- Advertisement -
Homeமந்திரம்கந்தசஷ்டி நாட்களில் கூற வேண்டிய முருகன் மந்திரம்

கந்தசஷ்டி நாட்களில் கூற வேண்டிய முருகன் மந்திரம்

- Advertisement -

முருகப்பெருமானுக்கு உரித்தான விரதங்களில் மிகவும் முக்கியமான ஒரு விரதமாக திகழ்வதுதான் கந்தசஷ்டி விரதம். திருச்செந்தூர் முருகன் சூரசம்ஹாரம் செய்த 6 நாட்களை தான் நாம் கந்த சஷ்டி விரதமாக பாவித்து அவரை நினைத்து விரதம் இருக்கிறோம். அப்படிப்பட்ட இந்த நாட்களில் பலரும் தங்களுடைய உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களுடைய விரத முறைகளை மேற்கொள்வார்கள். இன்னும் சிலரோ விரதம் இருக்காமல் வழிபாட்டை மட்டும் செய்வார்கள். ஆனால் ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் விரதமும் இருக்க முடியாமல் வழிபாடும் செய்ய இயலாத சூழ்நிலையில் இருப்பவர்களும் முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கந்தசஷ்டி முருகன் மந்திரம்

அனைத்து விதமான முருகன் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிற ஒரு திருவிழாவாக தான் கந்தசஷ்டி விழா திகழ்கிறது. இந்த கந்த சஷ்டி திருவிழா சமயத்தில் பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்வார்கள். விரதம் இருக்கும் அளவிற்கு உடல் சூழ்நிலை இல்லை என்னும் பட்சத்தில் தினமும் முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். ஒருவேளை இந்த ஆறு நாட்களிலும் முருகப் பெருமானை நினைத்து விரதம் இருக்க இயலவில்லை என்றாலோ, வழிபாடு செய்ய இயலவில்லை என்றாலோ முருகனின் அருளை பெற முடியாது அல்லவா? அப்படிப்பட்டவர்களும் முருகனின் அருளை பெறுவதற்கு கூற வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த மந்திர வழிபாட்டை செய்வதற்கு எந்தவித தடைகளும் கிடையாது, கட்டுப்பாடுகளும் கிடையாது. பெண்கள் மாதவிடாய் சமயமாக இருக்கும் பொழுதும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். எந்தவித தீட்டு தடைகளும் இதற்கு கிடையாது. இந்த மந்திரத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம், எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். மிகவும் எளிமையான இருக்கக்கூடிய ஒரு வரி மந்திரம் தான் என்பதால் இதை சிறு குழந்தைகளும் முதல் பெரியவர்கள் வரை எந்தவித தடைகளும் இல்லாமல் தயக்கம் இல்லாமல் கூறலாம்.

இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக முகம், கை, கால்களை சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் எந்த திசையை பார்க்க வேண்டுமானாலும் அமர்ந்துகொண்டு முருகப்பெருமானை முழுமனதோடு நினைத்து உங்களுடைய வேண்டுதலை முன்வைக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு வேண்டுதலை முன்வைத்து இந்த மந்திரத்தை கூறும்பொழுது அதற்குரிய பலன் விரைவில் கிடைக்கும். வேண்டுதலை முன்வைத்த பிறகு முருகப்பெருமானின் பின்வரும் இந்த மந்திரத்தை 10 நிமிடம் நிறுத்தி நிதானத்துடன் முருகப்பெருமானை மனதிற்குள் நினைத்துக் கொண்டு கூற வேண்டும்.

- Advertisement -

பத்து நிமிடம் கூறி முடித்த பிறகு திரும்பவும் முருகப்பெருமானிடம் உங்களுடைய வேண்டுதலை முன்வைத்துவிட்டு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இப்படி தொடர்ச்சியாக கந்த சஷ்டி விரதம் இருக்கக்கூடிய ஆறு நாட்களும் இந்த மந்திரத்தை நாம் கூறுவதன் மூலம் முருகப்பெருமானின் அருளால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும்.

மந்திரம்

” ஐயும் கிலியும் சரவணபவ “

இதையும் படிக்கலாமே: தலையெழுத்தை மாற்றும் சிவ ஸ்தோத்திரம்

இந்த மந்திரத்தை முருகப்பெருமானை மனதார நினைத்து யார் ஒருவர் ஆறு நாட்களும் கூறுகிறார்களோ அவர்களுக்கு முருகப்பெருமானின் அருளோடு வேண்டிய வரமும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்