ஆடி செவ்வாய்யில் முருகப் பெருமானுக்கு இந்த நெய்வேதியம் படைத்து வணங்கிப்பாருங்கள். உங்கள் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும்

murugan
- Advertisement -

ஆடி மாதம் முழுவதுமே அம்பாளை தொழுவதற்கான சிறப்பு வாய்ந்த மாதமாகும். அதேபோல் செவ்வாய் கிழமை என்றாலே முருகரை தொழுவதற்கான சிறப்பு வாய்ந்த தினமாகும். அதிலும் இந்த ஆடி மாதத்தில் வரும் செவ்வாயில் செய்யும் முருகன் வழிபட்டால் நீங்கள் நினைத்தது நிச்சயம் நிறைவேறும். ஏனெனில் இந்த தினத்தில் நீங்கள் செய்யும் பூஜைக்கு அம்பாள் மற்றும் முருகன் ஆகிய இரண்டு தெய்வங்களும் சேர்ந்து உங்களுக்கு அருள் புரிவார்கள்.

Murugan

இந்த சிறப்பு வாய்ந்த சுபதினத்தில் முருகப்பெருமானுக்கு செய்யும் பூஜையில் அவருக்குப் பிடித்த நெய்வேதியமான இந்த அப்பத்தினை செய்து படைப்பது மிகவும் விசேஷமாகும். இந்த அப்பத்திற்கு கந்தரப்பம் என்று பெயர். இந்த அப்பம் கந்த பெருமானுக்கு மிகவும் பிடித்த உணவு என்பதால் தான் இந்தப் பெயர் வந்துள்ளது. எனவே இந்த கந்தரப்பத்தினை நெய்வேதியமாக படைக்கும் பொழுது முருகப்பெருமான் மனம் மகிழ்ந்து நீங்கள் வேண்டும் வரத்தை அள்ளித் தருவார்.

- Advertisement -

கந்தரப்பம் செய்ய தேவையான பொருட்கள் :
பச்சை அரிசி – ஒரு டம்ளர், உளுத்தம் பருப்பு – கால் டம்ளர், வெல்லம் – முக்கால் டம்ளர், ஏலக்காய் – 3, எண்ணெய் – கால் லிட்டர், உப்பு –கால் ஸ்பூன்.

appam

செய்முறை:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் பச்சை அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அரிசியும், உளுத்தம் பருப்பும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது நன்றாக ஊற வேண்டும்.

- Advertisement -

நன்றாக ஊறிய அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் மூன்று ஏலக்காய் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு வருமாறு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்ததை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் பொடி செய்த முக்கால் டம்ளர் வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். வெள்ளம் சேர்த்தவுடன் அரிசி மாவு சற்று இளகி கரண்டியில் எடுத்து ஊற்றும் பதத்திற்கு வந்துவிடும்.

vella pagu

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்த பின்னர் ஒரு குழம்பு கரண்டியைப் பயன்படுத்தி மாவினை அல்லி ஊற்ற வேண்டும். சிறிது நேரத்தில் அப்பம் உப்பி வரும். அப்பொழுது அப்பத்தினை திருப்பிவிட வேண்டும். இரண்டு புறங்களிலும் நன்றாக சிவந்து வந்தவுடன் அப்பதினை வெளியில் எடுக்க வேண்டும். ஒரு அப்பம் பொறிந்த பின்னரே அடுத்த அப்பம் ஊற்ற வேண்டும். இவ்வாறு ஒவ்வொன்றாக பொரித்து எடுக்க வேண்டும்.

appam

அப்பம் செய்து முடித்த பிறகு முருகப்பெருமான் படத்திற்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து, பூ வைத்து, 6 அகல் தீபம் ஏற்றி அவற்றுடன் முருகப்பெருமானின் முன் இந்தப் அப்பத்திணை வைத்து படைத்து உங்கள் வேண்டுதலை மனதில் நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள். இந்த விசேஷ பூஜையை விடியற் காலையிலோ அல்லது மாலை நேரத்திலோ செய்யலாம். இந்த பூஜையின் பலனாக உங்கள் வேண்டுதல் இந்த மாதம் முடிவதற்குள் நிச்சயம் நிறைவேறும்.

- Advertisement -