காதலித்தால் கண்ணீர் வரும் – காதல் கவிதை

Love kavithai

காதலித்தால் கவிதை வரும்
கண்களுக்குள் புது வெளிச்சம் வரும்
உணர்வுகளுக்குள் புது ஒளி பிறக்கும்
என்று எத்தனையோ பேர் சொன்னார்கள்.

Kadhal kavithai image
Kadhal kavithai image

ஆனால் காதலித்தால் கண்ணீர் வரும்
கவிதைக்கு நாம் இறையவோம்
இன்ப கூட்டிற்குள் இடி விழுகும்
இதயம் கூட பாரம் ஆகும் என்று
எவரும் கூறாமல் சென்றுவிட்டனர்.

Love kavithai image

இதையும் படிக்கலாமே:
என் கண்ணோடு கலந்த வின் அழகே – காதல் கவிதை

காதல் ஒரு சுகம் என்று பலரும் கூறுவதுண்டு. காதலிப்பவர்களுக்கு காதலில் ஜெயித்தவர்களுக்கும் மட்டுமே காதல் சுகமாகிறது. அதை தாண்டி காதலில் தோல்வியுற்ற யாருக்கும் காதல் சுகமாக இருப்பது கிடையாது. காதலன் நினைவுகளோடோ அல்லது காதலி நினைவுகளோடோ காலம் முழுக்க அவர்கள் வாழ்கின்றனர். வேறொருவரை மனத்தாலும் ஏதோ ஒரு ஓரத்தில் பழைய காதலில் ஈரம் காயம் அப்படியே தான் இருக்கும். அதை படைத்த ஆண்டவனால் மாற்ற இயலாது என்பது தான் நிஜம். ஆதலால் காதல் வெறும் சுகம் மட்டும் கிடையாது சுமையும் கூட தான்.

இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், காதல் தோல்வி கவிதைகள் என அணைத்து விதமான சுக துக்க கவிதைகளும் இங்கு உள்ளன.