisement -

இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் பெற்றுள்ளனர். அவ்வாறு திருமணத்திற்கு முன்பு ஒருவர் மீது ஒருவர் அன்பாகவும், எந்தவித சண்டைகள் இல்லாமலும் இருக்கின்றனர். ஆனால் திருமணம் முடிந்து கணவன் மனைவி ஆன பின்னர் இருவருக்கும் இடையே போட்டிகள் வர ஆரம்பிக்கிறது. நீ சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும்? நான் சொல்வதை நீ கேள் இவ்வாறு இருவருக்கிடையே மனஸ்தாபம் உண்டாகின்றது. இவ்வாறான சிறிய பிரச்சனைகள் கணவன், மனைவி இருவரும் பிரிவதற்கான பெரிய பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது. எந்த அளவிற்கு வாழ்க்கைத்துணையை விரைவாக தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த அளவு கூடிய விரைவில் வாழ்க்கை துணையை பிரியவும் முடிவு எடுத்து விடுகிறார்கள். இவ்வாறான நிலைமை வராமல் இருக்கவும், வாழ்க்கைத் துணை உங்களின் வார்த்தையை மதிக்கவும் இந்த எளிய பரிகாரத்தை உடனே செய்திடுங்கள்.

Love kavithai

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று கூறுவர். நமது தாத்தா பாட்டி காலத்தில் எல்லாம் பிள்ளைகளின் தாய் தந்தை தன் மகனுக்குப் பெண் பார்ப்பது, பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள். ஆனால் இன்றைய தலைமுறை அவ்வாறான வேலைகளை பெற்றோர்களுக்கு விட்டுவைப்பதில்லை.

- Advertisement -

தனது வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்வு செய்கின்றனர். அதனை வீட்டில் சொல்லி பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற்று விடுகிறார்கள். பெற்றோர்கள் இவன் உனக்கு பொருத்தமாக இருக்க மாட்டான் என்று என்ன சொன்னாலும் இவர்கள் சமாதானம் ஆவது இல்லை. தனது முடிவில் தெளிவாக இருந்து திருமணம் முடிக்கின்றனர். பெற்றோர்களும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நல்ல வகையில் திருமணம் செய்து வைக்கின்றனர்.

fight4

குழந்தைகள் நன்றாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் இன்றைய பெற்றோர்கள் அவர்களின் விருப்பத்திற்கு முட்டுக்கட்டையாக இல்லாமல் திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் தங்கள் வாழ்க்கையை தாங்களே தேர்வு செய்து கொண்டவர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கும் சண்டையிட்டுக் கொண்டு, ஒருவரை ஒருவர் பிரிவதற்கான முடிவையும் மற்றவர் துணை இல்லாமல் தாங்களே முடிவு செய்துவிடுகிறார்கள்.

- Advertisement -

இதனால் பாதிக்கப்படப்போவது இவர்கள் மட்டுமல்லாமல் இவர்களின் பெற்றோர்கள் என்பதையும் உணர்வதில்லை. இவ்வாறான சின்ன விஷயங்களை புரிந்து கொள்ளாமல் பிரிவதற்கு பதிலாக தனது வாழ்க்கைத் துணையுடன் எவ்வாறு சேர்ந்து வாழ்வது என்பதை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். அதற்காக ஒருவர் மற்றொருவரின் வார்த்தையை கேட்டு நடந்து கொண்டாலே போதும்.

Parents

முதலில் இவ்வாறான பிரச்சனையை சரி செய்வதற்கு நாட்டு மருந்து கடைகளில் வலம்புரிக்காய், இடம் பிடித்தாய் இவற்றை வாங்கிக் கொண்டு, அதில் ஒவ்வொன்றிலும் பத்து, பத்து என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி, பஞ்சு திரி போட்டு, தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த வலம்புரி, இடம்புரி காயையும் விளக்கில் காட்டி எரித்து அதன் சாம்பலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

valamburikai

பிறகு இந்தப் பூஜையைச் செய்பவர்கள் அவர்களி உபயோகிக்கும் துணியில் இருந்து சிறிதளவு துணியை எடுத்து அதனை விளக்கில் எரித்து சாம்பலாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உங்கள் உங்கள் வாழ்க்கைத் துணை உபயோகிக்கும் துணியையும் சிறிதளவு எடுத்துக்கொண்டு, அதனையும் எரித்து சாம்பலாக்கி கொள்ள வேண்டும். பின்னர் இதில் சுத்தமான நெய் ஊற்றி கலந்து கொண்டு, இதனை தாயத்தில் சேர்த்து இடுப்பில் கட்டிக் கொள்ளலாம். அல்லது நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் கணவன் மனைவி இடையே இருக்கும் சண்டைகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும்.

- Advertisement -