கரப்பான் பூச்சி தொல்லையை கண்ட்ரோலுக்கு கொண்டுவர இப்படியும் கூட ஒரு ஐடியா இருக்கா? இத்தனை நாளா இந்த ஈஸி டிப்ஸ் தெரியாமல் போச்சே.

- Advertisement -

சமையலறையிலும், நம்முடைய வீட்டிலும் சுற்றி திரிந்து தொல்லை கொடுக்கும் இந்த கரப்பான் பூச்சிகளை விரட்டி அடிக்க ஏராளமான ஐடியாக்கள் உள்ளது. ஆனால் அந்த ஐடியாக்களில் நமக்கு எது சௌகரியமாக இருக்கும் என்று நாம் தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். சில பேருக்கு கெமிக்கல் கலந்த ஹிட் ஒத்து வராது. சில பேருக்கு கெமிக்கல் கலந்த பொருட்களை எல்லாம் சமையல் அறையில் பயன்படுத்த பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் இந்த எளிமையான வீட்டு குறிப்பு பின்பற்றி பார்க்கலாம்.

இந்த எளிமையான குறிப்புக்கு நமக்கு வெறும் 2 பொருட்கள் தான் தேவை. அதுவும் காசு கொடுத்து கடையில் வாங்க வேண்டாம். நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது. அந்த இரண்டு பொருட்களை வைத்து கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து எப்படி விடுபடலாம் என்பதைப் பற்றியும், அதோடு சேர்த்து இன்னும் பல பயனுள்ள வீட்டு குறிப்புகளையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட எளிய வீட்டு குறிப்பு:
இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் அந்த 2 பொருள் என்ன தெரியுமா. ஆப்ப சோடா மாவு, முகத்துக்கு போடும் பவுடர். ஒரு சிறிய கிண்ணத்தில் ஆப்ப சோடா மாவு 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டால், அதே 2 ஸ்பூன் அளவு முகத்துக்கு போடும் பவுடரையும் போட்டு, இரண்டு பவுடரையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். நமக்கு தேவையான பூச்சி விரட்டி பொடி தயாராகிவிட்டது.

cockroach1

ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பொடியை கொஞ்சமாக அந்த டிஷ்யூ பேப்பரில் வைத்து நான்காக மடித்து ரப்பர் பேண்ட் போட்டு அதை அப்படியே பீரோவில் துணி மணிக்கு இடையே வைக்கலாம். ஷூ அடுக்கி வைத்திருக்கும் ரேக்கில் வைக்கலாம். கபோடில் மற்ற பொருட்களை அடுக்கி வைத்திருக்கும் இடங்களில் வைக்கலாம். இந்த பொடி எந்த இடத்தில் எல்லாம் இருக்கிறதோ அந்த இடத்தில் துர்நாற்றம் வீசாது. சின்ன சின்ன பூச்சிகள் தொந்தரவு இருக்காது.

- Advertisement -

சில பயன்படுத்தாத பொருட்களை அட்டை பட்டியல் போட்டு ஸ்டோர் செய்து வைத்திருப்பீர்கள் அல்லவா. அதன் உள்ளே கூட நீங்கள் தயார் செய்த இந்த பொட்டலத்தை போட்டு வைக்கலாம். மூடி இருக்கும் பொருட்களை திடீரென்று துறந்தால் அதன் உள்ளே துர்நாற்றம் வீசாமல் பாதுகாக்க இந்த பொட்டலங்கள் நமக்கு உதவியாக இருக்கும். (பூச்சி உருண்டைக்கு பதிலாக நாம் தயார் செய்த இந்த பொட்டலங்களை பயன்படுத்தி பாருங்கள்.)

சிங்குக்கு அடியில் நாம் தயார் செய்த இந்த பொட்டலத்தை போட்டு வைத்தால், கரப்பான் பூச்சி தொல்லை இருக்காது. உங்களுடைய வீட்டில் கட்டுக்கு அடங்காத கரப்பான் பூச்சியின் தொல்லை இருந்தால், இந்த பொடியை அப்படியே எடுத்து சிங்குக்கு அடியில் தூவி வையுங்கள். இரவு தூங்க செல்வதற்கு முன்பு சிங்க் ஓட்டையில் இந்த பொடியை தூவி விட்டு செல்லுங்கள். நிச்சயம் இரவு வீட்டிற்குள் கரப்பான் பூச்சிகள் நுழையாது. அப்படியே ஓரிரு கரப்பான் பூச்சிகள் சிங்க் சாக்கடை வழியாக சமையலறைக்குள் நுழைந்தாலும் அது மயங்கி செத்துப் போய்விடும்.

இதையும் படிக்கலாமே: அசைவ சுவையில் வித்தியாசமான சைவ உருண்டையை இவ்வளவு சுவையாக கூட செய்யலாம் தெரியுமா? அசைவ கோலா உருண்டையே தோற்றுப் போகும் அளவிற்கு ஒரு சூப்பரான வாழைக்காய் கோலா உருண்டை ரெசிபி இதோ உங்களுக்காக.

அடுத்து இந்த பொடியை சுத்தம் செய்யக் கூட பயன்படுத்தலாம். பேக்கிங் சோடா, பவுடர் இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்திருக்கிறோம் அல்லவா, அந்த கலவையை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கரைத்து ஸ்பிரே போல தயார் செய்து, ஒரு வாட்டர் கேனில் ஊற்றிக் கொள்ளுங்கள். அல்லது ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளுங்கள். இந்த ஸ்ப்ரேவை வைத்து உங்கள் வீட்டு சமையல் மேடை டயல்ஸ், ஸ்டவ், இவைகளை துடைத்தாலும் உடனடியாக அந்த இடத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கிவிடும். சமைத்த வாடையெல்லாம் நீங்கிவிடும். குறிப்பாக அசைவம் சமைத்தால் அந்த இடத்தில் இருக்கும் அசைவம் வாடை முழுமையாக நீங்க இந்த லிக்யூடை வைத்து சமையல் அறையை சுத்தம் செய்யலாம். இதோட மட்டுமல்லாமல் வீட்டில் முகம் பார்க்க வைத்திருக்கும் சின்ன கண்ணாடி, பெரிய கண்ணாடி பிரிட்ஜுக்கு மேல் பகுதி இப்படிப்பட்ட இடத்தை எல்லாம் இந்த லிக்விடை வைத்து துடைத்தால் பளிச்சென மாறிடும். வெறும் இரண்டு பொருள்கள். பல வகையான உபயோகங்கள். எளிமையான செலவில்லாத வீட்டு குறிப்பு தானே இது. உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -