- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்வீட்டில் கரப்பான், எறும்பு, ஈக்கள் தொல்லை போக

வீட்டில் கரப்பான், எறும்பு, ஈக்கள் தொல்லை போக

- Advertisement -

வீட்டில் கொஞ்சம் ஈரப்பதம் மற்றும் ஓட்டைகள் இருந்தால் போதும் அழையா விருந்தாளியாக உடனே நுழைந்து கொள்ளும் இந்த ஈக்களும், எறும்புகளும்! ஈ, எறும்புகளை கூட சமாளித்து விடலாம், இந்த கரப்பான் பூச்சிகளை சமாளிப்பது தான் சவாலாக இருக்கும். இவற்றில் இருந்து எளிதாக தப்பிக்க என்ன செய்வது? என்பதை பற்றிய தகவல்களை தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

இரவு படுக்கும் பொழுது எப்பொழுதும் வீட்டை ஈரப்பதம் இல்லாமல், காற்றோட்டமாக வைத்துக் கொள்ளுங்கள். ஈரப்பதம் தேடி தான் எறும்புகளும், கரப்பான்களும் உள்ளே நுழைகின்றன. ஆங்காங்கே தண்ணீரை தேங்க விடுவது, கசிய விடுவது போன்ற செயல்களை செய்யாதீர்கள். குறிப்பாக சமையல் கட்டில் ஈர துணிகளை வைக்காதீர்கள். கழுவாத பாத்திரங்களை இரவு நேரங்களில் போட்டு வைக்காதீர்கள்.

- Advertisement -

சுத்தம் இல்லாத வீட்டில் தான் சுதந்திரமாக சுற்றி திரியும் இவைகள்! பாத்திரம் கழுவும் இடங்களில் சிறு சிறு ஓட்டைகள் இருந்தால் முதலில் சிமெண்ட் அல்லது எம்சீல் கொண்டு ஓட்டையை சரி செய்யுங்கள். பிறகு ஆன்ட்டி செப்டிக்காக செயல்படக் கூடிய போரிக் ஆசிட் பவுடர் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். போரிக் ஆசிட் பவுடர் சிறியது 20 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கும். இதை பயன்படுத்தும் பொழுது கட்டாயம் கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள்.

அரை கப் கோதுமை மாவுடன், போரிக் ஆசிட் பவுடரை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள். கெட்டியான இந்த உருண்டைகளை கரப்பான் வரும் இடங்களில் எல்லாம் போட்டு வையுங்கள். குறிப்பாக சமையல் கட்டில் பாத்திரம் கழுவும் பேஷனுக்கு கீழே இரண்டு பால்களை போட்டு வையுங்கள். இதை சாப்பிட வரும் கரப்பான்கள் சாப்பிட்டு விட்டு அங்கேயே செத்து மடிந்து விடும், காலையில் எடுத்து அள்ளிப் போட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

ரெண்டு ஸ்பூன் சர்க்கரையை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கொஞ்சம் தண்ணீரும், ஒரு ஸ்பூன் போரிக் ஆசிடும் போட்டு கலந்து சொல்யூஷன் போல தயாரித்துக் கொள்ளுங்கள். பின்னர் கொஞ்சம் பஞ்சை எடுத்து சிறு சிறு பிரிவுகளாக பிரித்து இந்த சொல்யூஷனில் நன்கு நனைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த காட்டன் பந்துகளை எறும்பு வரும் இடங்களில் வைத்து விட்டால் போதும், சர்க்கரைக்கு ஆசைப்பட்டு எறும்பு இதில் வாயை வைத்தால், அங்கேயே மயங்கி விழுந்துவிடும்.

அடுத்ததாக ஈக்களை விரட்ட முதலில் பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய எலுமிச்சை தோல்களை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்துள்ள எலுமிச்சை தோல்களுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். கொதிக்க வைத்த தண்ணீரை நன்கு ஆற விட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் நாம் தலைவலிக்கு பயன்படுத்தக் கூடிய விக்ஸ் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் போரிக் ஆசிட் பவுடரையும் சேர்த்து ஒருமுறை கலந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஈக்கள் வரும் பொழுது ஈக்கள் வரும் இடங்களில் லேசாக ஸ்ப்ரே செய்து விட்டால் போதும், ஒரு ஈ கூட அங்கு தங்காது.

இதையும் படிக்கலாமே:
வீடு, வாகன யோகம் பெற பரிகாரம்

குறிப்பு:

போரிக் ஆசிட் பவுடர் பயன்படுத்தும் பொழுது குழந்தைகளிடமிருந்து எச்சரிக்கையாக பாதுகாப்பான இடத்தில் தள்ளி வையுங்கள்.

சற்று முன்