என் கண்ணோடு கலந்த வின் அழகே – காதல் கவிதை

Love kavithai

என் கண்ணோடு கலந்த
வின் அழகே..
என் நெஞ்சோடு நனைத்த
பூ மகளே..
காதல் என்னும் ஒற்றை சொல்லால்
என்னுள் ஓராயிரம்
மாற்றங்கள் தந்தவளே..
உன் நெஞ்சோடு சாய்ந்திட
நான் இங்கு தவிக்கிறேன்..

Kadhal kavithai image
Kadhal kavithai image

என் பருவத்தின் பார்வையிலே
பல பெண்கள் கடந்தாலும்
உன்னை மட்டும் நினைக்குதே
ஓயாமல் துடிக்கும் என் மனம்…

கனவுகளை கலைத்தாய்
நினைவுகளை குலைத்தாய்
என் ரத்த நாளங்களில் காதல்
தீயை விதைத்தாய்..
நீயே என் தேவதை
உன் நிழல் கூட எனக்கு
பூஞ் சிலை..

Love kavithai image
Love kavithai image

இதையும் படிக்கலாமே:
என் உயிரின் அணுவினில் – காதல் கவிதை

ஒருவன் காதலிக்க துவங்கிய அடுத்த கணமே அவன் அவனாக இருப்பதில்லை. அவன் கரு விழிகளில் அவள் முகம் மட்டுமே பட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். ஒரு கோடி மணி நேரம் அவளின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தாலும் அது ஒரு நொடி போல கடந்து போகும். இதுவே காதலின் மாயை. அந்த மாயையில் உள்ள அனைவருக்கும் இந்த கவிதை சமர்ப்பணம்.

இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், உரணவுகளை பிரதிபலிக்கும் உன்னத கவிதைகள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.