கன்னி ராசியினர் செய்ய வேண்டிய பொதுவான பரிகாரங்கள்

ஒரு மனிதன் பிற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி அறியப்படுவதற்கு காரணம் அவனது சிந்தனை ஆற்றல் தான். ஜோதிட விஞ்ஞானத்தின் படி மனிதனை விண்ணில் இருக்கும் நவகிரகங்கள் கட்டுப்படுத்துகின்றன. இதில் மனிதனின் சிந்தனை திறனுக்கு காரணமான கிரகமாக புதன் கிரகம் இருக்கிறது. 12 ராசிகளில் மிதுனம் மற்றும் கன்னி ராசிகள் புதனின் ஆதிக்கம் கொண்ட ராசிகளாகும். இதில் “கன்னி ராசி” குறித்தும், கன்னி ராசியினரின் வாழ்வு சிறக்க அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

ஜோதிடத்தில் கூறப்படும் 12 ராசிகளில் ஆறாவது ராசியாக வருவது கன்னி ராசியாகும். கன்னி ராசியை ஆளும் கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம் தான் பெருமாள் வழிபாடுகள் மற்றும் விரதம் மேற்கொள்ளும் “புரட்டாசி” மாதமாக இருக்கிறது. இயற்கையிலேயே சிறந்த அறிவாற்றலும், பல கலைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வமும் திறனும் கொண்ட கன்னி ராசியினர் தங்களின் வாழ்வில் பாதகமான அம்சங்கள் நீங்கி, பல அதிர்ஷ்டங்களும் நன்மைகளும் ஏற்பட கீழ்க்கண்ட பரிகாரங்களை தங்கள் வாழ்வில் செய்து வந்தால் சிறப்பான பலன்களை தரும்.

ஜோதிட ரீதியாக பார்க்கும் போது “கன்னி” ராசி புதன் பகவானுக்குரிய ராசியாக இருக்கிறது. புதன் பகவானின் அம்சம் கொண்டவராக இருப்பவர் பெருமாள் ஆவார். எனவே கன்னி ராசியினர் தங்களின் வாழ்வில் பல நல்ல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் பெறுவதற்கு ஒவ்வொரு புதன்கிழமைகளில் புதனின் அம்சமாக இருக்கும் பெருமாள் கோயில்களுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலைகளை சாற்றி,நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் பொருளாதார ரீதியில் சிறந்த ஏற்றங்களை பெறலாம். வெள்ளியில் “மரகதம்” கல்லை பதித்து, வலது கை மோதிர விரலில் புதன் கிழமையன்று புதன் ஹோரையில் அணிந்து கொள்வது சிறப்பு.

அதே புதன் கிழமைகளில் நவகிரகங்களில் புதன் பகவானுக்கு சிறிது பச்சை பயறுகளை சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது புதனின் அருட்கடாட்சம் உங்களுக்கு உண்டாகும். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இளம் பச்சை நிற ஆடைகளை அணிந்து கொள்வது அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகங்கள் போன்றவற்றை வாங்கி தருவது கன்னி ராசியினருக்கான சிறந்த பரிகாரமாகும். திருமணம் ஆன வசதி குறைந்த ஏழை பெண்களுக்கு மூக்குத்தி தானம் அளிப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே:
குழந்தைகள் உடல்நலத்தோடு இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kanni rasi pariharam in Tamil. It is also called Kanni rasi in Tamil or Jothida rasi pariharam Tamil or Rasi pariharam in Tamil or  Kanni rasi kal in Tamil.