கண் திருஷ்டியை கண்ணிமைக்கும் நேரத்தில் போக்கக் கூடிய சக்தி இந்த ஒரு கற்பூரத்திற்கு உள்ளது. இந்த கற்பூரத்தை பற்றி இதுநாள்வரை உங்களுக்கு தெரியாதா?

amman
- Advertisement -

கண் திருஷ்டிகளில் பல வகை உண்டு. அடுத்தவர்கள் நம்மை பார்க்கும் பார்வையானது சில சமயம் நமக்கு ஆசீர்வாதத்தை தரும். சில சமயம் அதுவே கண் திருஷ்டியாக மாறும். சில பூஜை புனஸ்காரங்களை நம் வீட்டில் வைத்தால், நம் சொந்த பந்தம், உற்றார் உறவினர்கள் இவர்களை அழைத்து செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். பூஜை புனஸ்காரங்கள் என்றாலே, எல்லோரும் ஒன்று கூடி செய்ய வேண்டியது அவசியமான ஒன்றுதானே! நம் வீட்டில் வைக்கக் கூடிய, இப்படிப்பட்ட பூஜைக்காக வருகைதரும் நம்முடைய உறவினர்கள், மூத்தவர்கள், வயது முடிந்தவர்கள் நம்மை ஆசிர்வாதம் செய்து வாழ்த்தினால், அது நமக்கு நன்மையைத் தரக்கூடியதாக அமையும்.

Thirusti

இதுவே, நம்முடைய வீட்டிற்கு வருகை தருபவர்கள், இப்படி ஒரு பூஜை வழிபாட்டு முறைகளை நம் வீட்டில் செய்ய முடியவில்லையே, இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை நம்மால் வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்தை அவர்கள் மனதில் விதைத்து கொண்டால், அதுவே நமக்கும் பேராபத்தாக மாறிவிடும். ஒரே விஷயத்தின் மூலம், நமக்கு நன்மையும் நடக்கும். தீமையும் நடக்கும்.

- Advertisement -

நல்ல விசேஷங்கள் நடந்து முடிந்த பின், ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பதற்கு காரணம் கூட இதுதான். நம்முடைய உறவினர்களின் மூத்தவர்களின் ஆசீர்வாதமும் நமக்கு தேவை, அதே சமயம் எதிர்மறை எண்ணம் கொண்டவர்களின், திருஷ்டியும் நம்மை பாதிக்க கூடாது. இதற்கு சுலபமான முறையில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பரிகாரத்திற்கு கரித்துண்டு, கோமியம், கட்டி கற்பூரம் இந்த மூன்று பொருட்களும் தேவை. மெழுகு கற்பூரம் வாங்க வேண்டாம். நாட்டு மருந்து கடைகளில் விற்கும் பெரிய கற்பூரத்தை வாங்கிக்கொள்ளுங்கள். மெழுகு கற்பூரத்தை வாங்குவதை விட, இந்த கற்பூரம் வாங்குவதற்கு விலை கொஞ்சம் கூடுதலாக தான் செலவாகும். இருப்பினும் கட்டி கற்பூரம் திருஷ்டி கழிப்பதற்கு சிறந்தது.

- Advertisement -

கரித்துண்டு இப்போது கடைகளில் விற்கின்றது. அந்த கரித்துண்டு ஒரு 100 கிராம் அளவு நம்முடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அதிலிருந்து ஒரு துண்டை மட்டும் எடுத்து கோமியத்தில் நினைத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு அந்த கரித்துண்டை, நன்றாக தூள் செய்து விட்டு வெயிலில் உலர வைத்து, ஒரு தாம்பாளத் தட்டில் கொட்டி, உங்களுக்கு தெரிந்த அம்மனுடைய பெயரை சொல்லி அந்த கரித்துண்டுக்கும் சக்தியை கொண்டு வர வேண்டும்.

இதற்கு பெரிய கஷ்டம் எல்லாம் ஒன்றும் வேண்டாம். உங்களது வலது கையை அந்த கரி துண்டில் தொடும்படி வைத்துக் கொண்டு, உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் அம்மனின் பெயரை 11 முறை உச்சரித்தாலே போதும். ‘ஓம் துர்க்கா தேவியே போற்றி’ ‘ஓம் சக்தியே போற்றி’ இப்படியாக எந்த மந்திரமாக இருந்தாலும் அதை 11 முறை சொல்லி விடுங்கள். அந்த கரி தூலுக்கு ஒரு சக்தி கிடைத்துவிடும். அதன்பின்பு, இதை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

pasu-komiyam

இப்போது கட்டி கற்பூரத்தை இந்தத் தூளில் பிரட்டி எடுத்தீர்கள் என்றால், இந்த கரி அனைத்தும் அந்த கற்பூரத்தில் ஒட்டிக்கொள்ளும். பின்பு அந்த கற்பூரத்தை பயன்படுத்தி நீங்கள் திருஷ்டி கழித்தால், உங்கள் மேல் பட்ட திரட்டிகள் அனைத்தும், அந்த நெருப்பில் பஸ்பமாகிவிடும் என்பதில் சந்தேகமே கிடையாது.

sudam

திருஷ்டி கழித்து எறிகின்ற இந்த கற்பூரத்தை வாசல் படிக்கு வெளியில் கொண்டுபோய் தான் கொட்ட வேண்டும் என்று சொல்வார்கள். இன்றைய சூழ்நிலையில் நிறைய பேர் ஃப்ளாட்டில் குடியிருக்கிறார்கள். இவர்களால் வீதியில் கொண்டு வந்து எறிகின்ற கற்பூரத்தை கொட்ட முடியாத நிலை. முடிந்தால் பால்கனியில் கொட்டலாம். முடியாதவர்கள் குளியலறையில் எறிகின்ற கற்பூரத்தை போட்டு, அது எறிந்த பின்பு அந்த இடத்தை சுத்தம் செய்து விடலாம். தீராத கண் திருஷ்டியால் உடல் உபாதைகள் இருந்தால் கூட, அது இந்த கற்பூர நெருப்பில் பொசுக்கி விடும். குறிப்பாக, குழந்தைகள் அழுது கொண்டே இருந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில், சமையல் செய்யும் அடுப்புக்கு பக்கத்திலேயே, பாத்திரம் தேய்க்கும் சிங்க் உள்ளதா? அப்படின்னா, நீங்க கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பதிவு!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -