வீட்டில் போர் அடிக்கும் நேரங்களில் சாப்பிடும் இந்த சுவையான காரா சேவினை இனி கடைகளில் வாங்காமல் எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். தயங்காமல் நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள் கடையில் வாங்கும் சுவையைப் போன்று அப்படியே இருக்கும்

karasev
- Advertisement -

என்னதான் வீட்டில் மூன்று வேளை உணவு சமைத்து சாப்பிட்டாலும் மாலை நேரத்தில் ஏதேனும் வித்தியாசமாக சாப்பிட வேண்டும் போல் தோன்றும். அதுவும் தேநீர் குடிக்கும் சமயங்களில் அதனுடன் சேர்த்து சாப்பிட கர முரவென காரமாக ஏதேனும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இதற்காக நினைத்த நேரத்தில் எல்லாம் கடைகளுக்குச் சென்று தின்பண்டங்களை வாங்கி கொண்டு வர முடியாது. எனவே மாலைப் பொழுதில் சுவையாக சாப்பிடுவதற்கு ஏற்ற இந்த கார சேவினை எப்படி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

tea-making3

தேவையான பொருட்கள்:
கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை, சோடா உப்பு – ஒரு சிட்டிகை, மிளகு – ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை சல்லடை கொண்டு நன்றாக சலித்து வைத்து கொள்ளவேண்டும். அதன் பின்னர் ஒரு ஸ்பூன் மிளகை மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசாக பொடித்துக் கொள்ள வேண்டும்.

arisimavu

பின்னர் ஒரு கிண்ணத்தில் கடலைமாவு, அரிசிமாவு சேர்த்து அதனுடன் 2 சிட்டிகை பெருங்காயத்தூள், ஒரு சிட்டிகை சோடா உப்பு, அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் பொடித்து வைத்துள்ள மிளகு தூள் இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

அதன் பின்னர் இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியான பதத்திற்கு கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு மூடி போட்டு 5 லிருந்து 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும்.

ribben-pakoda-mavu

பிறகு அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் வீட்டில் நாம் எப்போதும் பயன்படுத்தும் ஜார்னி கரண்டியை உபயோகித்து காராசேவை பொரித்து எடுக்க வேண்டும்.

கடாயின் மேற்பகுதியில் எண்ணெய் மேலே தெரித்து விடாத தூரத்தில் ஜார்னி கரண்டியைப் பிடித்துக்கொண்டு, கலந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, கரண்டியின் மீது வைத்து நன்றாக தேய்த்து விட்டால் கரண்டியில் இருக்கும் ஓட்டை வழியே சற்று நீள நீளமாக மாவு வெளியேறி எண்ணெயில் விழும். பிறகு இவை சிறிது நேரம் எண்ணெயில் நன்றாக சிவந்து பொன்னிறமாக மாறியதும் இன்னொரு ஜார்னி கரண்டியை வைத்து எண்ணெயை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

jarni

இதேபோன்று மீதமுள்ள மாவு அனைத்தையும் ஜார்னி கரண்டியின் மீது வைத்து தேய்த்து காராசேவை செய்து எடுக்க வேண்டும். அதன் பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்து காராசேவின் மீது தூவி விட்டால் போதும். கடையில் வாங்கும் சுவையிலேயே அசத்தலான காராசேவ் தயாராகிவிடும். இதை சுட சுட செய்து மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -