நமக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்து அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றக்கூடிய தெய்வங்கள் பல இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தெய்வங்கள் இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் திகழும். அந்த வகையில் பலரது இஷ்ட தெய்வமாக திகழக்கூடிய ஒரு தெய்வம் தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருக பெருமானுக்கே உரித்தான ஆறு நாள் விரதம் தான் கந்த சஷ்டி விரதம். இந்த கந்தசஷ்டி விரத நாட்களில் முருகப் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் பல விதமான நன்மைகளை பெற முடியும். அந்த வகையில் இன்று இரவுக்குள் கூற வேண்டிய முருகனின் மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
செல்வ வளத்தை அதிகரிக்க மந்திரம்
நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நடைபெற வேண்டும் என்றால் அந்த நன்மைகள் நடைபெறுவதற்குரிய செல்வத்தை நாம் பெற வேண்டும். அப்படிப்பட்ட செல்வத்தை பெறுவதற்கு பலரும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வார்கள். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்வார்கள். அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமையான இன்று முருகப்பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை நாம் கூறுவதன் மூலம் முருகப்பெருமானின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்றும் இருக்கக்கூடிய செல்வ வளம் பல மடங்காக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த மந்திரத்தை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று இரவு 12 மணிக்குள் கூற வேண்டும். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்தவித தீட்டும் தடையாக இருக்காது. மேலும் அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். இந்த மந்திரத்தை எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் கூறலாம். அமர்ந்து கொண்டும் கூறலாம். நின்று கொண்டும் கூறலாம். வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது கூட கூறிக்கொண்டே வேலையை செய்யலாம்.
இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக முருகப் பெருமானை முழுமனதோடு நினைத்து என்றென்றும் எனக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிறகு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக 10 நிமிடம் கூறினால் போதும். எத்தனை முறை கூற வேண்டும் என்ற கணக்கு கிடையாது. நிறுத்தி நிதானத்துடன் பொறுமையாக முருகப்பெருமானை முழுமனதோடு நினைத்து கூறினால் போதும். 10 நிமிடம் கூறி முடித்த பிறகு திரும்பவும் முருகப்பெருமானை மனதார நினைத்து வழிபாடு செய்து கொள்ள வேண்டும்.
மந்திரம்
” ஓம் முருகா குரு முருகா செல்வ முருகா ஐஸ்வர்ய முருகா அருள் முருகா போற்றி போற்றி “
இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் வெற்றிலை பரிகாரம்
செல்வ வளத்தை அதிகரிக்கக்கூடிய மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய வெள்ளிக்கிழமை அன்று முருகப் பெருமானின் இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறுபவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க பெற்று சிறப்புடன் வாழலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.