- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்களை நீக்கும் கந்த சஷ்டி நான்காம் நாள் பரிகாரம்

கஷ்டங்களை நீக்கும் கந்த சஷ்டி நான்காம் நாள் பரிகாரம்

- Advertisement -

கந்த சஷ்டி விரத நாட்களில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்து நம்முடைய வாழ்க்கையில் வேண்டிய வரத்தை பெறுகிறோம். அப்படிப்பட்ட கந்த சஷ்டி விரத நாட்களில் விநாயகருக்குரிய வளர்பிறை சதுர்த்தியும் சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் கந்த சஷ்டியின் நான்காம் நாள் திகழ்கிறது. இந்த நாளில் நாம் முருகப்பெருமானுக்கு அருகம்புல்லை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும். அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

கந்த சஷ்டி நான்காம் நாள் பரிகாரம்

விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி திதி என்பது நம்முடைய சங்கடங்களை தீர்க்கக் கூடிய திதியாக திகழ்கிறது. அதிலும் வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான வளங்களும் வந்து சேரும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட வளர்பிறை சதுர்த்தி திதியும் கந்த சஷ்டி விரதத்தின் நான்காம் நாளும் ஒருசேர வரும்பொழுது செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

விநாயகப் பெருமானின் வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் அருகம்புல். விநாயகரை வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் அருகம்புல்லை நாம் பயன்படுத்துவோம். அப்படிப்பட்ட அருகம்புல் நம்முடைய உடல் ரீதியான மனரீதியான பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு சிறந்த தீர்வாகவே கருதப்படுகிறது. பலவிதமான மருத்துவ குணம் நிறைந்த அருகம்புல்லை நாம் விநாயகருக்கு அர்ச்சனை செய்து பயன்படுத்தும் பொழுது அந்த அருகம்புல்லில் விநாயகரின் சக்திகள் அனைத்தும் கிடைக்கப்பெற்று நாம் நினைத்தது நினைத்தபடி நடந்திரும் என்றே கூறலாம். அதனால் தான் விநாயகப் பெருமாளுக்கு 108, 1008 என்ற எண்ணிக்கையில் அருகம்புல்லை வைத்து அர்ச்சனை செய்கிறோம்.

இந்த முறை வளர்பிறை சதுர்த்தி என்பது அக்டோபர் மாதம் 25ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் கந்த சஷ்டி விரதத்தின் நான்காவது நாளாகவும் திகழ்கிறது. அதனால் அந்த நாளில் நாம் முருகப்பெருமானையும் விநாயகப் பெருமானையும் ஒருசேர வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது முருக பெருமானுக்கும் 108 எண்ணிக்கையில் அருகம்புல்லை மாலையாக கட்டி, சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முருகப்பெருமானும் விநாயகர் பெருமானும் ஒருசேர நமக்கு அருள் புரிந்து நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பார்கள். மாலையாக கட்ட இயலவில்லை என்பவர்கள் முருகப்பெருமானின் அலங்காரத்திற்கு அருகம்புல்லை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: கந்த சஷ்டி நான்காம் நாள் வழிபாடு

விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி திதியில் முருகப்பெருமானுக்குரிய கந்தசஷ்டி விரதத்தின் நான்காம் நாளில் இப்படி அருகம்புல்லை வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு விநாயகர் மற்றும் முருகனின் அருளால் கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்