காஞ்சிபுரம் கோவிலில் கஞ்சா செடி வளர்ப்பு – சிக்கினார் காவலாளி

kanja in temple
- Advertisement -

காஞ்சிபுரம் கோவில் ஒன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற கோவிலான வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் மூர்த்தி என்பவர் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது கஞ்சா செடிகளை கண்டறிந்தனர். இதனால் மூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார்.

Vazhakarutheeswarar Temple

சின்ன காஞ்சிபுரம் புகுதியில் காவலாளராக வேலை செய்துவரும் மூர்த்தி என்பவர் இதற்கு முன்பு கோவில் அருகில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்துள்ளார். அப்போது அவரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் அவரை வேலையே விட்டு நீக்கியுள்ளார். கஞ்சா புகைக்கும் பழக்கம் அவருக்கு இருந்துள்ளதால் கோவிலின் பின்புறத்தில் சில கஞ்சா செடிகளை வளர்த்து அதன் மூலம் அவருக்கு தேவையான கஞ்சா இலைகளை பறித்து உபயோகித்து வந்துள்ளார். இந்த நிலையில் காவல் துறைக்கு இது குறித்து தகவல் வர, அவர்கள் வந்து மூர்த்தியை கைது செய்துள்ளனர்.

- Advertisement -

வழக்கறுத்தீஸ்வரர் கோவிலின் சிறப்புகள்:

பெரிய பெரிய வழக்குகளில் இருந்து விடுபட நினைப்பவர்கள் இந்த கோயிலிற்கு வந்து இறைவனை வணங்கி விளக்கேற்றி வழிபாட்டால் நிச்சயம் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்பது நம்பிக்கை. இதனால் இங்கு பெரிய பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் வழிபட்டு சென்றுள்ளனர். ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுபட தி.மு.க வை சேர்ந்த அரசியல் பிரபலங்கள் மற்றும் சொத்துகுவிப்பு வழிகில் இருந்து விடுபட அ.தி.மு.க சேர்ந்த அரசியல் பிரபலங்கள் என பல முக்கிய புள்ளிகள் இந்த கோயிலிற்கு வந்து வழிபட்டது குறிப்பிடதக்கது.

- Advertisement -