கண்ணகி பற்றிய வரலாறு [அ] சிலப்பதிகாரம் கதைச்சுருக்கம்

Kannagi
- Advertisement -

மதுரையை எரித்த கண்ணகி” என்று சிலப்பதிகாரத்தில் வரிகள் இடம் பெற்று இருக்கும் ஆம் சிலப்பதிகாரத்தின் தலைவன் தலைவி என்றால் அது கோவலனும் கண்ணகி மட்டுமே. கோவலனின் மனைவியான கண்ணகி அவளது சிறந்த ஒழுக்கத்தினாலும் மற்றும் கற்பின் இலக்கணமாகவும் பத்தினி பெண்களின் அடையாளமாக திகழ்ந்தவர்.

kannagi

ஒரு பெண்ணின் தைரியம், ஆற்றல், ஆளுமை மற்றும் திறன் ஆகிய மொத்த பண்பிற்கும் அடையாளமாக வாழ்ந்தவள் இந்த கண்ணகி. தனது ஆசை காதல் கணவன் தப்பே செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டதால் மதுரை முழுவதும் முற்றிலுமாக எரித்த கண்ணகி என காப்பியங்களில் அறியப்பட்ட கண்ணகி பற்றிய விவரங்களின் தொகுப்பே இந்த பதிவு.

- Advertisement -

ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானது இந்த சிலப்பதிகாரம் இதனை எழுதியவர் இளங்கோவடிகள். சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் சிலம்பின் மூலம் உருவான படைப்பு என்பதனால் இதற்கு சிலப்பதிகாரம் என்று பெயர் வந்தது.

கோவலன் கண்ணகி திருமணம் :

கோவலன் காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவானின் மகன் ஆவான். அவனது தந்தை பெரிய வணிகர் என்பதால் செல்வச்செழிப்பிற்கு குறைவில்லாமல் வளர்கிறான் கோவலன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாயகனின் மகள் கண்ணகி இவளும் நல்ல பொருளாதாரம் மிகுந்த ஒரு வீட்டிலே வளர்ந்தவள்.

- Advertisement -

இவர்கள் இருவருக்கும் இவர்களது பெற்றோர்கள் முடிவு செய்து திருமணத்தினை நடத்தி வைக்கின்றனர். இவர்களது திருமண வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருந்தது. அது இதுவரை என்றால் மாதவி கோவலனின் வாழ்வில் வராத வரையில். கோவலனின் வாழ்வில் மாதவி வந்ததும் அவன் கண்ணகி விட்டு விலகினான். அதுகுறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவினை படியுங்கள்.

கோவலன் தடம் மாறிய தருணம் :

- Advertisement -

கோவலன் கண்ணகி இருவரும் தங்களது இல்லற வாழ்வில் சந்தோஷமாகவே இருந்தனர். இருந்த போதும் கோவலன் சிறுவயது முதல் ஒரு இசை பிரியன் அவனுக்கு பல இசைக்கருவிகளை வாசிக்க கூட தெரியும். இசையினை மட்டுமல்லாது அவனுக்கு கலை என்றாலே பிடிக்கும். அதனால் இவனுக்கு அனைத்து கலைகளையும் ரசிக்கும் பழக்கமும் இருந்தது.

kannagi 1

இந்நிலையில் தான் கோவலன் ஒரு முறை பூம்புகாரில் ஒரு ஆடல் அரசி [நடனமாடுபவள்] மாதவி என்பவளை சந்திக்கிறான். அவளின் நடனம் கோவலனுக்கு பிடிக்கவே அவளுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டான். கோவலனின் ஆசைக்கு இணங்கிய மாதவி கோவலனுடன் ஒரே வீட்டில் இணைந்து வாழ ஆரம்பித்தாள்.

இந்தச்சமயத்தில் தான் கோவலன் கண்ணகியை விட்டு பிரிந்து வந்து மாதவியுடன் நிரந்தரமாக வாழ ஆரம்பித்தான். கண்ணகியோ தனது கணவன் தன்னை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணுடன் தன் கணவன் இருப்பதனை நினைத்து மிகுந்த வருத்தத்திற்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாகிறாள் .

தனது கணவன் பிரிந்து சென்றதும் அவனை பற்றி தப்பாக நினைக்காமல், யாரை பற்றியும் பழிகூற நினைக்காமல் எப்படி கோவலனுடன் நாம் ஒன்று சேர்வது என்று மட்டுமே கண்ணகி சிந்தித்தால்.

செல்வத்தினை இழந்த கோவலன் :

மாதவியுடன் ஒரே இல்லத்தில் தங்கி இருந்த கோவலன் மாதவி மீது தீரா மோகத்தில் இருந்தான். இதன் காரணமாக மாதவி எதை கேட்டாலும் தயங்காமல் அனைத்தையும் செய்தான். கோவலன் மாதவியுடன் இருக்கும் போது கோவலனுக்கு தனது சுயஅறிவு மங்கிய நிலையில் இருந்தான் என்றே கூறவேண்டும்.

kannagi 4

இதனை பயன்படுத்திய மாதவி கோவலனிடம் இருந்த செல்வங்க கொஞ்சம் கொஞ்சமாக வாங்கினால். கடைசியில் அனைத்து செல்வத்தினையும் மாதவியிடம் பறிகொடுத்தான் கோவலன். இந்நிலையில் மாதவி கோவலனனிடம் இருந்து சற்று விலக ஆரம்பித்தாள். இதனை நன்கு உணர்ந்து இருந்தான் கோவலன்.

மீண்டும் கண்ணகியுடன் இணைந்த கோவலன் :

செல்வத்தினை இழந்த சிறிது காலத்தில் கோவலனுக்கு மாதவி மீது இருந்த ஈர்ப்பு போக அவன் மீண்டும் கண்ணகியிடம் தஞ்சம் அடைந்தான். வேறொரு பெண்ணிடம் இருந்துவிட்டு தன்னிடம் மீண்டும் திரும்பி வந்த தன் கணவனை அவள் ஒரு வார்த்தை கூட நடந்தவைகளை பற்றி கேட்கவில்லை .

அந்த அளவிற்கு கோவலன் மீது கண்ணகி அன்பு வைத்திருந்தாள். தன் மனைவியிடம் திரும்பி வந்த கோவலன் அவளை பார்த்து மனம் நொந்தான் . மேலும் அவளது கைகளை பற்றி எனது முழு செல்வத்தினையும் நான் தற்போது இழந்துவிட்டேன். ஆகவே நாம் மதுரை சென்று செல்வத்தினை ஈட்டுவோம் என்று தன் மனைவியிடம் கண் கலங்கினான்.

இதனை கேட்ட கண்ணகி என்ன ஆனாலும் நான் உங்களுடன் தான் இருப்பேன். நீங்கள் எதற்கும் கவலை படவேண்டாம் என்று கூறி தனது கணவருடன் மதுரை நோக்கி புறப்பட்டாள்.

கண்ணகி காற்சிலம்பின் மதிப்பு :

கண்ணகியும் கோவலனும் மதுரை வந்து சேர்ந்தனர். ஆனால் அவர்களிடம் சுத்தமாக காசு இல்லை. எனவே தான் அணிந்து இருந்து மாணிக்கத்தால் ஆன காற்சிலம்பினை கோவலனிடம் கொடுத்து அதனை விற்று பணம் வாங்கி வரும்படி கூறினால். மாணிக்கத்தின் ஒரு கல்லே பல ஆயிரங்கள் போகும். அதிலும் கண்ணகி காலில் அணிந்து இருந்த சிலம்பு முழுவதும் மாணிக்கத்தால் ஆனவை. ஆகையால் அதன் விலைமதிப்பு கணக்கிடமுடியாத அளவிற்கு இருக்கும்.

kannagi 3

அந்த காற்சிலம்பினை எடுத்துக்கொண்டு அதனை விற்பதற்காக கடைவீதியினை நோக்கி நடந்தான் கோவலன்.

அரசியின் காற்சிலம்பினை திருடிய பொற்கொல்லன் :

அந்த சமயத்தில் மதுரையை ஆண்ட மன்னனின் மனைவியின் காற்சிலம்பினை அந்த அரசவை பொற்கொல்லன் திருடினான். அதே சமயத்தில் கோவலன் காற்சிலம்பினை விற்க கடைவீதியினை நோக்கி வந்ததால் இதனை தனக்கு சாதகமாக்கி அரசியின் காற்சிலம்பினை கோவலன் தான் திருடினான் என்று அரசரிடம் பொய் கூறினான்.

கோவலன் தண்டனையால் கொல்லப்படுதல் :

கோவலனை காற்சிலம்புடன் அரண்மனைக்கு அழைத்து வந்த அரண்மனை காவலாளிகள் கோவலனை அரசனின் முன்பு நிற்க வைத்தனர். அப்போது கோவலன் இந்த காற்சிலம்பு என் மனைவி கண்ணகி உடையது. நாங்கள் அனைத்து செல்வத்தினையும் இழந்து மனவருத்தத்தோடு எங்களது இடத்தில் இருந்து கிளம்பி செல்வம் ஈட்ட மதுரை வந்துள்ளோம். இந்த காற்சிலம்பு அரசியோடையது அல்ல என்று கூறினான்.

அதனை ஏற்க மறுத்த அரசன் விசாரணை ஏதும் செய்யாமல், அதிலுள்ள உண்மையினை ஆராயாமல் கோவலனை கொலை செய்யும்படி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பின்படி கோவலன் கொல்லப்பட்டான்.

கண்ணகியின் ருத்ர தாண்டவம் :

கோவலன் கொல்லப்பட்டதை அறிந்த கண்ணகியின் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. அதோடு கோவம் அனலாய் இருந்தது அவள் அக்னிகுழம்பு போன்று தன்னுடைய மற்றொரு காற்சிலம்பினை எடுத்துக்கொண்டு அரண்மனையினை நோக்கி விரைந்தாள்.

kannagi 2

அரசவை அடைந்த கண்ணகி அரசன் முன்பு நின்று எந்த விசாரணையும் இன்றி என் கணவனை கொன்றது தவறு என்று சீறினாள். மேலும் தனது மற்றொரு காற்சிலம்பினை உடைத்து அதில் மாணிக்க கற்கள் இருப்பதை அரசருக்கு காண்பித்தாள். அரசியின் காற்சிலம்பில் முத்துக்கள் மட்டுமே இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா..?

என் கணவன் கைகளில் இருந்த காற்சிலம்பினை கொண்டுவந்து உடைத்து பாருங்கள் அதில் மாணிக்க கற்களே இருக்கும் என்று தனது கோவத்தில் அரசனை நோக்கி முறையிட்டாள். பிறகு அவள் கூறியவாறே கோவலனின் கைகளில் இருந்த காற்சிலம்பினை உடைத்து பார்க்கையில் அதில் மாணிக்க கற்களே இருந்தன. இதனை கண்டு அரசனும் , அரசியும் அதிர்ச்சி அடைந்தனர்.

தான் தவறான தீர்ப்பினை வழங்கி விட்டேன் இப்போதே என் உயிர் பிரியட்டும் என்று கூறி கீழே விழுந்த மன்னர் இறந்தார். என் கணவன் இல்ல உலகில் நான் இருக்க கூடாது என்று அரசன் அருகில் விழுந்து அரசியும் தன் உயிரை விட்டாள்.

மதுரையை சாம்பலாக்கிய கண்ணகி :

அரசனும் அரசியும் இறந்தும் கண்ணகியின் கோவக்கனல் தனியவில்லை. கற்புக்கு பேர்போன பத்தினி என்பதனால் அவள் விடும் சாபம் பலிக்கும் என்பதனை அறிந்த கண்ணகி என் கணவருக்கு அநியாயம் இழைத்த இந்த மதுரை நகர் முழுவதும் தீக்கு இரையாகட்டும் இன்று சாபமிட்டாள்.

kannagi 5

பத்தினி விட்ட சாபம் பலித்தது அவளின் சொல்ப்படி மதுரை நகர் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.

மீண்டும் கோவலனிடம் சென்ற கண்ணகி :

மதுரையை எரித்துவிட்டு அழுதுகொண்டே சித்தபிரம்மை இல்லாதவள் போன்று நடக்க ஆரம்பித்த கண்ணகி நடந்து நடந்து அவளது தாமரை பொற்பாதங்கள் முழுதும் குருதியில் நனைந்தன. கடைசியில் தற்போதைய கேரளா மாநிலத்தின் ஒரு பகுதியான “இடுக்கி” என்கின்ற மலை பிரதேசத்தினை அடைந்தாள்.

அங்கு குறவர்களிடம் தனக்கு நடந்த அநீதியினை கூறி அழுதாள். மேலும் சில காலம் அவர்களுடனே இருந்து தன் மரணத்திற்காக காத்திருந்தாள். அப்போது ஒரு நாள் தேவர் உலகில் இருந்து நிலவின் வழியே கோவலன் வந்து கண்ணகியை அங்கிருந்து கூட்டிச்சென்றதாக ஒரு குறிப்புள்ளது.

மேலும் கோவலன் கண்ணகியை மீட்டு சென்ற இடத்தில் இன்றளவும் ஒரு கோவில் உள்ளது அதில் கடவுள்களாக கோவலனும் கண்ணகியும் இருக்கின்றனர். வருடத்திற்கு ஒருமுறை வரும் சித்திரா பௌர்ணமி அன்று மட்டுமே இங்கு இவர்களை தரிசிக்க மக்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.

English Overview:
Here we have Kannagi biography in Tamil. Above we have Kannaki history in Tamil. We can also say it as Kannagi varalaru in Tamil or Kannaki essay in Tamil or Kannagi Katturai in Tamil.

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

- Advertisement -