காரச் சட்னியில், கொஞ்சம் வித்தியாசமாக இந்த 1 பொருளை சேர்த்து அரைச்சி பாருங்களேன்! ரோட்டுக்கடை சட்னியோட டேஸ்ட் கட்டாயம் கிடைக்கும்.

tomato-chutney

அவரவருடைய இடத்திற்கு தகுந்தவாறு கார சட்னியில் சேர்க்கப்படும் பொருட்கள் விதவிதமாக மாறுபடும். அதாவது ஊருக்கு ஒரு கார சட்னிங்க! அந்த வரிசையில் இன்றைக்கு ஒரு வித்தியாசமான காரச் சட்னியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக வெங்காயம் தக்காளி வரமிளகாயை வைத்து அரைக்கக்கூடிய காரச்சட்னி தான் இது. ஆனால் கொஞ்சம் வித்தியாசமானது. தேங்காய் சேர்க்கப்போடுவது கிடையாது. இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். இந்த புதுவிதமான கார சட்னி எப்படி செய்வது? வாங்க ரெசிபியை பார்த்திடலாம்.

chinna-vengayam

சின்ன வெங்காயம் – 15 லிருந்து 20, வெள்ளைப்பூண்டு – 7 லிருந்து 10 தோல் உரித்தது, வரமிளகாய் – 2 அல்லது 3 (காரத்திற்கு ஏற்ப), கருவேப்பிலை – 1 கொத்து, மீடியம் சைஸ் தக்காளி – 1, ஒரு பின்ச் அளவு புளி, பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன். தேவையான அளவு உப்பு. இந்த கார சட்னிக்கு தேவையான பொருட்கள் இவ்வளவு தான்.

முதலில் அடுப்பில் கடாயை வைத்து, 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயத்தைப் போட்டு கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி விட்டு, அதன் பின்பு பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்தபடியாகத்தான் வர மிளகாயையும், கருவேப்பிலையும் சேர்த்து மொத்தமாக வதக்கி இதை அப்படியே மிக்சி ஜாரில் மாற்றிக்கொள்ளுங்கள்.

அதே கடாயில் 1 தக்காளியை இரண்டாக வெட்டி போட்டு, வதக்க வேண்டும். தக்காளி தொக்கு பதத்திற்கு வதக்கி விடக்கூடாது. தோல் சுருங்கி வரும் அளவிற்கு, தக்காளியின் பச்சை வாடை போகும் அளவிற்கு மட்டுமே வதக்கினால் போதும். இந்த தக்காளியையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

இறுதியாக ஒரு பின்ச் அளவு புளியை எடுத்து மிக்சி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். இதன் சுவையை இன்னும் அதிகபடியாக கூட்டுவதற்கு, இறுதியாக 2 ஸ்பூன் அளவு பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். சட்னி தயாராகிவிட்டது.

pottu-kadalai

நிறைய பேர் காரச்சட்னிக்கு  பொட்டுக்கடலை சேர்க்க மாட்டார்கள். ஆனால் இந்த சட்னியின் ஸ்பெஷாலிட்டி பொட்டுகடலை தான். ஒருமுறை பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து பாருங்கள். இறுதியாக இந்த சட்னிக்கு 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில், கடுகு, கறிவேப்பிலை பெருங்காயம், தாளித்து கொட்டி பரிமாறினால் சூப்பரான கமகமக்கும் காரச் சட்னி ரெடி! உங்களுக்கு பிடிச்சிருக்கா நாளைக்கு ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
எவ்வளவோ ட்ரை பண்ணாலும் பூரி மட்டும் ஹோட்டலில் செய்வது போல் புஸ்சுன்னு வரலையா? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.