உங்கள் வீட்டில், சமையல் செய்யும் அடுப்புக்கு பக்கத்திலேயே, பாத்திரம் தேய்க்கும் சிங்க் உள்ளதா? அப்படின்னா, நீங்க கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த பதிவு!

kitchen
- Advertisement -

வாஸ்து என்ற ஒரு வார்த்தை, பலபேர் வாழ்க்கையில் பல வகையான நன்மையைத் தரும் ஒரு விஷயம். அதோடு சேர்த்து, சில கஷ்டங்களை கொடுப்பதும் அந்த வாஸ்து தான். நமக்கு நேரம் நன்றாக இருக்கும் வரை, எந்த ஒரு வாஸ்துவும் எந்த ஒரு தோஷமும், நம்மை ஒன்றும் செய்யாது. அந்த நல்ல நேரம் எப்போது கெட்ட நேரமாக மாறுகிறதோ, அப்போதே பிரச்சனையும் தொடங்கிவிடும். அந்த வரிசையில் உங்களுடைய வீட்டில் வரக்கூடிய பிரச்சினைக்கு, இந்த சின்ன விஷயம் கூடவா, காரணமாக இருக்கும்? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு சின்ன விஷயத்தைப் பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kitchen2

சில பேர் வாடகை வீட்டில் நன்றாக இருந்திருப்பார்கள். சிலபேர் ஒரு வாடகை வீட்டில் நன்றாக இருந்திருப்பார்கள், வீடு மாற வேண்டிய சூழ்நிலை, மற்றொரு வாடகை வீட்டிற்கு சென்றவுடன், அவர்களுக்கு இருந்துவந்த ராசி போயிருக்கும். இப்படியாக நீங்கள் சொந்த வீட்டில் வசிப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி, அல்லது வாடகை வீட்டில் வசிப்பவர்கள் ஆக இருந்தாலும் சரி, இடமாற்றத்திற்கு பின்பு உங்களுக்கு பிரச்சனைகள் வந்திருந்தாலும் அல்லது நீங்கள் இருக்கின்ற வீட்டிலேயே உங்களுக்கு பிரச்சனை இருந்தாலும், அந்தப் பிரச்சினைக்கு உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த அமைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

- Advertisement -

அதாவது, சில பேர் வீடுகளில் அடுப்புக்கு பக்கத்திலேயே பாத்திரம் தேய்க்கும் சிங்கை அமைத்து வைத்திருப்பார்கள். இந்த அமைப்பு சிலருக்கு ஒத்து வராது. நீரும் நெருப்பும் ஒருசேர இருக்கும்பட்சத்தில், அந்த வீட்டில் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டு, எதிர்மறை ஆற்றலின் மூலமாக சில பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை, அம்மா மகன், மகள்களுக்கிடையே பிரச்சனை, மாமியார் மருமகள் பிரச்சனை இப்படிப்பட்ட உறவுகளுக்கிடையே பெரிய விரிசலை உண்டாக்கி விடும்.

kitchen1

எல்லோருக்கும் சிங்கும் அடுப்பும் பக்கத்தில் இருந்தால் பிரச்சனைகள் வரும் என்று சொல்லப்படவில்லை. சில பேருக்கு இந்த வாஸ்து சரிப்பட்டு வராது. உங்களுடைய வீட்டில் கடன் பிரச்சனை நிம்மதியற்ற சூழ்நிலை இருந்து வந்தால், இந்த அடுப்புக்கும், சிங்குக்கும் நடுவில் கொஞ்சம் இடைவெளி இருக்கும் அல்லவா? அந்த இடத்தில் மரத்தால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு ஸ்டாண்ட் அல்லது பலகையை வைத்து விடுங்கள்.

- Advertisement -

நீங்கள் பழைய வீட்டில் இருக்கும்போது உங்களுடைய அடுப்பும், சிங்கும் அருகில் இல்லாமல் இருந்திருக்கலாம். புது வீட்டிற்கு குடியேறிய பின்பு அடுப்பும், சிங்கும் அருகில் இருக்கும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பித்திருக்கின்றது, எனும் பட்சத்தில் நீங்கள் இந்த சின்ன டிப்சை ஃபாலோ பண்ணி பாருங்க! கட்டாயம் வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சனைகள் குறையும்.

burma-teak-wood

நிறைய பேர் வாடகை வீட்டில் இருந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து இருப்பார்கள். சொந்த வீட்டிற்கு சென்ற பின்பு அந்த நிம்மதியானது ஒரு துளி கூட இல்லாமல் போயிருக்கும். ‘ஏன்தான் இந்த வீட்டைக் கட்டி குடி வந்தோமோ’ என்ற அளவிற்கு, அவர்கள் வீட்டில் பிரச்சனையானது தலைவிரித்தாடும். இப்படியாக உங்களுடைய வீட்டில் என்னதான் வாஸ்து பிரச்சனை என்றே தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை.

- Advertisement -

pournami

நிறைந்த பவுர்ணமி தினத்தில், உங்களுடைய குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு, உங்கள் வீட்டில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து, வாஸ்து பகவானையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்கள் நில வாசல் படியின் வெளி பக்கத்தில், ஒரு அகல் தீபத்தை வைத்து, அதில் பெரிய கட்டி கற்பூரத்தை வைத்து, அந்த கற்பூரத்தையும் ஏற்றி குலதெய்வத்தை வேண்டி வாஸ்து பகவானை வேண்டி ‘நான் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நான் செய்த தவறுகள் எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய குடும்பத்தை பாதித்து விடக்கூடாது என்று வேண்டிக் கொண்டு’ மீண்டும் வீட்டிற்குள் சென்று, உங்கள் வீட்டு பூஜை அறையில் தீப தூப ஆராதனை காட்டி குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

deepam

வீட்டிற்குள் வந்து உங்களது பூஜையை நிறைவு செய்யும்வரை உங்கள் வீட்டு வாசலில் இருக்கக்கூடிய கற்பூரம் எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த சின்ன பரிகாரம், உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு கட்டாயம் நிச்சயம் கூடிய விரைவில் விடிவுகாலம் பிறக்க வழிவகுக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வியாழன் கிழமை ‘குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு’ செய்து வர கிடைக்கும் அதிசய பலன்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -